ஒயில்டு கார்டு என்ட்ரியாக பிக் பாஸ் வீட்டுக்கு போய் வச்சு செய்யணும்: ஷாரிக் அம்மாவின் ஆசை

By Siva

Recommended Video

பிக் பாஸ் வீட்டிற்கு போகத் துடிக்கும் ஷாரிக் அம்மா உமா ரியாஸ்- வீடியோ

சென்னை: ஒயில்டு கார்டு என்ட்ரியாக தன்னை பிக் பாஸ் 2 வீட்டிற்குள் அனுப்பி வைக்குமாறு நடிகை உமா ரியாஸ் கமலை கேட்டுக் கொண்டுள்ளார்.

பிக் பாஸ் 2 வீட்டில் இருந்து ஷாரிக் நேற்று வெளியேற்றப்பட்டார். மகனை அழைத்துச் செல்ல நடிகை உமா ரியாஸ் வந்திருந்தார். மேலும் ஷாரிக்கின் நண்பர்கள் 3 பேரும் வந்திருந்தனர்.

கமல் ஹாஸன் உமாவை மேடைக்கு அழைத்து பேசினார்.

ஷாரிக்

ஷாரிக்

யாரையும் சார்ந்து இருக்காமல் வாழ கற்றுக்கொள்ளட்டும் என்று நினைத்து தான் ஷாரிக்கை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுப்பி வைத்தேன். நடிகை உமா ரியாஸ் என்பது போய் நான் வெளியே சென்றால் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஷாரிக்கின் அம்மா தானே என்று கூறி பலர் என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது பெருமையாக இருந்தது என்றார் உமா.

சமையல்

சமையல்

என் மகன் நிறைய கற்றுக் கொண்டுள்ளான் என்று உமா கூற ஷாரிக்கோ சமையல் நல்லா கத்துக்கிட்டேன், முன்பெல்லாம் சமைக்க தெரியாது, தற்போது சிக்கன் கிரேவி, ஃபிரைட் ரைஸ் செய்யத் தெரியும் என்றார். ஷாரிக் கூறியதை கேட்ட உமாவோ, தயவு செய்து சமைத்துக் கொடு தம்பி என்றார்.

கமல்

கமல்

ஒரு சின்ன வேண்டுகோள் சார். ஒயில்டு கார்டு என்ட்ரியா என்னை உள்ளே அனுப்புகிறீர்களா என்று உமா கமலிடம் கேட்க அவரோ வாய்விட்டு சிரித்தார். சத்தியமாக எனக்கு ஒயில்டு கார்டு என்ட்ரியாக உள்ளே போகணும். வச்சு செஞ்சுவிடுவேன் என்று உமா கூறியதை கேட்டு கமல் தலையில் அடித்துக் கொண்டார்.

ஒயில்டு கார்டு

ஒயில்டு கார்டு

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் யார், யார் எல்லாம் ஒயில்டு கார்டு என்ட்ரியாக வரப் போகிறார்களோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு செல்லத் துடிக்கிறார் உமா ரியாஸ். உமாவின் கோரிக்கையை ஏற்று அவரை பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைப்பார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X