அய்யய்யோ.. முடியல சாமி.. அபி மற்றும் வனிதாவின் காட்டப்படாத சகிக்க முடியாத பேச்சு!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் அபிராமி, வனிதா, ரேஷ்மா, ஷெரின் ஆகியோர் புரணி பேசும் டிவியில் காட்டப்படாத பல காட்சிகள் வைரலாகி வருகின்றன.

விஜய் டிவியில் நாள்தோறும் இரவு 9.30 முதல் 10.30 மணி வரை பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதற்கான புரமோக்கள் பகல் நேரங்களில் வெளியாகி வருகின்றன.

அதில் பல புரமோக்களும் எபிசோடுகளும் சம்பந்தமில்லாமல் உள்ளன. புரமோக்களில் காட்டப்படும் பல விஷயங்கள் எபிசோடில் காண்பிக்கப்படுவதில்லை.

காட்டப்படாத காட்சிகள்

காட்டப்படாத காட்சிகள்

இந்நிலையில் பிக்பாஸில் காட்டப்படாத காட்சிகள் என ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. அதில் வனிதா, ஷெரின், ரேஷ்மா, அபிராமி ஆகிய நான்கு பேரும் பெட்ரூமுக்குள் அமர்ந்து கொண்டு மதுமிதா குறித்தும் மீரா குறித்தும் படு கேவலமாக புரணி பேசுகின்றனர்.

செத்துடுடா, ஓடிடுடா

செத்துடுடா, ஓடிடுடா

அதிலும் அபிராமி, மதுமிதாவை டார்கெட் செய்து பேசி வருகிறார். ஒருவைர பற்றி பேசும் போது தெரியாத மாதிரி உட்காந்திருப்பவர்களை பார்த்தாலே எனக்கு பிடிக்காது என்கிறார். மேலும் மீரா, மதுவிடம் சாப்டியாடா என கேட்பதை வைத்து சாப்ட்டியாடா, செத்துடுடா, ஓடிடுடா என கொடூரமாக கிண்டலடிக்கிறார்.

உன்னுடைய எனிமி என்னுடைய நண்பர்

உன்னுடைய எனிமி என்னுடைய நண்பர்

இதைத்தொடர்ந்து பேசும் வனிதா, இதுதான் பாடம் அங்கே மது ஒரு புதிய கேங்கை ஃபார்ம் செய்கிறாள், உன்னுடைய எனிமி என்னுடைய நண்பர் என்பதை போல் மது செய்வதாகவும் கூறுகிறார்.

ஃபேக்கி ஃபேக்கி ஃபேக்கி

ஃபேக்கி ஃபேக்கி ஃபேக்கி

இதற்கு பதிலளிக்கும் அபிராமி எவ்வளவு ஃபேக்காக உள்ளார் என்றபடியே ஃபேக்கி ஃபேக்கி ஃபேக்கி என வெஸ்டர்ன் ஸ்டைலில் பாடுகிறார். பின்னர் அவள் நம்மை கிராஸ் செய்யும் போது ஃபேக்கி ஃபேக்கி என பாட வேண்டும் என்று கூறியபடியே வலிப்பு வந்ததை போல ஆடுகிறார் அபிராமி.

உசுப்பேற்றிவிடும் வனிதா

உசுப்பேற்றிவிடும் வனிதா

இதைத்தொடர்ந்து அதுபோன்ற ஒரு பாடலை கிரியேட் செய்யுங்கள் என்று அபிராமி, ஷெரின், மற்றும் ரேஷ்மாவை உசுப்பேத்தி விடுகிறார் வனிதா. மேலும் தமிழ் பெண் விஷயத்தில் நான் சப்போர்ட் செய்வேன் என்று மதுமிதா எதிர்பார்த்ததாகவும் ஆனால் நான் செய்யாததால் இப்படி மாறிவிட்டாள் என்றும் கூறுகிறார் வனிதா.

கேமரா இருப்பதை மறந்துவிட்டனர்

அப்போது இன்று கூட அந்த விஷயத்தில் உங்களை இழுத்து பேசினாலே என அபிராமி கூற, அன்று ஒத்து ஊதி அபிராமிக்கு எதிராக பேசிவிட்டு, இன்று அப்படியே நல்லவரை போல் பேசுகிறார் வனிதா. மேலும் மதுவை கேவலப்படுத்தும் வகையில் கேமரா இருப்பதை மறந்து 4 பேரும் புரணி பேசுகின்றனர். இந்த வீடியோ வைரலாகியுள்ளது. அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு..!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X