ஒரே வீட்டில் ரெண்டு அக்னி நட்சத்திரம்... எப்படி சமாளிக்கறது?

சென்னை: சன் டிவியில் கடந்த ஐந்து நாட்களாக அக்னி நட்சத்திரம் என்று ஒரு சீரியல் ஒளிபரப்பாகிட்டு வருது.

இரண்டு இணைபிரியா நண்பர்கள்பற்றிய கதை. ரொம்ப நாளைக்கு பிறகு நடிகை மவுனிகாவும், நடிகை வினோதினியும் சீரியலில் நடிக்க வந்திருக்காங்க.

இரண்டு பேருமே இயக்குநர் பாலு மகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள் படத்தில் அறிமுகம் ஆனவங்க இந்த சீரியலில் மீண்டும் ஒண்ணு சேர்ந்து நடிக்கறாங்க.

வினோதினியின் கணவரிடம்

வினோதினியின் கணவரிடம்

வினோதினியின் கணவரிடம் டிரைவராக வேலை பார்ப்பவர் மவுனிகாவின் கணவர். ஆனால், இருவரும் ஆரம்ப காலத்தில் இருந்தே நல்ல நண்பர்கள். என்னதான் நண்பரானாலும், டிரைவர் டிரைவர்தான்னு நினைக்கறவங்க வினோதினி.

ரெண்டு பேரும் ஒண்ணா

ரெண்டு பேரும் ஒண்ணா

ரெண்டு பேரும் ஒண்ணா கல்யாணம் செய்துக்கறாங்க. ரெண்டு பேர் மனைவியும் ஒண்ணா கர்ப்பமாகி, ஒரே நாளில் பிரசவத்துக்கு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகறாங்க. ஆனா, குழந்தை மட்டும்தான்....

இல்லை வினோதினிக்கு

இல்லை வினோதினிக்கு

வினோதினிக்கு பிறந்த குழந்தை உயிரோடு இல்லை. ரொம்ப கிரிட்டிகலான நிலமையில் ஆபரேஷன் செய்து குழந்தையை எடுத்து, கர்பப்பையையும் நீக்க வேண்டிய சூழல். வினோதினி இது தெரியாம மயக்கத்துல இருக்காங்க.

ரெட்டை குழந்தை மவுனிகாவுக்கு

ரெட்டை குழந்தை மவுனிகாவுக்கு

இங்கே மவுனிகாவுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்குது. மவுனிகா கண் விழிப்பதற்குள் ஒரு குழந்தையை தன் முதலாளி நண்பன் கிட்ட குடுத்துடறார் டிரைவர். நண்பன் குடுத்த குழந்தையை பொண்டாட்டி கையில் குடுத்து இதுதான் நம்ம குழந்தைன்னு சொல்றார்.

என்ன குழந்தை அவளுக்கு

என்ன குழந்தை அவளுக்கு

நம்ம டிரைவர் பொண்டாட்டிக்கு என்ன குழந்தைங்க பிறந்திருக்குன்னு கேட்கறா... அவனுக்கும் பொண்ணுதான் பொறந்திருக்குன்னு புருஷன் சொல்றார். அங்கே மவுனிகா ரெண்டாவது தொட்டிலைப் பார்க்க அது காலியா இருக்கு. நமக்கு குடுத்து வச்சது ஒரு குழந்தைதான்னு சொல்லிட்டு கண் கலங்கறார் டிரைவர்.

அகிலா அப்பா டிரைவர்

அகிலா அப்பா டிரைவர்

முதலாளில் வீட்டில் பணக்கார பெண்ணாக திமிர் பிடித்த பெண்ணாக வளர்வது டிரைவரின் மகள்தான்...பேரு அகிலா. டிரைவர் வீட்டில் மவுனிகாவின் ஒரே பெண்ணாக வளர்வது மீரா.இவள் நல்ல பெண்ணாக வளர்ந்து வர்றா.

அக்கினி நட்சத்திரம் ரெண்டு

அக்கினி நட்சத்திரம் ரெண்டு

முதலாளி வீட்டில் அகிலாவும் அவள் அலம்மாவும் டிரைவர் குடும்பத்தை கண்டாலே வெறுக்கறாங்க. மவுனிகா,மீரா, டிரைவர் இவங்களைப்பார்த்தாலே அக்னியை கக்குவது போல பார்க்கறாங்க.

ஒரே வீட்டில் ரெண்டு அக்னி நட்சத்திரம் என்றால் எப்படி சமாளிப்பது?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X