அடடே.. அன்பே ஆருயிரே ஊர்வசி இப்போ கலர்ஸ் தமிழ் டிவியில்.. அதே பாணி!

சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியல் நடுத்தர குடும்பத்தில் வசிக்கும் ஒரு புதுமண தம்பதி விவாகரத்து வாங்கணும்னா எத்தனை பாடுகள் பட வேண்டி இருக்கும் என்பதை தெளிவாக புரிய வைக்குது.

சந்தோஷ் ஜனனியை கல்யாணம் பண்ணிக்க வேண்டியதா போயிருது. ஆனா, சந்தோஷ் ஏற்கனவே சக்தின்னு ஒரு பொண்ணை காதலிக்கறான். அவளை மறக்கமுடியாதுன்னு ஜனனிகிட்ட சொல்லிடறான்.

அப்புறமென்ன இளசுகள் ரெண்டும் சேர்ந்து யாருக்கும் தெரியாம விவரத்துக்கு விண்ணப்பிக்கறாங்க. இப்போதான் விவாகரத்து வாங்குறது எவ்ளோ கஷ்டம்..அதுவும் யாருக்கும் தெரியாம வாங்கணும்னு முயற்சிக்கறது எவ்ளோ கஷ்டம்னு தெரியுது.

நடிகை ஊர்வசி

நடிகை ஊர்வசி

சந்தோஷ் வக்கீல், சைக்யாட்ரிஸ்ட் ஒருத்தரை மீட் பண்ணுங்கன்னு சொல்லி சந்தோஷை அனுப்பி வைக்கறார். அங்கே போனா சைக்யாட்ரிஸ்ட் நடிகை ஊர்வசிங்க. என்னைமா நடிக்கிறார்.

அன்பே ஆருயிரே

அன்பே ஆருயிரே

எஸ்ஜே.சூர்யாவின் அன்பே ஆருயிரே படத்தில் கொஞ்ச நேரம் வந்து அசத்தி இருப்பார்.வயிறு குலுங்க சிரிக்க வச்சிருப்பார். அதே போலதாங்க இந்த சீரியலிலும் நடிச்சு சிரிக்க வச்சிருக்கார்.

கலர்ஸ் தமிழ் டிவி

கலர்ஸ் தமிழ் டிவி

சத்தமில்லாம நடிகை ஊர்வசி கலர்ஸ் தமிழ் டிவி சேனலில் நடிக்கிறார் .இதுவரை சீரியல் எதிலும் இவர் நடிச்சதில்லை. இது இவருக்கு பக்கா பொருத்தமான கேரக்டரா அமைஞ்சு இருக்கு.

ஊர்வசி

ஊர்வசி

சந்தோஷ் உள்ளே வரும் போது ரூமில் யாருமே இல்லை.அவன் டாக்டருக்கு எதிரில் இருக்கும் நாற்காலியில் உட்கார்றான். டேபிளுக்கு கீழ குனிஞ்சுகிட்டு இருந்த ஊர்வசி திடீர்னு எழுந்திருக்கிறார்.

ஷாக்

ஷாக்

ரெண்டு பேரும் ஷாக் ஆகறாங்க...இவன் பயப்பட்ட, ஊர்வசி பயப்பட... பயந்துட்டியா.. ஒண்ணுமில்லை.. இந்த ஸ்மைலிங் பால் கீழ விழுந்துருச்சு அதான் தேடினேன்னு சொல்றாங்க.

உங்களை பார்க்க

உங்களை பார்க்க

என்ன விஷயம் சொல்லுப்பான்னு சொல்ல மேடம் லாயர் உங்களை பார்க்க சொன்னார்னு சொல்றான். ஊர்வசி முடியை சரி பண்ணி உட்கார்ந்துட்டு, பாரு..பார்த்துட்டே இல்ல.. போன்னு சொல்றாங்க

ஊர்வசி

ஊர்வசி

சந்தோஷ் உட்கார்ந்தே இருக்கான்..கிளம்புன்னு சொல்றேன்னு ஊர்வசி சொல்ல, தயங்கி மறுபடியும் உட்கார்ந்தே இருக்கான்.போன்னு சொல்றேன்னு மறுபடியும் ஊர்வசி சொல்ல, எழுந்து போறான்.

விவாக ரத்து

விவாக ரத்து

ஏய்..நில்லு..போன்னு சொன்னா போயிடுவியா? லாயர் என்ன சொன்னாரு...பேசிட்டுத்தானே வர சொன்னார்.. நீபாட்டுக்கு போறே..இப்படித்தான் சட்டு சட்டுன்னு முடிவெடுக்கறது..அப்புறம் விவாக ரத்து வேணும்னு அலையறதுன்னு சொல்றாங்க..

சிரிச்சா அழகா

சிரிச்சா அழகா

பயந்துட்டியா..உன்னை சிரிக்க வைக்கறது கஷ்டம்.. அதான் இப்படி செய்தேன்..சிரி..சிரின்னு சொல்றாங்க. சந்தோஷ் சிரிக்க சிரிச்சா அழகா இருக்கே..சரி இப்போ சொல்லு என்ன பிரச்சனைன்னு கேட்கறாங்க.

வேற ஒரு பொண்ணை

வேற ஒரு பொண்ணை

மேடம் நான் லவ் பண்றேன் மேடம்னு சொல்றான்.. நல்ல விஷயம்னு ஊர்வசி சொல்ல, ஆனா,வேற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிகிட்டேன்னு சொல்றான். அடடா இது ரொம்ப நல்ல விஷயமா இருக்கேன்னு ஊர்வசி சொல்றாங்க.

வாழ்க்கையில

வாழ்க்கையில

அவளை மறக்கவும் முடியலை, இவ கூட வாழவும் முடியலைன்னு சொல்றான். திடீர்னு கோவமாயிடறாங்க ஊர்வசி.. ரெண்டு பொண்ணுங்களோட வாழ்க்கையில நீ விளையாடி இருக்கே... இப்போ மூணாவதா ஒரு பொண்ணுன்னு சொல்ல...

மூணாவதா யாரும்

மூணாவதா யாரும்

இல்லை மேடம்.. மூணாவதா யாரும்ன்னு அவன் சொல்லி முடிவுப்பதற்குள்..ஓ அப்படி ஒரு எண்ணம் இருக்கா உனக்கு... மூணாவதா இப்போ இந்த விஷயத்துல என்னையும் தலையிட வச்சுட்டேன்னு சொன்னேன்னு சொல்றாங்க..

சரியில்லை

சரியில்லை

சந்தோஷ் டாக்டரை பார்த்து மேடம் உங்களைன்னு சொல்லி முடிப்பதற்குள் டேய்..அப்படி பார்க்காதே..உன் பார்வை சரியில்லைடா.. மூணாவது பொண்ணு லிஸ்ட்ல என்னை சேர்த்துருவே..டேய்..நீ கிரிமினல் டா..எப்படிப்பட்ட ஆள்டா நீன்னு சொல்றாங்க

டிஸ்டன்ஸ்ல

டிஸ்டன்ஸ்ல

சந்தோஷ் எழுந்திரிச்சு நடக்க.. சந்தோஷ் அப்டியே டிஸ்டன்ஸ்ல நின்னு நான் சொல்றதை கேளுன்னு சொல்றாங்க..சொல்லுங்க மேடம்னு சொல்ல, அடுத்த தடவை வரும்போது உன் பொண்டாட்டியை கூப்பிட்டு வான்னு சொல்லிட்டு...

டாக்டரையே இப்படி பார்க்கறானேன்னு அன்பே ஆருயிரே படத்தில் நடிச்ச காட்சியை கண்முன் கொண்டு வந்து இருக்காங்க.

ஊர்வசி செம டாப் காமெடி நடிகை...!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X