வள்ளி திருமணம் கலர்ஸ் தமிழில் புதிய தொடர்.. இல்லத்தரசிகள் குஷி !

சென்னை :கலர்ஸ் தமிழின் புதிய தொடரான வள்ளி திருமணம் ஜனவரி 3 முதல் ஒளிபரப்பாக உள்ளது. இந்த புதிய தொடரில் நடிகை நட்சத்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே நடிகை நட்சத்திரா ஜீ தமிழின் யாரடி நீ மோகினி தொடரில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றிகாரமான கலர்ஸ்

வெற்றிகாரமான கலர்ஸ்

பல சீரியல்கள் இருந்தாலும் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு பல ரசிகர்கள் இருக்கின்றனர். அம்மன்,இதயத்தை திருடாதே, திருமணம் போன்ற பல சீரியல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.அந்த வரிசையில் கலர்ஸ் நிறுவனம் எடுத்துள்ள புது முயற்சி என்ன என்பதை பாப்போம்.

கலர்ஸ் தொடர்

கலர்ஸ் தொடர்

புத்துணர்வூட்டும் நிகழ்ச்சிகளை வழங்கி ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்ற குறிக்கோளைக் கொண்டிருக்கும் கலர்ஸ் தமிழ், அதன் புதிய நெடுந்தொடர் நிகழ்ச்சியான வள்ளி திருமணம் என்ற தொடரை தொடங்க உள்ளது.புத்தாண்டு தொடங்கியவுடன் இல்லத்தரசிகளுக்கு பிடித்த வகையில் புது தொடரையும் அறிமுகம் செய்ய உள்ளது. ஜனவரி 3, இரவு 8.00 மணிக்கு அதன் முதல் ஒளிபரப்பு தொடங்கும் என்று அறிவித்திருக்கிறது.

வாழ்க்கை கதை

வாழ்க்கை கதை

இந்த தொடரின் முக்கிய கதாபாத்திரமான வள்ளியின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவத்தை மையமாக வைத்து கதை உருவாக்கபட்டுள்ளது.மேலும் இந்த தொடரின் ப்ரோமோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .பாரம்பரிய கலை வடிவமான பொம்மலாட்டத்தின் மூலம் சித்தரிக்கப்பட்ட இந்த நெடுந்தொடரின் முதல் ப்ரோமோ பிரம்மாண்டமும், அதே நேரத்தில் தேனி மாவட்டத்து சாயலில் அசல் கிராமத்துப் பெண்ணான வள்ளியின் கதாபாத்திரத்தை அழகாக எடுத்துக்காட்டி உள்ளது .

நட்சத்திரா

நட்சத்திரா

வள்ளியின் திருமணம் தொடர் அறிமுகம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகி வருகின்ற நிலையில், இத்தொடரில் வள்ளியாக யார் நடிக்கிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது .ஜீ டிவி பிரபலமான நடிகை நட்சத்திரா இந்த தொடரின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் அனைவரையும் குஷிபடுத்தி உள்ளது .மேலும், இத்தொடர் எப்படி இருக்க போகிறதோ என்று ரசிகர்களின் ஆர்வத்தை கூட்டியுள்ளது.நட்சத்திரா ஜீ தமிழின் யாரடி நீ மோகினி தொடரில் பிரபலமானவர் எ

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X