twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கேரளா மீன்கறி சாப்பிடனுமா? “உங்கள் கிச்சன் எங்கள் செஃப்” பாருங்க!

    By Mayura Akilan
    |

    சமையல் நிகழ்ச்சி என்றாலே இல்லத்தரசிகளுக்கு கொண்டாட்டம்தான். இவர்களுக்காகவே அனைத்து சேனல்களும் சமையல் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றன. சமையல் நிகழ்ச்சியில் பல புதுமைகளைச் செய்து வரும் புதுயுகம் தொலைக்காட்சியின் தனித்தன்மை வாய்ந்த நிகழ்ச்சி "உங்கள் கிட்சன் எங்கள் ஃசெப்"

    நேயர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களுக்கு புதுமையான உணவ வகைகளை சமைக்கக் கற்றுக்கொடுக்கிறார் செஃப் மால்குடி கவிதா. புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிவரை மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

    செஃப் பயணம்

    செஃப் பயணம்

    நேயர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சென்னை மட்டுமில்லாது தமிழகம் முழுக்க பயணம் செய்து சுவையான உணவுகளை தயாரிக்க உதவுகிறார்.

    சமையல் ராணிகளுக்கு டிப்ஸ்

    சமையல் ராணிகளுக்கு டிப்ஸ்

    இரண்டு பிரிவுகளாக வரும் நிகழ்ச்சியின் முதல் பகுதியில் வீட்டில் உள்ளவர்கள் தயாரிக்கும் உணவு குறித்து ஆலோசனை வழங்குகிறார். பின்னர் அவர்களின் விருப்பத்திற்கேற்ற உணவினை தயாரித்துக்கொடுப்பது நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக விளங்குகிறது.

    கேரளா ஸ்பெஷல்

    கேரளா ஸ்பெஷல்

    வரும் வாரங்களில் சிறப்பு உணவாக சிக்கன் மபோஸ், தால் பலக் கோஷ், ஜகல் மசாலா பூரி ,கேரளா ஸ்பெஷல் பிஷ் கறி செய்து சுவையான உணவுகளை காண்பிக்கபடுகிறது.

    கேரளா தமிழர்கள்

    கேரளா தமிழர்கள்

    தற்போது முதன்முறையாக கேரளாவில் வாழும் தமிழர்களின் வீடுகளுக்குச்சென்று நிகழ்ச்சிக்கு கூடுதல் சுவையூட்டுகிறார் செஃப் கவிதா. இந் நிகழ்ச்சி நமது புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

    English summary
    This Is A Reality Cookery Show A Lively Program Meant For Women, A Female Chef Visits The House Of A Viewer , Prepares And Shares News Food Items And method, The Spills Of The Chef And The Individuality Of The House Holder Would Be Reflected In The Programs.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X