அடுத்தடுத்த கலக்கல் சீரியல்களை களமிறக்கும் சேனல்.. அக்டோபர் 10ல் ரசிகர்களை சந்திக்க வரும் ஆட்டோ ராணி

சென்னை : தமிழில் முன்னணி சேனல்கள் பலவும் சீரியல்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றன.

அடுத்தடுத்த புதிய சீரியல்களை ஒளிபரப்பியும் வருகின்றன. இதன்மூலம் ரசிகர்களை தங்களது சேனல்களை தொடர்ந்து பார்க்கும்படி செய்து வருகின்றன.

இதன்மூலம் அந்த சேனல்களின் டிஆர்பி அதிகரித்து அவர்களின் வியாபாரமும் பெருக இந்த சீரியல்கள் காரணமாக அமைகின்றன.

சீரியலுக்கான போட்டி

சீரியலுக்கான போட்டி

தமிழில் பிரபல சேனல்கள் பலவும் நிகழ்ச்சிகளுக்கு இணையாக சீரியல்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில் சன் டிவி, விஜய் டிவிக்கு தான் முதலில் போட்டி அதிகம். அந்த வரிசையில் தற்போது கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் உள்ளிட்ட சேனல்களும் தற்போது தீவிரமாக களமிறங்கியுள்ளன.

புத்தம் புதிய சீரியல்கள்

புத்தம் புதிய சீரியல்கள்

இந்த சேனல்கள் புதுப்புது சீரியல்களை ஒளிபரப்பு அதன்மூலம் தங்களது சேனல்களின் டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிக்க மிகவும் தீவிரம் காட்டி வருகின்றன. தங்களது சேனல்களில் ஏற்கனவே ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் சொதப்பும் நிலையில், அவற்றை உடனடியாக முடித்து வைத்து அந்த இடத்தில் புதிய சீரியல்களை இறக்கி வருகின்றன.

சிறப்பான சீரியல்கள்

சிறப்பான சீரியல்கள்

புதிய சீரியல்களின் மூலம் அந்தந்த சேனல்களின் டிஆர்பி ரேட்டிங் வாரந்தோறும் அதிகரித்து அவற்றின் வியாபாரம் மற்றும் விளம்பரங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த வரிசையில் சன் டிவி, விஜய் டிவி முன்னணியில் உள்ள நிலையில், இந்த சேனல்களின் கயல், பாக்கியலட்சுமி உள்ளிட்ட தொடர்கள் சிறப்பு கவனம் பெற்று வருகின்றன.

ரசிகர்களை கவர்ந்த ஜமீலா தொடர்

ரசிகர்களை கவர்ந்த ஜமீலா தொடர்

அந்த வரிசையில் அடுத்ததாக ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் சேனல்களும் புதிய தொடர்களை அறிவித்து ஒளிபரப்பி வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் ஜமீலா என்ற புத்தம் புதிய சீரியலை கலர்ஸ் தமிழ் ஒளிபரப்பத் துவங்கியுள்ளது. முஸ்லிம் பெண்ணின் வாழ்க்கையை இந்தத் தொடர் கதைக்களமாக கொண்டுள்ளது.

உள்ளத்தை அள்ளித்தா தொடர்

உள்ளத்தை அள்ளித்தா தொடர்

இந்நிலையில் அடுத்த சீரியலுக்கான அறிவிப்பை தற்போது கலர்ஸ் தமிழ் சேனல் வெளியிட்டுள்ளது. இதற்கான ப்ரமோ அந்த சேனலின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. உள்ளத்தை அள்ளித்தா என்ற அந்த புதிய தொடர் வரும் அக்டோபர் 10ம் தேதி முதல் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

புதிய கலக்கல் ப்ரமோ

புதிய கலக்கல் ப்ரமோ

பிரசவத்திற்கான அவஸ்தையில் கேப் புக் செய்துவிட்டு காத்திருக்கும் தம்பதிகளுக்கு ஆபத்பாந்தவனாக வருகிறார் நாயகி ஆட்டோ ராணி. அவர் அந்த தம்பதியை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்கிறார். பிரசவத்திற்கு இலவசம் என்றும் கூறுகிறார். அந்த கர்ப்பிணி பெண் அவரை பாராட்ட, தனக்கு கல்லூரிக்கு நேரமாகிவிட்டதாக அங்கிருந்து சிட்டாக பறக்கிறார்.

காத்திருக்கும் ரசிகர்கள்

காத்திருக்கும் ரசிகர்கள்

இவ்வாறு அந்த ப்ரமோ காணப்படுகிறது. இளம் பெண்கள் மற்றும் அவர்களின் பிரச்சினைகளை மையமாக கெண்டு புதிய சீரியல்களை தொடர்ந்து அறிவித்து வருகிறது கலர்ஸ் தமிழ். அந்த வகையில் இந்தத் தொடரும் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X