twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சும்மா சொல்லக் கூடாதுங்க.. பலரையும் பல விதத்தில் வாழ வைக்கும் டிவி சீரியல்கள்!

    |

    சென்னை: தொலைக்காட்சி சீரியல்கள், அவ்வளவா இல்லாத காலங்களில் சென்னையில் இருக்கும் அனைத்து சினிமா ஸ்டுடியோக்களிலும் ஈயாடவில்லை. சினிமா உலகமும் அப்போது நல்ல நிலைமையில் இல்லை.

    தூர்தர்ஷன் சானலில் ஒன்றிரண்டு தொடர்கள் என்று ஆரம்பித்த நிலையில், சன் டிவியும் தொலைக்கட்சித் தொடர்கள் என்று கால் பதித்தது. சன் டிவிக்கு இணையாக ராஜ் டிவியும் கங்கா யமுனா சரஸ்வதி என்று ஹிட் சீரியல்களில் புகழ்ப்பெற்றது.

    இப்படியாக புற்றீசல்கள் போல தொலைக்காட்சித் தொடர்கள் வரிசைக் கட்ட ஆரம்பித்த புதிதில், சென்னையில் முக்கியமாக கோடம்பாக்கத்தில் உள்ள அனைத்து ஸ்டுடியோக்களும் ஆள் நடமாட்டம், ஷூட்டிங், டெக்னீஷியன்ஸ் கூட்டம் என்று நிரம்பி வழிந்தன.

    ஷூட்டிங் வீடுகள்

    ஷூட்டிங் வீடுகள்

    சினிமா ஷூட்டிங் என்று வாடகைக்கு விடப்பட்ட சென்னை முழுவதும் உள்ள வீடுகள் சீரியல் ஷூட்டிங்குக்கு என்று விடப்பட்டு, வீட்டை வாடகைக்கு விடுபவர்களும் சம்பாதிக்க ஆரம்பித்து இருந்தனர்.மேக்கப் ஆர்ட்டிஸ்ட், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட், முக்கியமான ஆர்ட்டிஸ்ட்கள், புரடக்ஷன் மேனேஜர் என்று எல்லாருக்கும் வேலை கிடைக்கும் படியான சூழல் சீரியல் ஷூட்டிங்கில் உண்டானது.

    Nila Serial: நலுங்குன்னா சந்தனம் வைக்கறதுதான்.. அதென்ன சந்தன நலுங்கு?Nila Serial: நலுங்குன்னா சந்தனம் வைக்கறதுதான்.. அதென்ன சந்தன நலுங்கு?

    வீடு கிடைக்கவில்லை

    வீடு கிடைக்கவில்லை

    சிறிது காலத்தில் பார்த்த வீடுகளையே பார்ப்பதற்கு ரசிகர்களுக்கு போரடித்துப் போனது. அதோடு, எத்தனை பெரிய பட்ஜெட்டில் சீரியல் ஷூட் செய்தாலும், வீடு என்னவோ கஞ்சத்தனமாகதான் இருந்தது என்று, பெரிய கதை, பெரிய வீடு என்று புரடக்ஷன் களம் வீடுகளைத் தேடத் துவங்கியது. இந்த சமயத்தில் ஈசிஆர் போன்ற சென்னையின் கடைக்கோடி இடங்களில் நிலம் வைத்து இருந்தவர்கள் விழிப்படைந்தனர்.

    புதிய வீடுகள்

    புதிய வீடுகள்

    அவசர அவசரமாக தங்களது மனைகளை வீடாக கட்டி முடித்தனர். அதில் ஷூட்டிங் செய்வதற்கு ஏற்ற மாதிரி நீச்சல் குளம், விளையாடும் இடம் என்று அனைத்து வசதிகளையும் வைத்தும், இல்லை.. மாடிப்படிகளை அலங்காரமான வகையில் வீட்டின் உள்ளே கட்டி பங்களா டைப்பிலும் வீடுகளைக் கட்டி முடித்தனர். கட்டி முடிப்பதற்குள் வீடு சீரியல் ஷூட்டிங்குக்கு வேண்டும் என்று முன்னமேயே வீடுகள் புக்கான கதையும் உண்டு.

    வெளிநாட்டில் வசிப்போர்

    வெளிநாட்டில் வசிப்போர்

    இதில் வெளிநாட்டில் வசிப்போர் அல்லது வெளி ஊர்களில் வசிப்போர், வீட்டை ஷூட்டிங்குக்கு என்று நேரடியாக விட முடியாத கஷ்டமும் இருந்தது. இதையும் பயன்படுத்திக்கொள்ள புது யுக்தியாக சீரியலுக்கு வாடகைக்கு வீடுகளை விட என்று தனியாக வீடுகளை வாடகைக்கு எடுத்து ஒருத்தர் கையில் அத்தனை வீடுகளையும் வச்சு இருப்பார். அவர் கை வசம் பல வீடுகள் வாடகைக்கு என்று இருக்கும். இவர் மாசத்துக்கு இவ்வளவு ரூபாய் என்று வாடகைக்கு எடுத்துக் கொண்டு, ஷூட்டிங் செய்யும் புரடக்ஷன் கம்பெனிகளுக்கு இவர் நாள் வாடகைக்கு வீடுகளை விட்டு சம்பாதிப்பார்.

    போட்டோ ஆல்பம்

    போட்டோ ஆல்பம்

    இப்படி விதம் விதமாக சம்பாதிக்க தொலைக்காட்சி சீரியல்கள், எடுக்கும் புரடக்ஷன் கம்பெனிகள் வழி வகுத்துக் கொடுக்கின்றன.இதே பேரில் ரெக்கார்டிங் ஸ்டுடியோக்கள் வைத்து சம்பாதிப்பது, நடிக்க வாய்ப்பு கேட்டு வருபவர்களிடம் கேமிரா மேனை வைத்து, போட்டோ ஆல்பம் தயாரித்து கொடுப்பது என்று இவர்களே எல்லா வேலைகளிலும் சம்பாதிக்க கற்றுக்கொடுத்து விடுகிறார்கள். இப்படியும் வாழ வைக்கும் சீரியல்களை கடைசியில் வாழ வைப்பவர்கள் மக்கள்தான்.

    English summary
    television serials, in the absence of all the cinema studios in Chennai do not. The world of cinema was not in good condition at the time.while doordarshan channel started out as a series of two, Sun tv also called it a television series. Raj tv is also known as ganga yamuna saraswati in the hit serials.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X