நான் அழுவது மகனுக்குப் பிடிக்காது…. வள்ளி கதாநாயகி உமா
சினிமாவில் இருந்து சீரியலுக்கு வந்து வெற்றி பெற்றவர் நடிகை உமா. சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்தாலும், திருமணத்திற்கு பின்னர் சினிமாவை விட்டு ஒதுங்கி சீரியல் மட்டுமே போதும் என்று நடித்து வருகிறார்.
இப்போது மகனுக்காக சீரியல் சூட்டிங் கூட 10 நாட்கள் மட்டும்தானாம். அப்புறம் பெங்களூரில் உள்ள மகனுடன் கொஞ்சி விளையாடுகிறார். தன்னுடைய சின்னத்திரை பயணம் பற்றி நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார் படியுங்களேன்.
சினிமாவில் நடிக்கும் போதே திருமணம் ஆகிவிட்டது. அதோடு சினிமாவிற்கு பை சொல்லிவிட்டு செட்டில் ஆகிவிட்டேன். அப்போதுதான் கன்னட சீரியல் வாய்ப்பு வந்தது.

கன்னட சித்தி நான்
தமிழில் ராதிகா நடித்த 'சித்தி' சீரியலோட கன்னட ரீமேக் 'சிக்கம்மா' சீரியலில் 5 ஆண்டுகள் நடித்தேன். அங்க சூப்பர் ஹிட்டா ஓடிட்டிருந்த அந்த சீரியல், நாலு மாசத்துக்கு முன்னதான் முடிஞ்சது.

வள்ளியில் வாய்ப்பு
அதன் மூலமாகத்தான் வள்ளி வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொரு பெண்ணும் தனிப்பட்ட வாழ்க்கையில எதிர்கொள்கிற, சாதிக்க நினைக்கிற கதைதான் 'வள்ளி' சீரியல். நேயர்கள்கிட்ட வள்ளி கேரக்டருக்கு நல்ல பெயரும் பாராட்டும் கிடைச்சிருக்கு.

ரசிகர்கள் ஏராளம்
'வள்ளி'க்கு ஏற்படுற பிரச்னைகளை பார்த்துட்டு, பலரும் நிஜ வாழ்க்கையில் நடக்குற மாதிரியே இருக்குனு போன்ல கலக்கத்தோட பேசுவாங்க. இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த சரிகம நிறுவனத்திற்கு நன்றி.

அம்மா செல்லம் நான்
பெங்களூருவுல எங்க வீட்டுக்கு மூணு வீடு தள்ளிதான் அம்மா சுமித்ரா வீடு இருக்கு. நினைச்சப்போ எல்லாம் ஓடிடுவேன். கணவர் துஷ்யந்த் ஐ.டி துறையில் வேலை பார்க்கிறார். நாலு வயது மகன் மாத்விக், வர்ற வருஷம் ஜூனியர் கே.ஜி போறான்.

நான் அழுவது பிடிக்காது
சீரியல்ல நான் அழறதைப் பார்த்துட்டா, அவனுக்கும் அழுகை வந்துடும். அவனுக்காக இப்போ மாசத்துல 10 நாட்கள் மட்டும்தான் ஷூட்டிங் ஒப்புக்கிறேன். அதுக்கு மேல நோ!''என்று சொல்லிவிட்டு சூட்டிங்கிற்கு ரெடி ஆனார்.


Click it and Unblock the Notifications











