விவாகரத்து கோரிய சின்னத்திரை ஜோடி: காரணம் 'அந்த' நடிகர் இல்லையாம்

By Siva

மும்பை: பிரபல தொலைக்காட்சி நடிகை வாபிஸ் தொராப்ஜி தனது கணவர் விவியன் தன்னை அடித்துக் கொடுமைப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சி நடிகர் விவியனும், நடிகை வாபிஸ் தொராப்ஜியும் காதலித்து கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்தனர். கடந்த 2016ம் ஆண்டில் இருந்து அவர்கள் பிரிந்து வாழ்கிறார்கள்.

இருவரும் விவாகரத்து கோரி புனே நீதிமன்றத்தை அணுகினார்கள். அந்த வழக்கு 3 ஆண்டுகளாக இழுத்துக் கொண்டிருக்கிறது.

வாபிஸ்

வாபிஸ்

வாபிஸ், விவியன் பிரிய மூன்றாவது நபர் காரணம் என்று பேசப்பட்டது. வாபிஸுக்கும், தொலைக்காட்சி நடிகர் விபுல் ராய்க்கும் இடையே ஏற்பட்ட நெருக்கத்தால் தான் அவர்கள் விவாகரத்து கோரியதாக செய்திகள் வெளியாகின.

கணவர்

கணவர்

விவியனுக்கும் தனக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதுடன் அவர் தன்னை அடித்து கொடுமைப்படுத்தியதாலும் தான் விவகாரத்து கோருவதாக வாபிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தது தற்போது தெரிய வந்துள்ளது.

பணம்

பணம்

வாபிஸ் விவியனிடம் ரூ. 2 கோடி பணம் கேட்டுள்ளார். அந்த பண விவகாரம் தொடர்பாகத் தான் வழக்கு இழுத்துக் கொண்டே போகிறது என்று பேச்சு கிளம்பியது. இதை பார்த்த வாபிஸ் கோபம் அடைந்து, நான் யாரிடமும் பணம் கேட்கவில்லை. நடந்தது பற்றி தெரியாமல் பேச வேண்டாம். நான் இந்த பேச்சு அடங்கும் என்று எதிர்பார்த்தால் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்று சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

பிரபலம்

பிரபலம்

உலகத்தில் நான் மட்டும் தானா விவாகரத்து செய்கிறேனா? வேறு எந்த பிரபலமும் செய்ததே இல்லையா? என் வாழ்க்கை ஒரு சர்கஸ் இல்லை. நான் எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருப்பதால் என் மனம் காயப்படவில்லை என்று அர்த்தம் இல்லை என வாபிஸ் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X