பிக்பாஸில் காட்டப்படாத காட்சி.. தட்டுதட்டா அள்ளி உடுறாருபா.. வைத்யாவை வச்சு செய்யும் சாண்டி & கோ!

Recommended Video

Bigg Boss 3 Tamil Smoke Unseen: ஷெரின் புகைபிடிக்கும் புகைப்படம்

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் காட்டப்படாத சுவாரசிய காட்சி ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் நாள்தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வருகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல்ஹாசன் அகம் டிவி வழியாக அகத்திற்குள் சென்று போட்டியாளர்களுடன் உரையாடுகிறார்.

பிக்பாஸ் வீட்டின் புதிய கேப்டனாக சாக்ஷி அகர்வால் நேற்று முதல் பொறுப்பேற்றுள்ளார். இதையடுத்து குக்கிங், கிளினீங், பாத்ரூம் கிளினீங், டிஷ் வாஷ் என அனைத்து துறைக்கும் டீம் பிரிக்கப்பட்டது.

காட்டப்படாத காட்சி

காட்டப்படாத காட்சி

அதன்படி குக்கிங் டீமில் சரவணன், மதுமிதா, கவின் மற்றும் சாண்டி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் வரும் இன்றைய நிகழ்ச்சியின் புரமோவுக்காக காத்திருந்தபோது சமூக வலைதளத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காட்டப்படாத காட்சி ஒன்று வைரலானது.

 சொரணை வரட்டும்

சொரணை வரட்டும்

அதில் கவினும், சாண்டியும் பெட்ரூமில் பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது உள்ளே வரும் சரவணன் என்ன என கேட்கிறார், அதற்கு உப்பு ஏன் இவ்வளவு போடுறீங்க என கேட்டதற்கு சொரணை வரட்டும்னு சொல்றீங்க என்கிறார் சாண்டி.

எப்படி கோபிக்காமல் இருப்பார்

எப்படி கோபிக்காமல் இருப்பார்

அதில் என்ன தவறு என சரவணன் கேட்க, அவர் அதற்கு பிறகு திரும்பியே பார்க்கவில்லை என்கிறார் சாண்டி. உடனே ஏன் கோபித்துக்கொண்டாரா என்று சரவணன் கேட்க, அதற்கு கவின் எப்படி கோபிக்காமல் இருப்பார் என்கிறார்.

நமக்கும் சிரிப்பு

நமக்கும் சிரிப்பு


அப்போது கேமரா மோகன் வைத்யாவைதான் சுற்றி சுற்றி காட்டுகிறது. ஆகையால் அவர்தான் சிக்கியது என அறிகிறோம்.
இந்த விஷயத்தை பேசி மூன்று பேரும் சிரித்துக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் சிரிக்கும் போது நம்மை அறியாமல் நமக்கும் சிரிப்பு வந்து விடுகிறது.

அள்ளி உடுறாருபா

அள்ளி உடுறாருபா

இதைத்தொடர்ந்து சரவணன், நீ இவ்ளோ சாப்பிட்டாய், அவன் இவ்ளோ சாப்பிட்டான், நான் இவ்ளோ சாப்பிட்டேன் கையளவை சிறியதாக காட்டுகிறார். ஆனால் அவர் மட்டும் என கையளவை பெரியதாக காட்டி அள்ளி உடுறாருபா என சைகையாலேயே காட்டுகிறார் சரவணன்.

பவுல் பவுலா உடுறாரு

பவுல் பவுலா உடுறாரு

இதனை பார்த்து சாண்டியும் கவினும் சிரிக்கின்றனர். உடனே சாண்டி சாப்பிடட்டும் உடுங்க சார் என்கிறார். ஆனால் சரவணனோ வயசு இருக்கிறது, இந்த வயதில் இப்படியா சாப்பிடுவது என்று இரண்டு சப்பாத்தி, ஒரு பவுல், ரெண்டு பவுல் கேரட், ஒரு பவுல் பருப்பு, ஒரு குண்டான் அப்பளம் என பட்டியல் போடுகிறார்.

நீங்களே போய் பாருங்க

அப்போதும் கேமரா மோகன் வைத்யாவைதான் சுற்றி சுற்றி காட்டுகிறது. உங்களுக்கு சந்தேகமாய் இருந்தால் நீங்களே போய் பாருங்கள் என்கிறார் சரவணன். இதனைத் தொடர்ந்து அந்த மூன்று பேரும் அப்படி சிரித்து மகிழ்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X