துணை நடிகையிடம் தவறாக நடந்து கொண்டாரா? வள்ளியின் வேலன் சீரியலில் நடந்த அதிரடி மாற்றம்!

சென்னை: சீரியலுக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருப்பதால், ஒட்டுமொத்த தொலைக்காட்சியிலும் காலை முதல் இரவு பத்து மணி வரை போட்டி போட்டுக்கொண்டு சீரியலை ஒளிபரப்பி வருகின்றனர். முன்பெல்லாம் திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே சீரியல் ஒளிபரப்பாகும். ஆனால், சீரியலுக்கு தனி ரசிகர்கள் இருப்பதால், தற்போது சனிக்கிழமையிலும் சீரியல் ஒளிபரப்பாகிறது. அந்த வகையில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த தொடரில் திடீரென அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Valliyin Velan zee tamil serial

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 8,30 மணி முதல் 9.00 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியலில்

பிரதாப் மணி இயக்க, ஸ்ரேயா அஞ்சன், சித்து மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் நடித்துள்ளனர். தந்தையின் அன்பைப் பெற பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் ஒரு பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த அப்பாவி இளம் பெண் வள்ளியைச் சுற்றி இந்த சீரியலின் கதை நகர்ந்து வருகிறது. இந்த தொடரில் நடித்த ஸ்ரேயா அஞ்சன், சித்து இருவரும் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான திருமணம் சீரியலில் இணைந்து நடித்த போது காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

Valliyin Velan zee tamil serial

ரியல் ஜோடி: திருமணத்திற்கு பிறகு சித்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 சீரியலில் கதாநாயகனாக நடித்து வந்தார். அதுபோல ஜீ தமிழில் ஒளிபரப்பான ரஜினி சீரியலில் ஸ்ரேயா நடித்துக் கொண்டிருந்தார். இதையடுத்து இருவரும் ஜோடியாக வள்ளியின் வேலன் சீரியலில் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பான கதைக்களத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.

Valliyin Velan zee tamil serial

அதிரடி மாற்றம்: இந்நிலையில், வள்ளியின் வேலன் சீரியலில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த சீரியலின் இயக்குநர் பிரதாப், இந்த சீரியலில் நடிக்கும் நாயகன் மற்றும் நாயகி மற்றும் சில பிரபலமான நடிகர்களை தாண்டி மற்றவர்களிடம் மோசமாக பேசுவது, மரியாதை இன்றி ஒருமையில் அழைப்பதாக புகார் கூறப்பட்டுள்ளது. தற்போது, ஒரு துணை நடிகையிடம் படப்பிடிப்பு தளத்தில், அநாகரீகமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. சர்ச்சை விவகாரம் சேனல் நிர்வாகத்தின் காதுக்கு வர,அதிர்ச்சியடைந்த நிர்வாகம் இயக்குனரை வள்ளியின் வேலன் தொடரில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த தொடரின் புதிய இயக்குனராக ஜீவா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அடுத்தடுத்து வரும் எபிசோடுகள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Valliyin Velan zee tamil serial

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X