kanmani serial: அடியே அத்தைக்காரி... நீ செத்தடி.. ப்ப்பா.. என்ன பேச்சு பேசறா!
சென்னை: வளர்மதி ஏதோ டவுன்ல படிச்ச பொண்ணுன்னு பார்த்தா... மரியாதை இல்லாம அடியே அத்தக்காரி.. அத்தக்காரின்னு மைண்ட் வாய்சுல பேசறதும்... எப்போதும் வயசுக்கு மீறி கெடுதல்களை செய்ய யோசிப்பதும் என்று நம்பும் மாதிரி இல்லை.
சன் டிவியின் கண்மணி சீரியலில் சவுந்தர்யாவின் தங்கை வளர்மதி கதாபாத்திரம்தான் மேற் சொன்னது. இன்றைய காலக்கட்டத்தில் இளம் தலைமுறை பேசாத வசனத்தை எல்லாம் பேச வச்சு நடிக்க வைக்கறாங்க.
அடியே அத்தக்காரி நீ செத்தடி...அடியே சவுந்தர்யா உனக்கு இருக்குடி என்று வளர்மதி பேசும் வசனம் கொஞ்சம் ஓவர்தான். புது மருமகள்கள் இந்த மாதி ரிவார்த்தைகளை ரொம்ப ஈஸியா கத்துக்குவாங்க.

நான் வெளக்கெண்ணையா?
நாம் அப்பா அம்மா வெட்டிங் ஃபங்க்ஷனில் எதுவும் பிரச்சனை பண்ணைக் கூடாதுன்னுதான் நினைக்கிறேன்.. ஆனால், வலிய வந்து மாட்டும்போது வேணாம்னு விட்டுப் போக நான் என்ன வெளக்கெண்ணையான்னு வளர் ஒரு டயலாக் பேசறா பாருங்க...இது புது மருமகள்களுக்கான புது டயலாகத்தான். நிச்சயம் கத்துக்குவாங்க.

கசமுசா இருக்கும்
இதைவிட கொடுமையா ஒரு டயலாக். ஆனால், இதை சவுந்தர்யா கேரக்டர்கிட்டே யாரும் எதிர்பார்க்கலை. அதாவது, ஆகாஷின் தோழி சினேகாக்கிட்டே, வளர் ரொம்ப சரின்னு நான் சொல்ல மாட்டேன். வழக்கமா எல்லார் வீட்டிலேயும் புது மருமகள் மாமியாருக்கு இடையில் நடக்கும் கசமுசாதான். ஆனால், வளர் இதை பெரிசாக்கி கேம் விளையாடறான்னு நினைக்கிறேன்னு சொல்றா.

அவங்கவங்க வேலை
கல்யாணம் செய்து வச்சோமா.. அதற்குப் பின்னான கடமைகளை பார்த்தோமான்னு அவங்கவங்க ஓடிக்கிட்டே இருக்காங்க. மாமியார் மருமகள் கசமுசாக்கு அவ்வளவா வேலையே இல்லை. இந்த மாதிரி பாஷையை படிச்ச பொண்ணுங்க பேசும்போது நிச்சயமா எடுபடலை. அவங்கவங்களுக்கு ஏத்த மாதிரி டயலாக் எழுதுங்களேன். அதைத்தான் எல்லாரும் எதிர்பார்க்கறாங்க.

மைண்ட் வாய்ஸ் மரியாதை
மாமியார் மீது கோவம் இருந்தால் கூட மரியாதையா பேசற மாதிரி மைண்ட் வாய்ஸ் வைங்க. எப்போ பார்த்தாலும், அடியே அத்தக்காரி... அடியே அத்தக்காரின்னு வளர் பேசறது, சீரியலுக்கு உண்டான கிளாஸை கீழே இறக்கிடுது. முத்துச்செல்வி படிக்காத பொண்ணுதானே அந்த பொண்ணுக்கு நல்ல டயலாக் எழுதறீங்க. வளர்மதியை சைக்கோவா காமிச்சாலும் அந்த கேரக்டரை அப்படியே கொண்டு போங்க,. அதுக்காக கேவலமான வார்த்தைகளை அடிக்கடி கேட்டால் காது கூசுது.


Click it and Unblock the Notifications











