Nila serial: ஐயோடா.. நிலா வீட்டில் தல வாலி பட சீன்!

சென்னை: சன் டிவியின் நிலா சீரியலில் வாலி படத்தின் தல சிம்ரனுக்கு குடுத்த டிரபுள் சீன் வருது பாஸ்.. அதாவது நிலாவுக்கு சஞ்சய் தொல்லை தர்றான். சிம்ரனுக்கு அஜீத் கொடுத்தது போல.

நீலாம்பரி மகன் சஞ்சய், இவனுக்கு நிலாவை கட்டி வைக்க ஆசைப்படறாங்க நீலாம்பரி.ஆனா,சஞ்சய் நல்ல பையன் இல்லை...அதோட நிலா கார்த்திக்கை லவ் பண்ணினா...அதனால கல்யாணம் நடக்கலை.

ஆனா, நிலாவை தன் வீட்டு மருமகளாக கொண்டு வந்தால்தான்,அவள் அப்பா ஸ்ரீதர் நிலாவுக்கு எழுதி வச்ச சொத்துக்களை அடையலாம்னு நீலாம்பரி தன் தம்பி அசோக்குக்கு ரெண்டாம் தாரமா கல்யாணம் பண்ணி வைக்கவும் முயற்சிக்கறாங்க.

ஸ்ரீதர் அப்பா

ஸ்ரீதர் அப்பா

நிலாவின் அப்பா ஸ்ரீதரும், நீலாம்பரியும் தொழில் பார்ட்னர்ஸ். ஸ்ரீதரை பிடிச்சுப்போக நீலாம்பரி தன்னை கல்யாணம் செய்துக்க சொல்லி ஸ்ரீதரிடம் கேட்கிறாள்.எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிருச்சுன்னு அப்போதுதான் ஸ்ரீதர் சொல்ல நீலாம்பரி ரொம்ப கடுப்பாகிடறாங்க. அவரின் சொத்தை அடைய ஸ்ரீதரை கொலை செய்துட்டதா நினைச்சுகிட்டு இருக்காங்க. ஆனால், ஹைதராபாத்தில் ஸ்ரீதர் இஸ்லாமியராக மாறி கார் ஓட்டிக்கிட்டு இருக்கார்.

அசோக் கல்யாணம்

அசோக் கல்யாணம்

அப்பா அம்மாவைத் தேடி ஹைதராபாத் போன நிலா எப்படியோ நீலாம்பரியின் திட்டங்களை தெரிந்துகொண்டு , நீலாம்பரியின் தம்பி அசோக்கை கல்யாணம் செய்துகிட்டு நீலாம்பரி வீட்டுக்கு வர்றா. எல்லாரும் ஷாக் ஆகிடறாங்க... சரி கல்யாணம்தான் அவங்களே செய்துகிட்டாங்க ரிஷப்ஷன் வச்சு கல்யாணம் நடந்த விஷயத்தை அறிவிச்சுடலாம்னு நீலாம்பரி முடிவு செய்துடறாங்க.

அசோக் நிலா

அசோக் நிலா

கல்யாண ரிஷப்ஷனில் கார்த்திக்கை சந்திக்கறா நிலா.. அவன் யாருக்கும் தெரியாமல் வந்திருக்கான். அவனை பார்த்ததும் நிலா கட்டிக்கறா. கொஞ்ச நாளைக்கு எல்லாம் நடிப்புதானே நிலா..நீ பயப்படாதே...நான் எதுவும் தப்பா நினைக்க மாட்டேன்னு சொல்றான். இப்படி இவங்க ரெண்டு பேரும் பேசிகிட்டு இருந்ததை சஞ்சய் வீடியோ எடுத்துக்கறான். என் மாமாவை கல்யாணம் செய்துகிட்டு காதலன் கூட ரொமான்ஸ் பண்றியா.. இருக்குடி உனக்குன்னு சொல்லிக்கறான் சஞ்சய்.

பொண்டாட்டியா வாழு

பொண்டாட்டியா வாழு

நிலாவிடம் அந்த வீடியோவை காமிச்சு, என் மாமாவை கல்யாணம் செய்துகிட்டு, காதலன் கூட ரொமான்ஸ் பண்றியா...இதை என் அம்மாகிட்ட காமிச்சால் என்னாகும்னு யோசிச்சு பாரு. அதை நான் செய்ய மாட்டேன்.எனக்கு உன்னை கல்யாணம் பண்ற அளவுக்கு பிடிக்கலேன்னாலும், ஒரு நாள் உன்னை அனுபவிக்கணும்னு ஆசைப்பட்டேன்.

அதுக்குள்ளே பொண்டாட்டியா

அதுக்குள்ளே பொண்டாட்டியா

உனக்கு மறு தாலி கட்ட இருக்காங்கள்ல அதுக்குள்ளே ஒரு நாள் எனக்கு சம்மதம் சொல்லி,ஒ ரு நாள் பொண்டாட்டியா வாழ்ந்துடு .அது போதும் எனக்கு. அதுக்கப்புறம் நீ என் மாமாவுக்கு பொண்டாட்டியா வாழ்ந்துக்கோ. பிறகு உன்னை நான் டிஸ்டர்ப்பன்னவே மாட்டேன்னு சொல்றான் சஞ்சய்.

சுட்டுக் கிட்டே இருந்தா எப்படி

சுட்டுக் கிட்டே இருந்தா எப்படி

வாலி படத்துல தல சிம்ரனுக்கும் இன்னொரு தலக்கும் முதலிரவு நடக்கறதுக்குள்ள தனக்கு வேணும்னு ஆசைப்பட்டார். அது மாதிரி சஞ்சய் நிலாவுக்கு ஆசைப்படறான். இப்படியே ஒவ்வொரு படமா எடுத்து சீனை சுட்டுச் சுட்டு விளையாடுங்கப்பா.. இதுக்கெல்லாம் எப்பத்தான் என்ட் கார்ட் போடப் போறாங்களோ.. சினிமாவை நிறுத்திட்டா சீரியல்களுக்கு கொஞ்சம் கஷ்டம்தான் போல.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X