சின்னத்திரையில் மீண்டும் ஊர்வசி
கன்னடத் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் சின்னத்திரையில் களம் இறங்கியுள்ளார் முன்னாள் கதாநாயகி ஊர்வசி.
முந்தானை முடிச்சு திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஊர்வசி. தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
கதநாயகி வாய்ப்பு முடிந்த உடன் குணசித்திர வேடங்களிலும், காமெடி நடிகையாகவும் சினிமாவில் நடித்து வருகிறார்.

சின்னத்திரையில் ஊர்வசி
ஊர்வசி தமிழ்,மலையாளம், கன்னடம் ஆகிய மூன்று மொழிகளையும் சரளமாக பேசக்கூடியவர். சினிமா வாய்ப்பு குறைந்த உடன் சின்னத்திரையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

மலையாள சேனல்களில்
சில ஆண்டுகளுக்கு முன்பு சன் டிவியில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடத்திய தங்கவேட்டை நிகழ்ச்சியை மலையாளத்தில் ஊர்வசி நடத்தினார்.

விளம்பரப்படங்களில்
இதனைத் தொடர்ந்து ஊர்வசி விளம்பரப்படங்களிலும், சில திரைப்படங்களிலும் நடித்து வந்தார்.

கன்னட சேனலில்
சிறிய இடைவெளிக்குப் பின்னர் இப்போது ஜீ கன்னடா தொலைக்காட்சியில் ‘கிரேஸி கப்பிள்' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி கடந்த டிசம்பர் 28ந் தேதி முதல் ஒளிபரப்பாகிறது.

நட்சத்திர தம்பதிகள்
இந்த நிகழ்ச்சியில் கன்னட சினிமாவின் நட்சத்திர தம்பதிகளை வரவழைத்து அவர்களுக்குள் இருக்கும் நெருக்கம், பிணைப்பு, பாசம், ஒற்றுமை ஆகியவற்றை வெளிக் கொண்டு வரும் நிகழ்ச்சி.

நல்ல வரவேற்பு
இதில் கணவன் மனைவி இருவருக்கும் கணிசமான பரிசுகளும் வழங்கப்படுகிறது. இந்த போட்டியில் ஜெயிக்கும் தம்பதியினருக்கு ரூ 50000 ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது. இதன் முதல் எபிசோடே பலத்த வரவேற்பை பெற்றுள்ளதாம். கிரேஸி கப்பிள் நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.


Click it and Unblock the Notifications











