சினிமாவில் ஹிட்டடிக்கும் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள்!

By Mayura Akilan

டிவி வந்த காலத்தில் சினிமாவிற்கு போட்டியாகிவிடும் என்று நடிகர்களும், இயக்குநர்களும் கருத்து தெரிவித்தனர். ஆனால் சினிமாவிற்கு பெருமளவில் பக்கபலமாக இருப்பது சேட்டிலைட் சேனல்கள்தான். ஒரு திரைப்படம் ரிலீசாகியிருக்கிறது என்பதில் தொடங்கி அதில் நடித்துள்ள நடிகர், நடிகையர்கள் வரை பேட்டி கண்டு மக்களுக்கு நேரடியாக கொண்டு சேர்க்கிறது. தவிர சேட்டிலைட் ரைட்ஸ் மூலம் தயாரிப்பாளருக்கு வருமானம் கிடைக்கிறது. நம்முடைய செய்தி அதைப்பற்றியல்ல.

சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு வரும் நடிகர்கள் ஒருபக்கம் இருக்கையில் சின்னத்திரையில் தொகுப்பாளர்களாகவும், நடிகர்களாகவும் இருந்து சினிமாவில் பிரபலமடைந்துள்ளவர்களைப் பற்றியதுதான் படியுங்களேன்.

நிகழ்ச்சித் தொகுப்பாளர் டூ ஹீரோ

நிகழ்ச்சித் தொகுப்பாளர் டூ ஹீரோ

விஜய் டிவியில் அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்து பரிசு பெற்றவர் சிவ கார்த்திக்கேயன். இவருக்கு அதன்பிறகு ஏறுமுகம்தான் விஜய் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகி அசத்தப்போவது யாரு, அது இது எது, விஜய் அவார்ட்ஸ் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இந்த புகழ் மெரினா படத்தில் சிவகார்த்திகேயனை ஹீரோவாக்கியது. நகைச்சுவை பேச்சோடு நடிப்பும் கை கொடுக்கவே கை மேல் பல படங்கள் புக் ஆகியுள்ளன.

லொள்ளு சபா டூ காமெடி நடிகர்

லொள்ளு சபா டூ காமெடி நடிகர்

விஜய் டிவியில் சினிமா திரைப்படங்களை உல்டா செய்து ‘லொள்ளு சபா' நடத்திய சந்தானம் சிம்பு படத்தில் தோழனாக அறிமுகம் ஆனார். டைமிங் நகைச்சுவை பேச்சு பலரையும் கவரவே பல படங்களில் தனி நகைச்சுவை நடிகராக ஆவர்த்தனம் நடத்தினார். தமிழ் சினிமாவில் வடிவேல் ஆதிக்கம் குறையவே சந்தானம் காட்டில் அடை மழைதான்.

ஹீரோவின் நண்பன் நண்டு ஜெகன்

ஹீரோவின் நண்பன் நண்டு ஜெகன்

லொட லொட பேச்சு... எதிராளியை அலர வைக்கும் கிண்டல் என சின்னத்திரையில் நண்டு ஜெகனை தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். இப்பொழுது பெரும்பாலான படங்களின் ஹீரோக்களின் தோழனாக அவதாரம் எடுத்து வருகிறார் நண்டு ஜெகன். அயன், கோ, பையா போன்ற படங்களில் காமெடி மட்டுமல்லாது பேசப்படும்படியான கதாபாத்திரம் நண்டு ஜெகனுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. இந்த சூட்டோடு சூட்டாக நல்ல பெண்ணாக பார்த்து திருமணம் முடித்துவிட்டார் ஜெகன்.

லொள்ளு சபா மனோகர்

லொள்ளு சபா மனோகர்

நீங்ங்ங்ங்க என்ன்ன்ன சொல்ல வர்ர்ர்றீங்க? என்று நீட்டி முழக்கி பேசும் மனோகர் சின்னக்குழந்தைகளுக்கு ஹீரோ. டிவியில் மனோகர் வந்தாலே ரசிக்கும் குட்டீஸ்கள் அதிகம். சந்தானத்துடன் லொள்ளு சபாவில் ஆரம்பித்த நட்பு இப்போது சினிமாவிலும் தொடர்கிறது. பல படங்களில் சந்தானத்துடன் இணைந்து காமெடியில் கலக்கி வருகிறார் லொள்ளு மனோகர்.

சூப்பர் 10 கணேஷ்கர்

சூப்பர் 10 கணேஷ்கர்

சன் டிவியில் சூப்பர் 10 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கணேஷ்கர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகம் ஆனாலும் அவரின் புகழை அதிகப்படுத்தியது சூப்பர் 10. ஆர்த்தியுடன் இவர் இணைந்து செய்த காமெடி நிகழ்ச்சி பல ஆண்டுகளாக சன் டிவியில் ஒளிபரப்பானது. இதுவே பல திரைப்படங்களில் சினிமா வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தது.

நிகழ்ச்சித் தொகுப்பாளர் டூ இசை அமைப்பாளர்

நிகழ்ச்சித் தொகுப்பாளர் டூ இசை அமைப்பாளர்

நிகழ்ச்சித் தொகுப்பாளராக சன் டிவியில் அறிமுகமானவர் ஜேம்ஸ் வசந்தன். டாப் 10 நிகழ்ச்சி தொடங்கி வணக்கம் தமிழகம் வரை பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இன்றைக்கு சினிமாவில் பிரபல இசைஅமைப்பாளராக அறியப்படுகிறார். சுப்ரமணியபுரம், பசங்க, பாகன் போன்ற படங்கள் இவருடைய இசை அமைப்பில் உருவானவை. சினிமாவில் பிரபலமானாலும் சின்னத்திரையில் ‘ஒரு வார்த்தை ஒரு லட்சம்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் ஜேம்ஸ் வசந்தன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X