twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஏர்ஹோஸ்டஸ் டூ சீரியல் ஹீரோயின்… வாணி போஜன் சுவாரஸ்யம்

    By Mayura Akilan
    |

    சின்னத்திரையில் இப்போது சீரியல் ஹீரோயின்கள் அழகுப் பதுமைகளாக வலம் வருகின்றனர். அழகாக இருப்பதோடு இப்போது நடிக்கவும் செய்வதுதான் ஆச்சரியம்.

    மாடலிங் துறையில் இருந்து இப்போது சின்னத்திரை சீரியல்களில் கதாநாயகியாக வலம் வரும் வாணி போஜன் தெய்வமகளாக இப்போது எல்லோருடைய வீட்டுக்கும் இரவு 8 மணிக்கு சன் டிவி மூலமாக வருகிறார்.

    கதையின் ஆரம்பம் முதலே இவரை சுற்றிதான் பின்னப்பட்டுள்ளது. அதற்கேற்ப உடை அலங்காரம், நகை, என அசத்தல் ராணியாக வலம் வருகிறார். இத்தனை நாளாய் எங்கிருந்தார். எப்படி சின்னத்திரைக்குள் நுழைந்தார் என்பது பற்றி தன்னுடைய பெர்சனல் விசயங்களை வாணி போஜன் நமக்காக கூறினார்.

    ஊட்டி ரோஜாவாம் வாணி

    ஊட்டி ரோஜாவாம் வாணி

    வாணியின் சொந்த ஊர் ஊட்டி. அழகான தேவதையாக தெரிவதற்குக் காரணம் அப்பாவின் கைவண்ணம். அவர் ஒரு போட்டோகிராபர். அம்மா கிச்சன் கில்லாடியாம். ஒரு செல்ல அண்ணன் இருக்கிறார்.

    ஏர்ஹோஸ்டஸ் ஆன கதை

    ஏர்ஹோஸ்டஸ் ஆன கதை

    ப்ளஸ் டூ மட்டுமே படித்துள்ள வாணிக்கு கிங் பிஷர் எர்லைன்ஸ் நிறுவனத்தில் வேலை கிடைக்கவே குடும்பத்தோடு சென்னைக்கு வந்துவிட்டனராம்.

    மாடலிங் வாய்ப்பு

    மாடலிங் வாய்ப்பு

    என்னதான் ஏர்ஹோஸ்டஸ் வேலை என்றாலும் மாடலிங் பிடிக்கவே அதில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார் வாணி. இதுவரை 150 விளம்பரங்கள் வரை மாடலிங் செய்திருக்கிறாராம்.

    சீரியல் பயணம் தொடக்கம்

    சீரியல் பயணம் தொடக்கம்

    விளம்பரத்தை விசிட்டிங் கார்டாக வைத்து விஜய் டிவியில் ‘ஆஹா' தொடரில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து ஜெயா டிவியில் ‘மாயா' சன் டிவியில் தெய்வமகள் என வரிசையாக நடிக்க ஆரம்பித்து விட்டார்.

    விகடன் என்றதும் ஓகே

    விகடன் என்றதும் ஓகே

    குமரன் இயக்கத்தில் விகடன் பேனர் என்ற உடன் கதை கூட கேட்காமல் ஓகே சொல்லிவிட்டாராம் வாணி.

    சினிமா வாய்ப்பு வந்தாலும், 'நோ' சொல்லிட்டேன். விஜய் டி.வி. 'ஆஹா', ஜெயா டி.வி 'மாயா' - இது ரெண்டும் சின்னத்திரையில் நல்ல விசிட்டிங் கார்ட் கொடுக்க... மெகா பிரைஸா, இப்போ நான் 'தெய்வ மகள்'!

    சட்டுனு தலையாட்டிட்டேன்

    சட்டுனு தலையாட்டிட்டேன்

    டைரக்டர் குமரன்... தயாரிப்பு விகடன் டெலிவிஸ்டாஸ்... இது ரெண்டையும் சொன்னதுமே, சட்டுனு தலையாட்டிட்டேன். கதையையெல்லாம் கேட்டுக்கவே இல்ல''னு பூரிப்போட சொன்ன வாணி,

    ''இந்த சீரியல்ல என்னோட காஸ்ட் யூம்ஸ் பத்தி சொல்லியே ஆகணும் ரீட்டா. எனக்குனு ஒரு காஸ்ட்யூம் டிசைனரே இருக்கார். அதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டா... நீ அசந்துடுவே...'' என்று ஆர்வத்தைக் கூட்டி, தொடர்ந்தார்.

    ''இதுக்கு முன்ன வீட்ல, வெளி ஃபங்ஷன் களுக்குகூட இப்படி காஸ்ட்யூம்ல போனதில்ல.

    அழகு தேவதையாக ஜொலிக்க காரணம்

    அழகு தேவதையாக ஜொலிக்க காரணம்

    சீரியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு அசத்தலான உடைகளில் வருகிறார் வாணி. அதற்கு காரணம் தெய்வமகள் காஸ்ட்யூம் டிசைனர்தான் என்கிறார்.

    லெகங்கா சாரி, அம்பர்லா கட் அனார்கலி, ஸ்டைலிஷ் சுடிதார், எத்னிக் பிளவுஸ் என்று வித்யாசமான வெரைட்டீஸ். அதைத் தவிர சீரியலில் திருமணத்திற்காக புதுவித திருமண புடவை தயார் செய்திருக்கின்றனராம்.

    சினிமாவுக்கு நோ சொல்லிட்டேன்

    சினிமாவுக்கு நோ சொல்லிட்டேன்

    சீரியலில் நடித்த பின்னர் சினிமாவில் நடிக்காமலா? ஆனால் சினிமா வாய்ப்பு வந்தும் நோ சொல்லிவிட்டாராம் வாணி. இப்போதைக்கு சீரியலே போதும் என்ற முடிவில் இருப்பதாக கூறினார்.

    என்னை எல்லோருக்கும் பிடிக்கும்

    என்னை எல்லோருக்கும் பிடிக்கும்

    இந்த சீரியலில் வரும் கதாபாத்திரம் போலவே நான் அமைதியான, அதே சமயம் தைரியமான பெண்தான் என்று அழகாய் கூறிவிட்டு சூட்டிங்கிற்கு சென்றார் வாணி போஜன்.

    English summary
    Deivamagal serial heroine Vani Bhojan is really happy to see her in the serial and elated for the response to the serial and her acting.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X