பிக்பாஸ் வீட்டுல இன்னைக்கும் ரெண்டு கொலை.. ஆவியாக சுற்றும் ஷெரின்.. ரேஷ்மா! எப்படி நடந்திருக்கும்?
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இன்றும் இரண்டு கொலைகள் நடந்திருப்பது புரமோவில் தெரியவந்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரந்தோறும் லக்ஸரி பட்ஜெட்டிற்காக ஒரு டாஸ்க் கொடுக்கப்படும். அதன்படி இந்த வாரத்திற்கான லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் நேற்று கொடுக்கப்பட்டது.
இதில் வனிதாவுக்கு கொலைக்காரி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களை அவர்களுக்கே தெரியாமல் கொன்று வருகிறார் வனிதா.

சாக்ஷி, மோகன் கொலை
இதுவரை சாக்ஷியின் மேக்கப்பை கலைத்து அவரை கொன்றுள்ளார் வனிதா. இதேபோல் மோகன் வைத்யாவை மைக்கெல் ஜாக்சன் ஸ்டெப் போட வைத்து அவரையும் கொன்று விட்டார்.

பேசக்கூடாது என கட்டளை
இருவரும் ஆவிகளாக மயானத்தில் உள்ளனர். ஆவிகள் பேசுவது மனிதர்களுக்கு கேட்காது என்று கூறிய பிக்பாஸ், இறந்தவர்களுடன் ஹவுஸ் மேட்ஸ் பேசக்கூடாது என கட்டளை போட்டுள்ளார்.

ரேஷ்மா, ஷெரின்
இதனால் தனியாக புலம்பி வருகின்றனர் மோகன் வைத்யாவும் சாக்ஷியும். இந்நிலையில் இன்று வெளியான புரமோவில் ரேஷ்மாவும் ஷெரினும் மயானத்தில் ஆவி உடையில் இருப்பது தெரியவந்துள்ளது.

எபிசோடில் தெரியும்
அவர்கள் இருவரையும் கொலைக்காரி வனிதாவும் அவரது கூட்டாளி முகெனும்தான் கொன்றிருப்பார்கள். என்ன செய்து அவர்களை கொன்றிருப்பார்கள் என்பது இன்றைய எபிசோடில் தான் தெரியும்.

வேறலெவல்
இறந்தவர்களை சக ஹவுஸ் மேட்ஸ்கள் சகல மரியாதையும் செய்து மயானத்தில் கொண்டு போய் விடுவது வேடிக்கையாக உள்ளது. அதிலும் சாண்டியின் சாவு மேளமும் சாவு டான்ஸும் வேற லெவல்!


Click it and Unblock the Notifications











