நீ நிறுத்து!... நான் நிறுத்துறேன்!!... சிகரெட்டிற்கு எதிராக கிளம்பிய டிடி, மாகாபா ஆனந்த், அஞ்சனா

By Mayura Akilan

சிகரெட் புகை பழக்கத்திற்கு எதிராக டிவி தொகுப்பாளினிகள் திவ்யதர்ஷினி, அஞ்சனா, தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் ஆகியோர் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யத் தொடங்கியுள்ளனர்.

அவனை நிறுத்தச் சொல்... நான் நிறுத்துறேன்' என்று 'நாயகன்' படத்தில் கமல் வசனம் பேசுவார். பிரபலமான அந்த வசனத்தைப் போல 'நீ நிறுத்து... நான் நிறுத்துகிறேன்' என்ற ஒரு அமைப்பு கேரளாவில் உருவாகி உள்ளது.

சிகரெட் பிடிக்காதவர்கள் யாராக இருந்தாலும், தங்களின் அன்புக்குரியவரிடம் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தச் செய்வதே இந்த அமைப்பின் நோக்கம்

நீங்கள் சிகரெட் பிடிக்கும் கெட்ட பழக்கத்தை நிறுத்தினால் தன்னிடம் உள்ள ஒரு கெட்ட பழக்கத்தை நிறுத்திக்கொள்வதாக அன்புக்குரியவரிடம் சிகரெட் பிடிக்காதவர்கள் உறுதி தருகிறார்கள்.

நடிகை லட்சுமி மேனன்

நடிகை லட்சுமி மேனன்

அதேபோன்ற உறுதியை சமீபத்தில் நடிகை லட்சுமி மேனன் அளித்தார். என் அன்புக்குரியவர்கள் யாராக இருந்தாலும் சிகரெட் பிடிப்பதை நிறுத்திவிட்டு சொல்லுங்கள். நானும் என்னிடம் உள்ள ஒரு கெட்ட பழக்கத்தை நிறுத்திவிடுகிறேன். இந்த தகவலை வேகமாக பரப்புங்கள். அதன் மூலம் உங்களின் பாசத்துக்குரியவரின் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த உதவுங்கள்.

என்று லட்சுமி மேனன் கூறியிருந்தார்.

திவ்யதர்ஷினி

சிகரெட் பழக்கத்திற்கு எதிராக டிவி தொகுப்பாளினி டிடியும் களமிறங்கியுள்ளார். நீங்கள் சிகரெட் புகைப்பதை நிறுத்துங்கள். நான் ஷாப்பிங் செய்யும் பழக்கத்தை நிறுத்திக்கொள்கிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

அஞ்சனா

இதேபோல சன்மியூசிக் தொகுப்பாளினி அஞ்சானாவும் சிகரெட் பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்துள்ள அஞ்சனா, சிகரெட் புகைப்பதை நிறுத்துங்கள்... நான் என்னுடைய காலை உணவு தவிர்க்கும் பழக்கத்தை நிறுத்திக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

மாகாபா ஆனந்த்

இதேபோல விஜய் டிவி தொகுப்பாளரும் நடிகருமான மாகாபா ஆனந்தி, தன்னுடைய விழிப்புணர்வு பிரச்சாரத்தில், சிகரெட் பழக்கத்தை நிறுத்துங்கள். நான் என்னுடைய நகம் கடிக்கும் பழக்கத்தை நிறுத்திக்கொள்கிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X