ஆயுதபூஜை, விஜயதசமி: டிவியில் வடகறி, சரபம், கதிவஇ!
தொலைக்காட்சி சேனல்களில் ஆயுதபூஜை ஸ்பெசலாக வடகறி, சரபம், கதை திரைக்கதை வசனம் இயக்கம் ஆகிய திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன.
அடுத்த வாரம் காந்தி ஜெயந்தி ஆயுதபூஜை, விஜயதசமி என விடுமுறை தினங்கள் வரிசையாக வருகின்றன. இந்த நாட்களில் தமிழ் டிவி சேனல்களில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன.
அன்றைய தினம் பல சிறப்புத் திரைப்படங்களும் ஒளிபரப்பாக உள்ளன. சமீபத்தில் ரிலீஸ் ஆன புத்தம் புதிய திரைப்படங்களும் ஒளிபரப்பாக உள்ளன.

ஜீ தமிழில் வடகறி
ஜெய், ஸ்வாதி, சன்னிலியோன், நடித்த வடகறி திரைப்படம் அக்டோபர் 3ஆம் தேதி ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.

கலைஞரில் சரபம்
கலைஞர் தொலைக்காட்சியில் ஆயுதபூஜையன்று சிறப்புத் திரைப்படமாக சரபம் திகில் படம் ஒளிபரப்பாக உள்ளது.

விஜய் டிவியில் கதிவஇ
ஆயுதபூஜை சிறப்புத் திரைப்படமாக விஜய் டிவியில் பார்த்தீபன் நடித்த கதை திரைக்கதை வசனம் இயக்கம் ஒளிபரப்பாக உள்ளது.

555 ஜீ தமிழில்
நவராத்திரி ஸ்பெசல் திரைப்படமாக ஜீ தமிழ் டிவியில் வரும் ஞாயிறன்று பரத் நடித்த 555 ஒளிபரப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications











