உப்புச்சப்பில்லாத கதையாகிப் போன வம்சம்!

By Mayura Akilan

ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் சீரியல் என்றாலே பாதியிலேயே முடிக்கவேண்டும் என்ற விதி வம்சத்தையும் விட்டு வைக்கவில்லை போல.

கலசம் தொடரில் தொடங்கி ராஜ குமாரி வரை தொடரின் கதையை சரியாக கொண்டு செல்ல முடியாமல் அவசர கோலத்தில் முடித்தார் ரம்யா கிருஷ்ணன்.

வம்சம் தொடரின் கதையும் இப்போது நொண்டியடிக்கத் தொடங்கிவிட்டது. திருமண நிச்சயம் முடிந்த பின்னர் மாப்பிள்ளையை விட்டு விட்டு சொந்தங்களை தேடி வரும் சக்தி, வேலைக்காரியாக தாய்மாமாவான அண்ணாச்சி விஜயகுமார் வீட்டில் நுழைகிறார்.

நாகவள்ளியான வடிவுக்கரசி

நாகவள்ளியான வடிவுக்கரசி

அத்தை நாகவள்ளி குடும்பத்தினர் மீது வெறுப்போடு இருக்கும் சக்தி மீது அத்தை மகன் துரைப்பாண்டிக்கு காதல். ஆனால் சக்திக்கோ திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது.

திருமணம் என்னவாகும்?

திருமணம் என்னவாகும்?

கிராமத்திற்கு வந்த சக்தியைத் தேதி நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளை வரவே சக்தி யாரென்ற கேள்வி வருகிறது. ஆனாலும் மாப்பிள்ளையை சமாளித்து அனுப்பிவைக்கிறாள் சக்தி. திருமணம் இப்போதைக்கு நடக்காது என்றும் கூறுகிறாள்.

தப்பிய அண்ணாச்சி

தப்பிய அண்ணாச்சி

மகள் உத்ராவின் காதலனை கொலை செய்த பழியில் இருந்து அண்ணாச்சி தப்பிவிடுகிறார். கடைசியில் கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்யச் சொன்னார்கள் என்றும் போலீஸ் கண்டுபிடிக்கவில்லை.

வீட்டுக்கு வந்த மகள்

வீட்டுக்கு வந்த மகள்

அப்பா மீது உள்ள கோபத்தினால் நாகவள்ளியின் வீட்டில் தங்கியிருந்த உத்ரா மீண்டும் அப்பா வீட்டிற்கே திரும்புகிறாள். கடைசியில் அண்ணன்களால் பிரச்சினை வரவே ஊரை விட்டு வேறு ஊருக்கு அனுப்பிவைக்கின்றனர்.

அத்தை வீட்டுக்குப் போன சக்தி

அத்தை வீட்டுக்குப் போன சக்தி

வேலைக்காரியாக நடித்த சக்தி கடைசியில் தன்னுடைய தம்பி மகள்தான் என்ற உண்மை நாகவள்ளிக்கு தெரியவருகிறது. சக்தியை அண்ணாச்சிக்கு எதிராக மாற்ற நினைக்கிறாள் அத்தை நாகவள்ளி.

மாறிய இயக்குநர்

மாறிய இயக்குநர்

கதையை எப்படி நகர்த்துவது என்று குழம்பிய நிலையில் இயக்குநர் சி.ஜெ.பாஸ்கரை மாற்றிவிட்டார் கிரியேட்டிவ் ஹெட் ரம்யா கிருஷ்ணன். 25 ஆண்டுகளாக ஊர்பக்கமே வராமல் இருந்த அண்ணாச்சியின் தங்கையும், நாகவள்ளியின் தம்பியும் இப்போது ஊர் திரும்பியுள்ளனர்.

அண்ணன் – தங்கை

அண்ணன் – தங்கை

ஊரை விட்டு ஓடிப்போன தங்கை திரும்பிய நிலையில் அவளுடன் பேசாமல் போய்விடுகிறார் அண்ணாச்சி. மீண்டும் வீட்டுக்கு போக முடியுமா என தவிக்கிறாள் தங்கை. அண்ணன் - தங்கை பாசம் இருவரையும் இணைக்குமா?

அண்ணாச்சி மனைவி எங்கே?

அண்ணாச்சி மனைவி எங்கே?

பட்டும், நகையுமாய் வளைய வந்த அண்ணாச்சியின் மனைவி ஆளையே காணோமே? என்ன சொல்லி ஆளை மாற்றப் போகிறார்களோ தெரியவில்லை. அதேபோல் அண்ணாச்சியின் மூன்றாவது மகன் திருமணம் செய்து கொண்டு போன ஜோடியும் ஆளைக் காணவில்லை.

காமெடி வில்லன்கள்

காமெடி வில்லன்கள்

காமெடியனாக காட்டப்படும் நாகவள்ளியின் மருமகன் இடை இடையே வில்லனாகவும் மாறுகிறார். அவர், காமெடியனா? வில்லனா? என்பதை தெளிவுபடுத்தவில்லை.

சக்தியின் திருமணம்

சக்தியின் திருமணம்

சக்தியை திருமணம் செய்த மாப்பிள்ளை அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பில்லி, சூனியம் எல்லாம் செய்து காத்திருக்கிறார். அது நிறைவேறுமா? அல்லது அத்தை மகன் துரைப்பாண்டியுடன் திருமணம் நடக்குமா என்பதை இனிவரும் எபிசோடுகளில் காணலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X