twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Vanakkam thamizha: அரைகுறை வேலையை சன் டிவியுமா ஆரம்பிச்சுட்டாங்க?

    |

    சென்னை: சன் டிவியில் காலையில் வணக்கம் தமிழாவில் ஆரம்பித்த மாற்றம் ஓரளவுக்கு ஓகேன்னு சொல்லலாம். மத்தபடி, யாரோ பணக்கார வீட்டு மணமக்களின் திருமண வைபோகத்தை தினமும் பார்க்க வைப்பது என்பதெல்லாம் கொடுமை.

    மாற்றம் தேவைதான், அது உபயோகமானதாக இருக்க வேண்டும். சீரியல் ஆர்வலர்கள், அதிகம் திரைப்படம் விரும்பிப் பார்ப்பவர்களை கருத்தில் கொண்டுதான் சன் டிவி ஆரம்ப காலக் கட்டங்களில் இருந்து இயங்கி வருகிறது.

    காலையில் வணக்கம் தமிழா முடிந்து ஒளிபரப்பாகி வந்த ஷீரடி சாய் பாபா, பவுர்ணமி, கிழக்கு வாசல் சீரியல்கள் ஆரம்பித்த சுவடில் இப்போது போன தடம் தெரியவில்லை.

    Kadaram Kondan Review: நிஜமாகவே கடாரம் கொண்ட விக்ரம்... ஹாலிவுட் தரத்தில் செம ஸ்டைல்! - விமர்சனம் Kadaram Kondan Review: நிஜமாகவே கடாரம் கொண்ட விக்ரம்... ஹாலிவுட் தரத்தில் செம ஸ்டைல்! - விமர்சனம்

     பணக்கார வீட்டு திருமணம்

    பணக்கார வீட்டு திருமணம்

    இப்போது செலிபிரிட்டிகள் திருமண வைபோகத்தை ஒளிபரப்பினாலே போர்னு நினைக்கற நிலையில், புது கான்செப்ட் என்று, பணக்கார வீட்டு திருமண வீடியோக்களை கேட்டு வாங்கி ஒளிபரப்பி, மக்கள் மீது திணிக்கிறீர்கள். இதனால் வணக்கம் தமிழா நிகழ்ச்சிக்கு என்ன பெருமை சேர்கிறது? இதை காலை வேளையில் மக்கள் எதற்காக பார்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். இதன் மூலம் எந்த வீடியோ கிராபருக்கு வருமானம் சேர்த்து கொடுக்கப் போகிறீர்கள்?

     அத்தனையும் வீடியோ

    அத்தனையும் வீடியோ

    டாடி சமையல் யூடியூபில் ரொம்ப புகழ் பெற்று கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக அந்த டாடி உலகப்புகழ் பெற்றுவிட்டார். அந்த வீடியோக்களை வாங்கி சன் டிவி வணக்கம் தமிழாவில் என்னவோ புதிது போல ஒளிபரப்பி வருகிறார்கள். எதுக்கு வீண் செலவு செய்து,அந்த கிராமத்துக்கு போவானேன், அதை ஒளிபரப்புவானேன்னு நீங்களே நினைக்கும்போது, எங்களை மட்டும் ஏன் அதை புதிது போல பார்க்க வைப்பானேன்? இந்த டாடிக்கும் சக்தி சுப்ரமணியம் ஐயா போல நல்ல வாய்ப்பு குடுத்து வாழ வைத்து, நீங்களும் வாழலாமே!

     ஓகே ரகம்

    ஓகே ரகம்

    மாடியில மெட்டுன்னு சில இளசுகள் சேர்ந்து என்னவோ பாடறாங்க.இது ஓகே ரகம்தான்.மத்தபடி யோகா, தியானம் என்று இதுவும் ஓகேதான். புதுசுன்னு சொல்லி, கண்டதையும் திணிப்பதை காலை நேரத்தில் கையில் எடுத்தது சன் டிவியின் புத்தியின்மைன்னுதான் சொல்ல தோணுது. நீங்கள் எதை கோர்வையாக தந்து, அதற்கு வணக்கம் தமிழான்னு பெயர் வைத்துவிட்டால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று அலட்சியம். காலை நேரம் எத்தனை பொன்னானது தெரியுமா உங்களுக்கு?

     நிகழ்ச்சி அரைகுறை

    நிகழ்ச்சி அரைகுறை

    அதுசரி.. ஒரு நிகழ்ச்சியை மறு ஒளிபரப்பு செய்தாலும், அதை மக்கள் பார்க்க வேண்டும் என்றுதானே ஒளிபரப்புகிறீர்கள், இல்லை, உங்கள் நேரத்தை கடத்தவா? நாம் ஒருவர்னு விஷால் நடத்திய நிகழ்ச்சியை மறு ஒளிபரப்பு செய்கிறீர்கள். அதை பாதியில் கூட முடியுங்கள்... ஒன்றும் சொல்லவில்லை.ஆனால், ஒரு ஃபினிஷிங் வச்சு முடிச்சு வைக்காமல் பேசிக்கொண்டு இருக்கும்போதே கட் பண்ணிட்டு, சீரியலுக்கு வந்துடறீங்களே...

    இப்போது இப்படிப்பட்ட அரைகுறை வேலைகளுக்கும் சன் டிவி தயாராகி விட்டதா? எவ்வளவு பெரிய நிறுவனம்...கொடுமை!

    English summary
    The change that started in the morning worship of Sun TV can be somewhat said. In fact, it is horrible for someone to see the wedding gift of a wealthy homemaker every day.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X