போகிற போக்கில் அனைவரின் முகத்திரையையும் கிழித்தெறிந்த வைஷ்ணவி

By Siva

Recommended Video

கமல் கண்டித்தும் திருந்தாத மஹத் - ஐஸ்வர்யா- வீடியோ

சென்னை:பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியபோது அனைவரின் முகத்திரையையும் கிழித்தெறிந்துவிட்டு சென்றார் வைஷ்ணவி.

பிக் பாஸ் 2 வீட்டில் இருந்து நேற்று வைஷ்ணவி வெளியேற்றப்பட்டார். ஐஸ்வர்யா வெளியே சென்றிருந்தால் பார்வையாளர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்.

பார்வையாளர்கள் எதிர்பார்ப்பதற்கு நேர் எதிராக செய்வதையே வழக்கமாக வைத்துள்ளார் பிக் பாஸ்.

வைஷ்ணவி

வைஷ்ணவி

வெளியே போக வேண்டாம். போனால் மிகவும் வருத்தமாக இருக்கும். நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். இன்னும் அது முடியவில்லை. வந்ததற்கு ஜெயித்துவிட்டு போக வேண்டும் என்று ஆசை இருக்கு என்று கமல் ஹாஸனிடம் கூறிய வைஷ்ணவி தான் வெளியேற்றப்பட்டார். இரண்டாவது முறை வாய்ப்பு கொடுத்ததை அவர் சரியாக பயன்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

கன்ஃபெஷன் அறை

கன்ஃபெஷன் அறை

வைஷ்ணவி தான் வெளியேற்றப்படுகிறார் என்பதை நேரடியாக கூறாமல் அவரை கன்ஃபெஷன் அறைக்கும், சென்றாயனை ஸ்டோர் ரூமுக்கும் அனுப்பி வைத்தார் கமல். போட்டியாளர்களோ ஒரு வேளை டபுள் எவிக்ஷனாக இருக்குமோ என்று பேசத் துவங்கிவிட்டனர். இல்லை என்றால் ஒயில்டு கார்டு மூலம் யாராவது வருகிறார்களோ என்று போட்டியாளர்கள் குழம்பினார்கள்.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

5 நிமிடம் கொடுத்தால் அனைவரின் முகத்திரையையும் கிழித்தெறிவேன் என்றீர்கள். அதை தற்போது செய்து காட்டுங்கள் என்று கமல் கூற வைஷ்ணவியும் அப்படியே செய்தார். ஐஸ்வர்யா உனக்கு கோபம் தான் பிரச்சனை, உனக்கு நீயே பிரச்சனை செய்கிறாய். டேனி நீ நேரடியாக பேசாமல் இருப்பது மற்றவர்களை காயப்படுத்துகிறது. சென்றாயன் எதையுமே காதில் வாங்குவது இல்லை. யாஷிகா ஜெயிக்க வேண்டும் என்று திட்டம் போடுகிறார். ரித்விகா முழுக்கதையை தெரியாமல் பேசுவதை நிறுத்த வேண்டும். மும்தாஜ் தனக்கு ஏதுவானதை மட்டுமே ஏற்றுக் கொள்கிறார் என்றார் வைஷ்ணவி.

தந்தை

வைஷ்ணவியின் பெற்றோர் மேடைக்கு வந்தனர். அவரின் தந்தை ஏதோ பேச முயன்றார். ஆனால் கமல் அதை கண்டுகொள்ளாமல் அவரை அனுப்பி வைத்துவிட்டார். வைஷ்ணவியின் பெற்றோரை கமல் நடத்திய விதம் சரியில்லை என்று நெட்டிசன்கள் புகார் தெரிவித்துள்ளனர். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் வாசகர்களே?

பிரச்சனை

பிரச்சனை

ரகசிய அறைக்கு செல்லும் முன்பு வைஷ்ணவி பிக் பாஸ் வீட்டில் பிரச்சனை செய்து கொண்டே இருந்தார், புறம் பேசினார். ரகசிய அறையில் இருந்து மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றபோது அவர் இருக்கும் இடம் தெரியாமல் இருந்துவிட்டார். அந்த காரணத்தால் தான் அவர் வெளியேற்றப்பட்டிருக்கக்கூடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X