»   »  ஆயுதபூஜையன்று டிவியில் அமர்க்களம் செய்யப் போகும் "பாண்டவர் அணி"

ஆயுதபூஜையன்று டிவியில் அமர்க்களம் செய்யப் போகும் "பாண்டவர் அணி"

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆயுத பூஜை, விஜய தசமி தினத்தை முன்னிட்டு இந்திய தொலைக்காட்சிகளில் விஷால், கார்த்தி நடித்த திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன. சன் டிவியில் கொம்பன் திரைப்படமும். ஜீ தமிழ் டிவியில் சமர் படமும் ஒளிபரப்பாக உள்ளது.

அரசு விடுமுறை தினம் என்றாலே டிவி ரசிகர்களைக் கவர புத்தம் புதிய திரைப்படங்களை ஒளிபரப்புவது தொலைக்காட்சி சேனல்களின் வாடிக்கை. இந்த வாரமோ ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு தொலைக்காட்சி சேனல்களில் போட்டி போட்டுக்கொண்டு புதிய திரைப்படங்களை ஒளிபரப்புகின்றனர். விஜய், அஜீத், கார்த்தி, விஷால் என நட்சத்திர பட்டாளங்கள் மோத இருக்கின்றனர் இந்த விடுமுறை தினத்தில் என்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.

அஜீத்தின் ஆரம்பம்

அஜீத்தின் ஆரம்பம்

ஜெயா தொலைக்காட்சியில் அஜீத் நடித்த ஆரம்பம் திரைப்படம் புதன்கிழமையன்று 11 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. அஜீத் ரசிகர்கள் சந்தோசமா விசிலடிக்கலாம். ஏனென்றால் வேதாளம் படத்தின் சிறப்பு முன்னோட்டமும் அன்றைய தினத்தில் ஒளிபரப்பாக உள்ளது.

கார்த்தியின் கொம்பன்

கார்த்தியின் கொம்பன்

ஆயுத பூஜை தினத்தன்று சன் டிவியில் சிறப்புத் திரைப்படமாக கார்த்தி, லட்சுமி மேனன் நடித்த கொம்பன் திரைப்படம் ஒளிபரப்பாகிறது. அதே தினத்தில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படமும் பார்க்கலாம்.

விஜய் நடித்த ஜில்லா

விஜய் நடித்த ஜில்லா

விஜய தசமி தினத்தன்று விஜய் ரசிகர்களுக்காவே சன் டிவியில் மாலை 6 மணிக்கு விஜய் நடித்த ஜில்லா திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.

கலைஞர் டிவியில் கார்த்தி

கலைஞர் டிவியில் கார்த்தி

ஆயுத பூஜை தினத்தன்று கார்த்தி நடித்த பையா திரைப்படம் ஒளிபரப்பாகிறது. அதே நாளில் மாலை 5 மணிக்கு 'வந்தாமல' என்ற திரைப்படம் விடுமுறை தின சிறப்புத் திரைப்படமாக ஒளிபரப்பாக உள்ளது

ஜீ தமிழ் டிவியில் விஷால்

ஜீ தமிழ் டிவியில் விஷால்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விஷால் நடித்த சமர் திரைப்படம் அக்டோபர் 21ம் தேதி புதன்கிழமையன்று பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகிறது. காலை 11 மணிக்கு வடைகறி திரைப்படமும், மாலை 5 மணிக்கு விஜய் ஆன்டணி நடித்த சலீம் திரைப்படமும், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. விஜய தசமி தினத்தன்று என்றென்றும் புன்னகை, கிருஷ்ணா நடித்த யாமிருக்க பயமே ஆகிய திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளது.

English summary
TV channels are getting ready to rock Ayutha Poojai day with Vishal and Karthi movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil