twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இதிகாசம், ஆன்மிகம், ஆவி கதைகள்… சின்னத்திரையில் கலக்கல் தொடர்கள்

    By Mayura Akilan
    |

    இல்லத்தரசிகளுக்கு வீட்டில் பொழுது போக்காக வந்த தொடர்கள் பெரும்பாலும் அழுகை, வஞ்சகம், வில்லத்தனம் நிறைந்தவையாகவே இருந்தன.

    இப்போது இந்த சீரியல்கள் சற்றே மாற்றமடைந்து ஆன்மீகம், இதிகாசம், ஆவிகதைகள் என மாறி வருகின்றன. பகல்நேரங்களில் ஒரு சில ஆன்மிகத் தொடர்கள், இதிகாசத் தொடர்கள் வந்தாலும் இரவு நேரங்களில் சிறுவர்களையும், பெண்களையும் அச்சுறுத்தும் ஆவி தொடர்கள் ஒளிபரப்பாகின்றன.

    அழுது வடியும் தொடர்களை விட இந்த இதிகாசத் தொடர்கள் தற்போதைய ரசிகர்களுக்கு ஏற்ப சற்றே மாற்றம் செய்யப்பட்டிருப்பது இக்கால இளைய தலைமுறை ரசிகர்களை கவர்வதாக டிஆர்பி ரேட்டிங்குகள் தெரிவிக்கின்றன.

    சன் டிவியில் சிவசங்கரி

    சன் டிவியில் சிவசங்கரி

    சிவன் கதை என்றாலே அதில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது. சன் டிவியில் சனிக்கிழமை இரவுகளில் ஒளிபரப்பாகும் சிவசங்கரி தொடர் ‘சிவன் சொத்து குல நாசம்' என்ற பழமொழிக்கு ஏற்ப கதையை கொண்டு செல்கின்றனர். சிவசங்கரியாக நடிக்கும் சிறுமியின் நடிப்பு அருமை.

    முன் ஜென்ம கதை

    முன் ஜென்ம கதை

    தெய்வீக சக்திக்கும், தீய சக்திக்கும் நடக்கும் போராட்டமே சிவசங்கரி கதையின் கரு. முன் ஜென்மத்தில் சங்கரன் பாளையத்தில் மூன்று அண்ணன்களுக்கு தங்கையாக பிறந்த சங்கரி பஞ்சலிங்கங்களைக் கொண்டு சிவனுக்கு கோவில் கட்ட முயற்சிக்க, அது நிறைவேறாமல் இறந்து போகிறாள்.

    மறு ஜென்மத்தில் நிறைவேறுகிறதா?

    மறு ஜென்மத்தில் நிறைவேறுகிறதா?

    பிறகு மறு ஜென்மத்தில் பிறந்து அதே குடும்பத்தில் வந்து சேர்கிறாள். பஞ்ச லிங்கங்களை கொண்டு மறுபடியும் கோவில் கட்ட முனைய, அதே பஞ்ச லிங்கங்களைக் கொண்டு பூஜித்து மாபெரும் சக்தியை அடைய துடிக்கும் துர்முகன் என்ற அரக்கன் சங்கரியை கொண்டே அதை சாதிக்க நினைக்கிறான்.

    விஜய் டிவியில் சிவன்

    விஜய் டிவியில் சிவன்

    சிவபுராணம் பற்றி விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது. சிவ பார்வதி கதை, சிவனின் திருவிளையாடல், திருமணம், என இன்றைய கால கட்டத்திற்கு ஏற்ப சுவாரஸ்யமாக செல்கிறது கதை. திங்கள் முதல் வியாழன் வரை காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது சிவன் தொடர்.

    ஆவிகளின் கதை

    ஆவிகளின் கதை

    சாமி கதைகளை பார்க்கும் சிறுவர்கள்தான் ஆவிகதைகளையும் பார்க்கின்றனர். ஞாயிறு இரவு பத்துமணிக்கு சன் டிவியில் பைரவி தொடர் ஒளிபரப்பாகிறது. ஆவிகள் நேரடியாக தோன்றி தங்களின் இறப்பிற்கு காரணம் கூறி அதற்கு நிவாரணம் தேடுவதுதான் கதை.

    ஜீ தமிழில் ராமாயணம்

    ஜீ தமிழில் ராமாயணம்

    இதிகாச கதைகளுக்கு என்றைக்குமே வரவேற்புதான். ராமாயணம் தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இதன் காட்சியமைப்பு இக்கால ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    சன் டிவியில் மகா பாராதம்

    சன் டிவியில் மகா பாராதம்

    மகா பாரதம் இதிகாசத் தொடர் சன் டிவியில் கடந்த மூன்று வாரங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. முதன் முதலாக தமிழில் நேரடியாக படமாக்கப்பட்ட தொடர். தமிழ் சின்னத்திரை நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இக்கால இளைய தலைமுறையினருக்கு ஏற்ப காட்சியமைத்துள்ளதாக கூறியுள்ளார் வரும் வாரங்களின் இந்த தொடருக்கான வரவேற்பினை எதிர்பார்க்கலாம்.

    English summary
    K-serials apart, television these days is offering a variety of options, from mythology-based shows to serials inspired from fables. Here’s a peek
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X