படிக்கும் போதே திருமணம்.. என் வளர்ச்சியை அப்பா பாக்கல.. கண்கலங்கிய சீரியல் நடிகை!

சென்னை: சீரியல்களில் வில்லி நடிகைகளுக்கு இலக்கணம் வகுத்து கொடுத்தவர் தான் நடிகை ராணி. ஹீரோயினாக வருவதற்கு அனைத்து அழகும் இருந்த போதும், தனக்கு கிடைத்த வில்லி ரோலில் சிறப்பாக நடித்து பெயர் எடுத்த ராணி, தனது பயணத்தை தொடங்கியது முதல் தற்போது வரை பீக்கில் இருக்கிறார். இவர் தனது வாழ்க்கையில் கடந்து வந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

சன் டிவியில் சீரியல்கள் ஆரம்பித்த காலத்தில் இருந்து சீரியல்களில் வில்லியாக நடித்து வருகிறார் நடிகை ராணி. அலை சீரியலில் வில்லியாக தடம் பதித்தவர் இவரின் பயணம் சொந்தம், அத்திப்பூக்கள், வள்ளி, பாண்டவர் இல்லம், முன் ஜென்மம், பூவே உனக்காக, குலதெய்வம், ரோஜா, சந்திரலேகா என பல சீரியலில் அட்டகாசமாக நடித்துள்ளார்.

serial actress rani Valli Roja serial

கடந்து வந்த பாதை: நடிகை ராணி தன்னுடைய சீரியல் வாழ்க்கை குறித்து, யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், என் அம்மா நான் படித்துக்கொண்டு இருக்கும் போதே இறந்துவிட்டார். எங்க வீட்டில் அக்கா, தங்கை என பெண்கள் இருந்ததால், நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டு இருக்கும் போதே திருமணம் நடந்து விட்டது. நான் டிகிரியைக்கூட முடிக்க முடியாமல், இறுதி தேர்வை கூட என்னால் எழுதமுடியாமல் போனது. மகன் பிறந்த பிறகுதான், நான் சீரியலில் நடிக்க வந்தேன், கடவுளின் அருளால் நான் என்ட்ரி ஆனதிலிருந்து இப்போது வரை தொடர்ந்து வேலை பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.

சிறுவயதில் திருமணம்: என் அப்பா நான் வளர்ந்ததை பார்க்கவில்லை, நான் படித்ததை பார்க்கல, என் கல்யாணத்தை பார்க்கல, நான் நடிச்சதை பார்க்கல, என் கணவர் குழந்தைகள் என எதையுமே என் அப்பா பார்க்கவில்லை. இது நான் வாழ்க்கையில் நான் சந்தித்த மிகப்பெரிய சோகம். வாழ்க்கையில் அப்பா என்பது மிகவும் முக்கியமான ஒன்று, எந்த அம்மா, அப்பாவாக இருந்தாலும், அவர்கள் தங்கள் குழந்தைகளோடு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் இதற்குத்தான் நான் ஆசைப்படுகிறேன் என்றார்.

நான் தான் ராணி: தொடர்ந்து பேசிய அவர், நான் நடித்த பல சீரியல்களில் வில்லியாகத்தான் நடித்து இருக்கிறேன். என்ன நமக்கு மட்டும் இப்படி நெகட்டிவான கேரக்டர்களாக வந்து கொண்டிருக்கிறதே, என்று நான் ஒரு நாளும் கவலைப்பட்டது இல்லை. காரணம் எனக்கு, கிளிசரின் போட்டுக் கொண்டு அழுவதெல்லாம் பிடிக்காது குறைந்த நாட்கள் ஷூட்டிங் சென்றாலும், அங்கு நான் தான் அந்த கேரக்டரின் வழியாக, ராணி போல தெரியவேண்டும் என்று நினைப்பேன். அதனால் அதை நான் மிகவும் சந்தோஷமாகத்தான் நடித்தேன் என்று அந்த பேட்டியில் சீரியல் நடிகை ராணி மனம் திறந்து பல விஷயத்தை பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X