தேவியின் சூழ்ச்சியை முறியடிப்பாரா பூமிநாதன்? வாணி ராணியில் திருப்பங்கள்…
சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் வாணி ராணி தொடர் ஓராண்டுகளை கடந்துள்ளது. ராதிகா இரட்டை வேடத்தில் நடித்து வரும் வாணி ராணி தொடர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது.
சில தினங்களுக்கு முன்னர்தான் தொடரின் ஓராண்டு நிறைவினை சீரியல் குடும்பத்தினர் கொண்டாடினர். வாணி, ராணி குடும்பத்திற்கு இடையே ஏற்பட்ட பிரிவு. சரவணனை காதலிக்கும் பூங்கொடி, பூங்கொடியை நேசிக்கும் அத்தை மகன் என சுவாரஸ்யங்களும், திருப்பங்களுமாய் நகர்கிறது.

தேவியின் பழிக்குப் பழி
தொடரின் முக்கிய திருப்பமாக வாணி, ராணி குடும்பத்தை கூண்டோடு அழிக்க தென்காசியில் இருந்து வந்திருக்கிறாள் தேவி.

கோடிக்கணக்கில் நஷ்டம்
சுயநினைவற்று இருக்கும் அம்மாவிற்கு சிகிச்சை தரும் பூமிநாதனுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படுத்துகிறாள். ஆனால் அவளை மன்னிக்கிறார் பூமிநாதன்.

மனதை மாற்றும் தேவி
பூமிநாதனின் மகனிடம் அப்பாவைப் பற்றியே தவறான செய்திகளை கூறி மனதை மாற்ற முயற்சிக்கிறாள். சில சந்தர்ப்பங்களும் அதே போல அமைகிறது.

வேலைக்கு போகும் செல்வி
செண்பகம் பற்றிய மனக்குழப்பத்தில் இருந்த செல்வி, அதிலிருந்து வெளிவருகிறாள். தேர்வில் பாஸ் செய்து நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கவே, கணவன் ராஜேசை படிக்க வைப்பதாக கூறுகிறாள்

காளியின் இரண்டாவது மனைவி
மருமகளை கொலை செய்ய முயன்ற வழக்கில் சிறையில் இருக்கும் செல்வியின் மாமனார் காளிக்கு இரண்டாவது குடும்பம் இருப்பது தெரியவரவே சிறைக்கு போய் சண்டை போடுகிறாள் செல்வியின் மாமியார்.

சரவணனின் வாழ்க்கை
தேர்வு எழுதக்கூட போகாமல் அடியாள் வேலை செய்யும் சரவணனை அடித்து அட்வைஸ் செய்யும் வாணியை எதிர்த்துப் பேசுகிறான் சரவணன்.

பரபரப்பான திருப்பங்கள்
சிலவாரங்கள் சுவாரஸ்யமின்றி போன வாணி ராணி மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தேவியின் சூழ்ச்சியை பூமிநாதன் முறியடிப்பாரா? வாணி, பூமிநாதன் இடையே பிரிவு வருமா? பூங்கொடியின் வாழ்க்கை யாருடன்? போன்ற பரபரப்பான கேள்விகளுக்கு இனிவரும் எபிசோடுகளில் விடை தெரியும் என்கிறார் தொடரின் இயக்குநர்.


Click it and Unblock the Notifications











