200 எபிசோடுகளை கடந்த வாணி ராணி… திடீர் திருப்பங்கள்…
சன் டிவியில் ஒளிபரப்பாகும் வாணி ராணிதொடர் 200 எபிசோடுகளைக் கடந்துள்ளது. ஒரே வீட்டில் இருந்த போது பேசிக்கொள்ளாமல் இருந்த சகோதரிகள் வாணியும் ராணியும் வேறு வேறு வீட்டிற்குச் சென்ற பின்னர் சந்தோசமாக பேசிக் கொள்கின்றனர்.
பூமிநாதனின் சதி தெரிந்து குடும்பம் மொத்தமும் வெறுக்கவே அலுவலகத்தில் குடியேறி குடியும் குடித்தனமுமாய் இருக்கிறார். இதைக் கேட்கப் போன ராணியை அவளது கணவர் சாமிநாதன் சண்டை போடுகிறார்.
ஆரம்பத்தில் விறுவிறுப்பாக இருந்த இந்த தொடர் சில வாரங்களுக்கு முன்பு கதை நகராமல் நொண்டியடித்தது. இப்போது 200வது எபிசோடுகளை கடந்து திடீர் திருப்பங்களுடன் சுறுசுறுப்படைந்துள்ளது என்கின்றனர் ரசிகர்கள்.

வாணி ராணி
ஊரே மெச்சும்படி ஒற்றுமையாக வாழ்ந்த வாணி-ராணியின் குடும்பம், பூமிநாதன் மற்றும் அங்கயற்கண்ணியின் சதியால் பிரிந்து விடுகிறது. தனியே பிரிந்து சென்ற சாமிநாதனின் குடும்பம் விதி என்ற சூறைக்காற்றில் சிக்கி சிதறிப்போகிறது.

ஒன்று சேர்ந்த குடும்பம்
யாருக்கும் தீங்கு நினைக்காத ராணியின் நல்ல உள்ளத்தினால் பூமிநாதனின் சதித்திட்டம் எல்லோருக்கும் தெரிய வருகிறது. பிரிந்த சாமிநாதனின் குடும்பமும் ஒன்று சேருகிறது.

சுக்கு காபி வியாபாரம்
குடும்பத்தை காப்பாற்ற தன் நிலையில் இருந்து கீழே இறங்கி வந்த சாமிநாதன் சுக்கு காபி வியாபாரத்தை ஆரம்பித்து நேர்மையாக சம்பாதிக்க முயற்சிக்கிறான். அதற்கு வாணி உதவி செய்கிறாள்.

கல்லூரியை விட்ட சரவணன்
கல்லூரியில் முதல் மாணவனாக வலம் வரும் அவரின் மகன் சரவணனோ தன் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு அடிதடி வழக்குகளில் இறங்கி, சட்டத்திற்கு புறம்பாக பணம் சம்பாதிக்க முயல்கிறான். தன்னைக் காதலிக்கும் அத்தை மகள் பூங்கொடியையும் புறக்கணிக்கிறான்.

தாத்தாவின் பிறந்தநாள்
தன் குடும்பத்தை புறக்கணிக்கும் தாத்தாவை எப்படியாவது அப்பா உடன் சேர்த்துவைக்கவேண்டும் என்று பூங்கொடி ஆசைப்படுகிறாள். அது நிறைவேறுமா?

ராஜேஸ் வாழ்க்கை
தன் மாமனின் துணையோடு எப்படியும் ராஜேசை கைப்பற்ற நினைக்கும் செண்பகத்திற்கு காளி ஜெயிலில் அடைக்கப்பட்டான் என்ற செய்தி பேரிடியாக அமைகிறது. எப்படியும் உயிரைக் கொடுத்தாவது, ராஜேசை அடைந்தே தீருவது என்ற தீவிர போராட்டத்தில் இறங்குகிறாள். இதில் தோற்றுப் போய் தற்கொலை செய்து கொள்கிறாள்.

ராஜேஸ் – செல்வி
செண்பகத்தை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதாக ராஜேஸ், செல்வி மீது செண்பகத்தில் தயார் போலீசில் புகார் செய்கிறாள். இதனால் இருவரையும் போலீஸ் கைது செய்கிறது.

பரபரப்பான எபிசோடுகள்
சரவணன் - பூங்கொடி காதல் நிறைவேறுமா? சாமிநாதன் நிலை என்ன? பூமிநாதன் வீட்டிற்கு வருவானா? செல்வி, ராஜேஸை வாணி காப்பாற்றுவாளா?என இனிவரும் எபிசோடுகளில் காணலாம்.

ராதிகா – வேணு அரவிந்த்
இந்தத் தொடரில் ராதிகா சரத்குமார், வேணு அரவிந்த், பப்லு, ரவிக்குமார், சாந்தி வில்லியம்ஸ், மனோ, அருண், விக்கி, மானஸ், நிகிலா, மகாலட்சுமி, ஸ்ரீதேவி, நேஹா ஆகியோர் நடித்துள்ளனர். சன் டிவியில் இரவு 9.30 மணிக்கு வாணி ராணி தொடர் ஒளிபரப்பாகிறது.


Click it and Unblock the Notifications











