பிக் பாஸ் 2 டைட்டிலை வெல்லப் போவது யார்?: சூசகமாக கூறிய வைஷ்ணவி

By Siva

Recommended Video

Daniel நல்லவர் | Mumtaj-ஐ Target செய்கிறார்கள்-Vaishnavi Open Talk! Bigg boss Vaishnavi Open Talk

சென்னை: பிக் பாஸ் 2 டைட்டிலை வெல்லப் போவது யார் என்று சூசகமாக தெரிவித்துள்ளார் வைஷ்ணவி.

பிக் பாஸ் 2 வீட்டில் இருந்து கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார் வைஷ்ணவி. முதல் முறை வெளியேற்றப்பட்ட அவரை ரகசிய அறையில் தங்க வைத்தனர். பின்னர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற வைஷ்ணவி வம்து தும்பு எதுவும் செய்யாமல் சமத்தாக மாறிவிட்டதாலோ என்னவோ வெளியேற்றிவிட்டார்கள்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அவர் பேட்டிகள் கொடுப்பதில் பிசியாக உள்ளார்.

ரித்விகா

ரித்விகா

பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களில் யார், யார் எல்லாம் இறுதி வரை வருவார்கள் என்று நெட்டிசன்கள் வைஷ்ணவியிடம் கேட்டனர். அதற்கு அவரோ, தாடி பாலாஜி, மும்தாஜ், ரித்விகா ஆகியோர் இறுதி வரை வருவார்கள் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார். எதற்காக பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கிறோம் என்பதை புரிந்து கொண்டு செயல்படுவது ரித்விகா மட்டுமே என்கிறார் வைஷ்ணவி.

டைட்டில்

டைட்டில்

தனக்கும் ரித்விகாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டாலும் அவர் மீது நம்பிக்கை உள்ளது என்கிறார் வைஷ்ணவி. வைஷ்ணவி சொல்வதை பார்த்தால் டைட்டிலை கைப்பற்றும் வாய்ப்பு ரித்விகாவுக்கு அதிகம் இருக்கிறது போலயே. வைஷ்ணவியின் பட்டியலில் மகத், திமிர் பிடித்த ஐஸ்வர்யா, யாஷிகா இல்லாதது நெட்டிசன்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது.

ஏமாளி

ஏமாளி

சென்றாயன் தான் ஒரு ஏமாளி, வெகுளி போன்று நடிக்கிறார். உண்மையில் அவர் வெகுளி இல்லை என்கிறார் வைஷ்ணவி. இதையே தான் சக போட்டியாளர்களும் பல நாட்களாக கூறி வருகிறார்கள். தன் சாயம் வெளுத்துவிட்டது என்று தெரிந்தும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார் சென்றாயன். சரி விடுங்க, அவர் மட்டுமா நடிக்கிறார்?

மும்தாஜ்

மும்தாஜ்

மும்தாஜ் மிகவும் சரியான முறையில் நடக்கிறார். அவர் எனக்கு நிறைய அன்பு கொடுத்தார். டேனி என் நண்பன். ஆனால் அவனுக்கு என் மீது ஏன் கோபம் என்று தெரியவில்லை. பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் என்னை பற்றி தவறாக பேசியுள்ளனர். அவர்களை எல்லாம் பழிவாங்க கிளம்பினால் அவர்களுக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். அதனால் அவர்களை பழிவாங்க மாட்டேன் என்று வைஷ்ணவி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X