பிள்ளையார் பிடிக்க போய் குரங்கா மாறிடுச்சு.. யாருக்கு பொருந்துமோ இல்லையோ.. வனிதாவுக்கு பொருந்தும்!

சென்னை: வனிதா ஷெரினுக்கு அட்வைஸ் செய்யப்போக அதுவே அவருக்கு ரிவிட்டாகிவிட்டது.

பிக்பாஸ் வீட்டிற்குள் இரண்டாவது முறையாக வைல்டு கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்துள்ளார் வனிதா விஜயகுமார். அவர் இல்லாத இடைப்பட்ட சில வாரங்கள் மட்டுமே பிக்பாஸ் வீடு அமைதியாக இருந்தது.

அவர் எப்போது பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் நுழைந்தாரோ அப்போதே கலவரமும் ஆரம்பமாகிவிட்டது. சில நேரம் வனிதா பேசுவது நியாயமாக இருந்தாலும் கூட, அவரின் போட்டுக்கொடுக்கும் வேலை மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது.

இரண்டு கேங்

இரண்டு கேங்

பிக்பாஸ் வீடு இரண்டாக பிரிந்துள்ளது. இதில், கவின், சாண்டி, முகென், லாஸ்லியா, தர்ஷன் ஆகிய 5 பேர் ஒரு குரூப்பாகவும், ஷெரின், சேரன், வனிதா ஆகிய மூன்று பேரும் ஒரு கேங்காகவும் உள்ளனர்.

ஷெரினுக்கு அட்வைஸ்

ஷெரினுக்கு அட்வைஸ்

இந்நிலையில் தர்ஷனுக்கு ஆப்பு வைக்க திட்டம் போட்ட வனிதா, ஷெரினுக்கு தர்ஷன் உடன் பழகக்கூடாது என கூறி அட்வைஸ் செய்தார். அப்போது தர்ஷனை தாக்குவதாக நினைத்து ஷெரினுக்கு தர்ஷன் மீது அஃபையர் என்று கூறிவிட்டார்.

என்ன தைரியம்?

என்ன தைரியம்?

அவ்வளவுதான் ருத்ர தாண்டவம் ஆடுகிறார் ஷெரின். உனக்கு அறிவு இருக்கா? என்னுடைய ரிலேஷன்ஷிப்பை பற்றி பேச உனக்கு எந்த ரைட்ஸும் இல்லை. என்ன தைரியம் இருந்தா என்னிடமே அந்த வார்த்தையை சொல்லுவ என்று சரமாரியாக விளாசுகிறார்.

வெளியே காட்டவில்லை

வெளியே காட்டவில்லை

இதனால் என்ன செய்வதென்று புரியாமல் முழிக்கிறார் வனிதா. ஷெரினிடம் இருந்து கொஞ்சமும் இதனை எதிர்பார்க்காத வனிதா, தான் ஏதோ ஒரு தவறு செய்துவிட்டோம் என்பதை உணருகிறார். ஆனால் அதனை வெளியே காட்டாமல் தான் செய்வதும் பேசுவதும் சரிதான் என்று வாதாடுகிறார்.

கவின் எண்ண ஓட்டம்

கவின் எண்ண ஓட்டம்

வனிதா - ஷெரின் இடையே ஏற்பட்ட சண்டையால் பிக்பாஸ் வீடு ஸ்தம்பித்து போயுள்ளது. இதைத்தான் எதிர்பார்த்தோம் என்று சொல்லாமல் அமைதியாக வேடிக்கை பார்க்கிறார் கவின்.

அபிராமி சாமியாட்டம்

அபிராமி சாமியாட்டம்

பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தவுடன் அபிராமி - முகென் ரிலேஷன்ஷிப்பை முறித்துவிட நினைத்த வனிதா, அபிராமிக்கு வேப்பிலை அடித்தார். வனிதாவின் வார்த்தையை கேட்டு சாமியாட்டம் ஆடினார் அபிராமி.

அபி வெளியேற்றம்

அபி வெளியேற்றம்

இதனால் முகெனுக்கும் அபிராமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதன் வெளிப்பாடாக முகென் காப்பாற்றப்பட்டு அபிராமி வெளியேற்றப்பட்டார்.

மது வெளியேற்றம்

மது வெளியேற்றம்

இதேபோல் மதுமிதாவை ஏற்றிவிட்டார். அதனை கேட்ட மதுமிதா தேவையில்லாமல் பேசியதால், ஹவுஸ்மேட்ஸ் கோபத்திற்கு ஆளாகி கார்னர் செய்யப்பட்டார். இதனால் ஏற்பட்ட பிரச்சனையால் அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

குரங்காகிவிட்டது

குரங்காகிவிட்டது

இந்நிலையில் இன்று ஷெரினை ஏற்றிவிட்டார் வனிதா. ஆனால் அவது தனக்கு எதிராகவே திரும்பும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. மொத்தமாக கத்தி கூப்பாடு போட்டு வனிதாவை டேமெஜ் செய்துவிட்டார் ஷெரின். வனிதா பிள்ளையார் பிடிக்க போய் அது குரங்காகிவிட்டது என்கின்றனர் மக்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X