Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
அஞ்சானை இப்படி அநியாயமா மாத்திட்டாங்களே!
விஜயதசமி விடுமுறைக்கு அஞ்சான் திரைப்படம் ஒளிபரப்ப உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு சன்டிவியில் முன்னோட்டம் போட்டார்கள். திடீரென்று என்ன ஆச்சோ?, ஏது ஆச்சோ? சூர்யாவின் இடத்தை வடிவேலு பிடித்துவிட்டார்.
அஞ்சான் படம் ஒளிபரப்பாகும் என்று சொல்லப்பட்ட நேரத்தில் வடிவேலு நடித்த தெனாலிராமன் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.
ஆயுதபூஜைக்கு பிரியாணி
சன் டிவியில் ஆயுதபூஜை தினத்தன்று நான் ஈ, பிரியாணி, பிரம்மா, ஆகிய மூன்று படங்கள் ஒளிபரப்பாகின்றன.
விஜயதசமிக்கு தெனாலிராமன்
விஜயதசமியான வெள்ளிக்கிழமையன்று காலை 11 மணிக்கு மீண்டும் அம்மன், மதியம் தனுஷ் நடித்த வேங்கை, மாலை 6 மணிக்கு வடிவேலு நடித்த தெனாலிராமன் திரைப்படம் ஒளிபரப்பாகிறது.
அஞ்சான் என்ன ஆச்சு
விஜயதசமி தினத்தன்று சூர்யா, சமந்தா நடித்த அஞ்சான் திரைப்படம் ஒளிபரப்பாகும் என சில தினங்களுக்கு முன்னர் முன்னோட்டம் போட்டனர். இந்தப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று ரிலீஸ் ஆனது. அதற்குள் டிவியில் ஒளிபரப்புகின்றனரே என்று கூறப்பட்ட நிலையில் திடீரென்று சூர்யாவின் இடத்தை வடிவேலு பிடித்துக்கொண்டார்.
தீபாவளிக்கு வருவாரா சூர்யா?
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரு வாரங்களே உள்ளதால் அஞ்சானை தீபாவளியன்று ஒளிபரப்பலாம் என்று ஒதுக்கிவிட்டார்களோ என்னவோ? எப்படியோ விஜயதசமி அண்ணன் சூர்யா வராவிட்டாலும் ஆயுதபூஜைக்கு தம்பி கார்த்தி வருகிறாரே என்கின்றனர் சினிமா ரசிகர்கள்.