அதிரடி திருப்பங்களுடன் நகரும் வள்ளி…
சன் டி.வியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் வள்ளி தொடர், நாளுக்கு நாள் பல அதிரடி திருப்பங்களுடன் 250 எபிசோடினை கடந்திருக்கிறது.
கிராமத்தில் இருந்து நகரத்திற்கு ஓடும் வள்ளி பலரால் பந்தாடப்படுகிறாள், துரத்தப்படுகிறாள். வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடிய வள்ளி, ஒரு கட்டத்தில் தீர்க்கமான முடிவுக்கு வருகிறாள்.
சின்னஞ் சிறு குழந்தை தாயன்புக்கு ஏங்குவதை கண்டு, தன் வாழ்க்கையையே தியாகம் செய்ய முடிவெடுத்து விட்டாள். அது யாரும் எதிர்பாராதது, ஏற்றுக் கொள்ள முடியாதது. தன்னை காப்பாற்றி அடைக்கலம் கொடுத்த சுப்ரமணியின் குழந்தைக்கு தாயாகிறாள்.

மதுவின் வில்லத்தனம்
ஒருபுறம் சுப்புவின் மனைவி குழந்தையை கேட்டு கோர்ட் படியேறுகிறாள், மறுபுறம் தன் கற்பை காப்பாற்றிய இந்திர சேனாவுக்கு எதிராக வள்ளி சாட்சி சொல்ல வேண்டிய நிலை.

வள்ளியும் - மதுவும்
ஒரு பெண் என்பவள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு வள்ளியும், எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு மதுவும் உதாரணமாக இருக்கிறார்கள். இதுவே வள்ளி தொடரின் மைய கதைக்களம் என்கிறார் சரிகம இண்டியா நிறுவனத்தின் தென்மண்டல பொது மேலாளர் பி.ஆர்.விஜயலட்சுமி.

வில்லியான இந்திர சேனா
தனக்கு எதிராக சாட்சி சொன்ன வள்ளிதான் தன் முதல் எதிரி என்று கூறி அவளை அழிக்க நினைக்கிறாள் இந்திர சேனா. இதனால் வள்ளிக்கு இக்கட்டான நிலை ஏற்படுகிறது.

திருமணம் நடைபெறுமா?
சுப்புவின் மனைவியின் கட்டாயத்தினால் வக்கீல் நந்தனை திருமணம் செய்ய முடிவெடுக்கிறாள் வள்ளி. ஆனால் இந்த திருமணத்தை நிறுத்தி வள்ளியை துரத்த வேண்டும் என்று முடிவு செய்து திட்டமிடுகிறாள் நந்தனின் தாய்.

இந்திரசேனாவின் திட்டம்
திருமண மண்டபத்தில் இருந்து வள்ளியை கடத்த விக்கி என்பவனை ஏற்பாடு செய்கிறாள் இந்திர சேனா. அவளது திட்டம் நிறைவேறுமா? வள்ளி - நந்தன் திருமணம் நடைபெறுமா? தாராவின் நிலை என்ன? என்பது இனிவரும் எபிசோடுகளில் காணலாம்.

250 எபிசோடுகள்
வள்ளி தொடர் முதலில் நடித்தது நடிகை உமா. 200 எபிசோடுவரை அவர் நடித்து வந்த நிலை இவருக்கு பதில் இவர் என்று கார்டு போட்டு வேறு நடிகையை மாற்றிவிட்டனர். 250 வது எபிசோடுகளை கடந்து தற்போது கதையும் விறுவிறுப்பாக மூன்று வில்லிகளோடு நகர்ந்து கொண்டிருக்கிறது. மதிய உணவு நேரத்தில் சுவாரஸ்யமாக ரசித்து வருகின்றனர் இல்லத்தரசிகள். சரிகம நிறுவனத்திற்காக வள்ளி தொடரின் கதையை எழுதியுள்ளார் பி.ஆர். விஜயலட்சுமி. வசனம்: மனோகர். ஒளிப்பதிவு: உதயசங்கர். திரைக்கதை, இயக்கம்: கே.சண்முகம்.


Click it and Unblock the Notifications











