லட்சுமிபதி உயிர்பிழைப்பானா?.... உதிரிப்பூக்கள் தொடரில் திருப்பம்!

By Mayura Akilan

சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் உதிரிப்பூக்கள் தொடர் நாயகன் லட்சுமிபதி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கிறான். இரண்டு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடும் அவனுக்கு சிறுநீரகம் கிடைக்குமா? என்ற கேள்வியோடு தொடர் நகர்கிறது.

உதிரிப்பூக்கள் தொடரின் நாயகி சக்திக்கு தான் தன் வளர்ப்புத் தந்தை சிவநேசனுக்கு ஒரு பெண் இருக்கிறாள் என்ற உண்மை தெரிய வருகிறது அவளை எப்படியாவது கண்டுபிடித்து சிவநேசனிடம் சேர்க்க ஏற்பாடு செய்து வருகிறாள்.

ஷக்தி தேடிக்கொண்டிருக்கும் என்ற அந்தப் பெண்ணின் பெயர் மேகா. இப்போது இருப்பது சென்னையில். சிவநேசன் தான் தன் தந்தை என்று தெரியாமல் அவனிடமே இரண்டொரு தடவை சண்டைபோட்டிருக்கிறாள். ஆரம்பத்தில் வார்த்தைகளில் வெளிப்பட்ட கோபம் பிறகு பழிவாங்கலாக மாறி, ஒருகட்டத்தில் சிவநேசனை போலீஸ் ஸ்டேஷன் வரை கொண்டு சேர்த்தது. ஆனால் அடுத்தடுத்து நடந்த சில நெகிழ்வு சம்பவங்களால் இப்போது மேகா சிவநேசனிடம் நட்பு பாராட்டுகிறாள்.

காணாமல் போன குழந்தை

காணாமல் போன குழந்தை

இந்த நேரத்தில் தான் சிறுவயதில் காணாமல் போன தன் குழந்தை உயிரோடு இருக்கிறாள் என்ற தகவல் சிவநேசனை எட்ட, அதை தன் மகள் என்று தெரியாமல் மேகாவிடமே சொல்லி பரவசப்படுகிறான். இந்த தகவல் மேகாவையும் மகிழ்ச்சிப்படுத்துகிறது.

குழந்தையைத் தேடி பயணம்

குழந்தையைத் தேடி பயணம்

அப்போதே அந்தக் குழந்தையை தேடிப்போகிறார்கள். அந்த குழந்தை பிறந்ததும் அதற்கு பிரசவம் பார்த்த நர்சிடமே அந்தக் குழந்தை தங்கி விட்டதாக அவர்கள் அறிகிறார்கள். உடனே நர்ஸ் வேலை பார்த்த ஆஸ்பத்திரிக்கே வந்து விசாரித்தபோது தான், நர்ஸ் பணியில் இருந்து ஓய்வு பெற்ற விஷயம் தெரிய வருகிறது. ஒருவழியாக பென்ஷன் ஆபீசில் அந்த நர்சை கண்டு பிடிக்கிறார்கள். ஆனால் நர்சோ அந்தக் குழந்தையை தன் தம்பி வளர்க்க ஆசைப்பட்டான் என்பதால், குழந்தையை அவனிடம் கொடுத்து விட்டேன் என்று சொல்லி அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறார்.

வெளியேறிய லட்சுமிபதி

வெளியேறிய லட்சுமிபதி

ஷக்தி காணாமல் போன பின்னர் அவளது கணவன் லட்சுமிபதி தன் வீட்டில் இருக்க வெறுப்புற்று அங்கிருந்து சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறுகிறான். மேகா இருக்கும் வீட்டில் ஒரு போர்ஷன் காலியாய் இருக்க...அங்கே தங்குகிறான்.

சிவநேசனுடன் மோதும் மேகா

சிவநேசனுடன் மோதும் மேகா

மேகா ஆரம்பத்தில் சிவநேசனை சிக்கலில் மாட்டிவிட வேண்டும் என்பதற்காக ஒரு ரவுடியிடம் பேரம் பேசிய காலகட்டத்தில், மேகாவின் அழகில் மயங்கும் அவன், அவளை வேட்டையாட முயலுகிறான். அந்த நேரத்தில் லட்சுமிபதி மேகாவை காப்பாற்றி ரவுடியை போலீசில் ஒப்படைக்க, ஜாமீனில் வெளிவரும் ரவுடி கூலிஆட்களை செட் அப் செய்து லட்சுமிபதியை கண்மூடித்தனமாக தாக்குகிறான்.

ஆபத்தில் லட்சுமிபதி

ஆபத்தில் லட்சுமிபதி

இந்த தாக்குதலில் லட்சுமிபதியின் கிட்னியில் பாதிப்பு நேர, மாற்று சிறுநீரகம் கிடைத்தால் தான் அவனை காப்பாற்ற முடியும் என்ற நிலை. லட்சுமிபதிக்கு சிறுநீரகம் தர அவன் குடும்பத்தில் யாரும் தயாரில்லை. ஆளுக்கொரு சாக்குப்போக்குசொல்லி நழுவிக் கொள்கிறார்கள்.

தங்கையின் கரிசனம்

தங்கையின் கரிசனம்

வீட்டை எதிர்த்து ரவியை கல்யாணம் பண்ணிக் கொண்ட அலமேலுவின் இளைய மகள் கருணாம்பிகையும் அவள் தன் காதல் கணவனும் வந்து தங்கள் கிட்னியை தரத் தயாராகிறார்கள். இந்த உதவும் பட்டியலில் மேகாவும் முன்னிற்க, ஆச்சரியமாய் அவள் கிட்னிதான் பொருந்துகிறது. ஆபரேஷனும் வெற்றிகரமாய் நடக்கிறது.

சுயநலம் புரிகிறது

சுயநலம் புரிகிறது

சுயநலம் கொண்ட தன் மகள்களையும் மருமகன்களையும் அலமேலு அம்மாள் இப்போது தான் புரிந்து கொள்கிறாள். இப்போது மேகாவை அவள் மிகவும் மரியாதையுடன் பார்க்கத் தொடங்குகிறாள்.அவளே தன் மருமகளாக வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறாள்.

சக்தியின் வாழ்க்கை

சக்தியின் வாழ்க்கை

அலமேலுவின் பிடிவாதம் ஜெயித்து மேகா-லட்சுமிபதி திருமணம் நடக்குமா? அப்படி நடந்தால் உயிரோடு இருக்கும் ஷக்தியின் எதிர்காலம்? என்னவாகும் என்ற கேள்வி எழுகிறது.

நிலாவின் வாழ்க்கை

நிலாவின் வாழ்க்கை

தட்சிணாமூர்த்தியின் இளைய மகள் நிலா காதலிக்கும் இளைஞன் நல்லவனில்லை. அதுதெரியாமல் அவள் தந்தை தட்சிணாமூர்த்தி அவர்கள் திருமணத்துக்கு ஓ.கே. சொல்லி விடுகிறார். ஆனால் அவன்நல்லவன் இல்லை என்று தெரிந்து கொள்ளும் வளர்ப்புத் தந்தை சிவநேசன் என்ன பண்ணப் போகிறார் என்ற பல அதிரடித் திருப்பங்களுடன் 400வது எபிசோடை நோக்கி நகர்கிறது என்கிறார் தொடர் இயக்குநர் விக்ரமாதித்தன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X