சன் சூப்பர் குடும்பம் டைட்டில் வென்ற உறவுகள்

By Mayura Akilan

சன் டிவியில் சூப்பர் குடும்பம் நிகழ்ச்சியில் உறவுகள் சீரியல் குடும்பம் வெற்றி பெற்று சன் சூப்பர் குடும்பம் கோப்பையை தட்டிச் சென்றது.

சன் டிவியின் மிகப்பெரிய ரியாலிட்டி நிகழ்ச்சி சன் சூப்பர் குடும்பம். சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலைச் சேர்ந்தவர்கள் குடும்பம் குடும்பமாக பங்கேற்று பாட்டு, நடனம், நாடகம் என்று பட்டையை கிளப்பினார்கள்.

18 குடும்பங்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் இறுதிச் சுற்றுக்கு 4 குடும்பங்கள் பங்கேற்றன. பரபரப்பாக நடைபெற்ற இறுதிச் சுற்றில் போட்டி பலமாக இருந்தது. கடைசியில் அதிரடியான நடனத்தின் மூலம் உறவுகள் குடும்பம் வெற்றி பெற்றது.

சன் குடும்பத்தில் 18

சன் குடும்பத்தில் 18

மருதாணி, உறவுகள், முத்தாரம், வெள்ளைத்தாமரை, தியாகம், இளவரசி, அத்திப்பூக்கள் பிள்ளைநிலா,திருமதி செல்வம், தங்கம், தென்றல், செல்லமே, அழகி,உள்ளிட்ட 18 குடும்பங்களின் கடும் போட்டி தொடங்கியது.

நான்கு குடும்பம்

நான்கு குடும்பம்

கார்த்திகைப் பெண்கள், பிள்ளை நிலா, உறவுகள், இளவரசி ஆகிய நான்கு குடும்பங்கள் இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தன. பாட்டு நடன என போட்டி பலமாக இருந்தது. கார்த்திகைப் பெண்கள் குடும்பத்தினர் பாடல்கள் பாடினர். ஆனால் அது நடுவர்களை கவரவில்லை.

சொதப்பிய பிள்ளை நிலா

சொதப்பிய பிள்ளை நிலா

பிள்ளை நிலா குடும்பத்தைச் சேர்ந்த ராகவ் பாட்டுப் பாடினார். ஆனால் அவருடைய பாடல் நடுவர்களை கவரவில்லை. மதிப்பெண்கள் குறைவாகவே கிடைத்தது.

இளவரசி

இளவரசி

இளவரசி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நன்றாக நடனமாடி நடுவர்களை கவர்ந்தனர். இதனால் வெற்றிக் கோப்பை யாருக்கு என்பதில் போட்டி அதிகமானது.

உறவுகள் உற்சாகம்

உறவுகள் உற்சாகம்

உறவுகள் குடும்பத்தினர் குருவுக்கு சமர்ப்பணம் என்று கூறி நடனமாடினர். நடனஇயக்குநர் வாமன் - மாலினி மகள் நீபா, காயத்ரி ஆகியோர் அசத்தலான நடனமாடி பார்வையாளர்களை மட்டுமல்லாது நடுவர்களையும் கவர்ந்தனர்.

நடுவர்கள் உற்சாகம்

நடுவர்கள் உற்சாகம்

நடுவர்கள் மீனா, டி.ராஜேந்தர், சங்கீதா ஆகியோர் உறவுகள் குடும்பத்திற்கு மதிப்பெண்களை அள்ளி வழங்கினர். சங்கீதாவின் கலக்கல் நடனமும், அவரது கணவர் கிரிஷின் பாடலும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. சங்கீதாவை நடனமாட அழைத்தார் கிரிஷ் ஆனால் அவர் வரவில்லை மீனாவை அழைத்து நடனமாடினார். யம்மாடி யாத்தாடி பாடலுக்கு டி.ராஜேந்தரும் குத்தாட்டம் போட்டார்.

பட்டம் வென்ற உறவுகள்

பட்டம் வென்ற உறவுகள்

நடுவர்கள் ரிசல்டை அறிவிக்கும் போது பங்கேற்பாளர்களுக்கு ஹார்ட்பீட் எகிறியது. கார்த்திகைப் பெண்கள் குடும்பம் 4 வது இடம் பெற்றது. பிள்ளை நிலா 3 வது இடத்தையும் இளவரசி குடும்பம் 2வது இடத்தையும் பெற்றது. உறவுகள் குடும்பம் வெற்றிக் கோப்பையை வென்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X