For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சீரியல் பரிதாபங்கள்..வெடிகுண்டை கண்டுபிடிக்க செல்போன் செயலியாம்..எதற்கும் ஒரு அளவு வேண்டாமா?

  |

  சென்னை: சீரியல்களில் கதாசிரியர்கள், இயக்குநர்களின் ரீல் தாங்க முடியாத அளவுக்கு போவதால் சீரியல் பரிதாபங்களை எழுதும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விமர்சனம் இனி அடிக்கடி வரும்.

  Tv Serial woes..cell phone app to find bomb..dont need a measure for telling myths?

  சீரியல்கள் கற்பனை எல்லையின் வேகம் ஒளி ஆண்டுகளை விட வேகத்தில் பயணிக்கிறது. விவேக் பாணியில் சொல்வதென்றால் சீரியல்னா ஒரு அளவுக்கு புளுகலாம் இப்படியா ஒருகூடை பூவை காதில் வைப்பீர்கள், இதெல்லாம் அடுக்குமாடா, என கேட்க தோன்றுகிறது.

  இவர்கள் எப்படி இப்படி கற்பனை செய்கிறார்கள் இந்த உலகத்தில் தான் இருக்கிறார்களா? பார்க்கும் இல்லத்தரசிகளின் அறிவு பற்றி என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது புரியாத புதிர்.

  தெருக்கூத்து, மேடை நாடகம், திரைப்படம், சீரியல், மெகா சீரியல் என கலை பல வடிவங்களை நோக்கி நகர்கிறது. பலருக்கு பொழுது போகிறது. பலர் பிழைப்பும் நடக்கிறது. கலை என்பது கற்பனை கலந்தது. சுவாரஸ்யத்துக்கு, உற்சாகம் ஊட்ட சிறிது கற்பனை நம்ப முடியாத விஷயங்கள் ( கதாநாயகன் ஆகப்பெரிய திறமைச் சாலி, மரத்தைச் சுற்றி பாடுவது, பத்துகொலை செய்துவிட்டு கதாநாயகன் அசால்டாக மறுநாள் டீ குடித்துக்கொண்டிருப்பார் போன்றவை) யதார்த்த வாழ்வில் இல்லாத விஷயங்களாக இருக்கும்.

  Tv Serial woes..cell phone app to find bomb..dont need a measure for telling myths?

  சீரியல்கள் தொலைக்காட்சிகளில் ஆரம்பத்தில் நாடக பாணியில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகியது. பின்னர் ராமாயணம், மஹாபாரதம், சக்திமான் என விரிவடைந்தது. சில தொலைக்காட்சிகள் சொந்தமாக சீரியலை தயாரித்தன. ராதிகா, தேவயானி, கே.பாலச்சந்தர், குட்டி பத்மினி, விசு போன்றோர் சீரியல்களில் குதித்தனர். பல அற்புதமான குடும்ப சீரியல்கள் வரத்தொடங்கின. இல்லத்தரசிகள் சீரியல்களில் மூழ்கினார்கள்.

  இதை கண்டுபிடித்தப்பின் சீரியலில் பல மாற்றங்கள் வரத்தொடங்கியது. கள்ளக்காதல், மாமியார் மருமகள் பிரச்சினை, குடும்ப உறவுகள் பிரச்சினை, ஆன்மிகம், பில்லி சூனியம், கொடூர குணத்துடன் கேரக்டர்கள் படைக்கப்பட்டன. இதில் பெரும்பாலும் பெண்களே கொடூரமானவர்கள். ஆண்கள் அப்பாவியாக கேமராவை வெறித்து பார்த்தபடி டை அடித்த தலைமுடி, மீசையுடன் நிற்பார்கள்.

  சில நேரம் சீரியலில் வரும் சம்பவங்கள் கற்பனைக்கெட்டாததாக இருக்கும். ஒரு சீரியலில் குடும்பம் சாதாரண வசதியில்லாத குடும்பமாக காட்டுவார்கள், ஆனால் வீட்டில் அனைவரும் கல்யாணத்திற்கு போவது போல் உடையணிந்திருப்பார்கள். இதற்கு வரவேற்பு கிடைத்தவுடன் வயதான பெண்கள் கூட மேக்கப் கலையாமல் நகைக்கடை ஸ்டாண்டாக நிற்க தொடங்கினார்கள். இல்லத்தரசிகள் அவரவர் வயதுக்கேற்ப புடவை நகைகளை ரசிக்கத் தொடங்கினர். கூடவே பிளட் பிரஷரையும் ஏற்றிக்கொண்டனர்.

  Tv Serial woes..cell phone app to find bomb..dont need a measure for telling myths?

  தற்போது வரும் சீரியல்களில் பல தனியார் தொலைக்காட்சிகள் போட்டி போட்டு எடுப்பதால் கதைக்கு பஞ்சமோ பஞ்சம் (முன்பு இருந்ததான்னு கேட்பது புரிகிறது). அதனால் பல திரைப்படங்களின் கலவைக்கதைகளை ஒன்றாக்கி ஒரு சீரியல் ஓடுது. அதில் கதாநாயகி பெண் விஜய்யாகவே மாறிவிட்டார். அவர் அடிக்கும் லூட்டிகள் இருக்கே. ( இதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்) பல கதைகள் அதே மந்திரம், பில்லி சூனியம் இப்ப வெடிகுண்டு வைக்கும் ரேஞ்சுக்கு வந்துட்டாங்க.

  Tv Serial woes..cell phone app to find bomb..dont need a measure for telling myths?

  கலர்ஸ் தமிழ் சானலில் ஒளிபரப்பாகும் சில்லுன்னு ஒரு காதல் சீரியலில் ஒரு பண்ணை வீட்டில் வெடிகுண்டை எதிர் டீம் வைத்து விடுகிறார்கள். இந்த தகவலை தெரிந்துக்கொண்ட காவல் உயர் அதிகாரி (அவர் என்ன ரேங்குன்னு அந்த டைரக்டருக்கே வெளிச்சம். இருக்கிற அசோக சின்னம், கத்தி , ஸ்டார் எல்லாவற்றையும் தோள் பட்டையில் போட்டு வைத்துள்ளார்). வெடிகுண்டை வைத்த தகவலை ஹீரோவை போனில் அழைத்துச் சொல்கிறார். அதன் பின்னர் நடப்பதே காமெடி.

  Tv Serial woes..cell phone app to find bomb..dont need a measure for telling myths?

  ஃபார்ம் ஹவுசில் வெடிகுண்டை கதாநாயகன், கதாநாயகி உள்ளிட்டோர் ஏதோ காணாமல் போன கால் கொலுசை தேடுவதுபோல் தேடுகிறார்கள். இதில் உச்சபட்ச காமெடி கதாநாயகி தன் கையில் உள்ள செல்போனில் பாம் டிடெக்டர் ஆப் இருப்பதாகவும் அதன் மூலம் வெடிகுண்டை கண்டு பிடிக்க முடியும் என்றும் சொல்லி செல்போனை வைத்து தேடுகிறார்.

  Tv Serial woes..cell phone app to find bomb..dont need a measure for telling myths?

  சீரியல் எடுக்கும் இயக்குநர்கள், கதாசிரியர்கள், நடிப்பவர்கள் உலக பொது அறிவை நினைத்து வருத்தப்படுவதா? இதை வீட்டில் அமர்ந்து பார்க்கும் பெண்கள், இளைய தலைமுறையினர் எப்படி யோசிப்பார்கள் இதை உண்மை என்று நம்பவும் வாய்ப்புள்ளது. முதலமைச்சர், பிரதமர் இல்லத்தில் வெடிகுண்டு வைத்தாலே அதற்கென இருக்கும் பாம் ஸ்குவாடு, மோப்ப நாய்கள்தான் வந்து பாம்-ஐ எடுக்க முடியும். அதற்கென செல்போன் ஆப் இருக்காம். பூ சுற்றுங்கப்பா அதற்காக ஒருகூடை பூவையா சுற்றுவது.
  சீரியல் பரிதாபங்கள் இன்னும் வரும்...

  English summary
  In serials, the scriptwriter's and directors' myths are too much to bear, so there has been a situation of writing serial tragedies. This review will come more often.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X