பேய் கதையாக மாறிய வாணி ராணி

By Mayura Akilan

வாணி ராணி சீரியலின் கதைக்களம் இப்போது குற்றாலத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. குடும்பக் கதையாக அழகாக போய்க்கொண்டிருந்த கதை கடந்த சில எபிசோடுக்களாக பேய் கதை போல மாறி வருகிறது.

பூமிநாதன் - சாமிநாதன் அண்ணன் தம்பிகள் சகோதரிகளான வாணி - ராணியை திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் வசித்து வந்தனர். குடும்ப பிரச்சினையால் இப்போது இரண்டு குடும்பமும் தனித்தனியாக பிரிய நேரிட்டது.

ராணியின் மகள் செல்வி வாழ்க்கையில் பிரச்சினையாக இருந்த அத்தை மகள் தூக்கு போட்டு இறந்து போகிறாள். அந்த பழி செல்வி மீது விழுகிறது. அதிலிருந்து விடுவிக்கிறாள் வாணி.

குல தெய்வக் கோவில்

குல தெய்வக் கோவில்

தென்காசி அருகில் உள்ள குல தெய்வக் கோவிலுக்கு குடும்பத்தோடு போய் வரலாம் என பூமிநாதனின் அம்மா சொல்லவே வாணியும் சம்மதிக்கிறாள். ராணியின் குடும்பத்திடம் சம்மதம் பெற வீட்டிற்கு வருகிறான் பூமிநாதன்.

சாமிநாதனின் பிடிவாதம்

சாமிநாதனின் பிடிவாதம்

கோவிலுக்கு தன்னால் வரமுடியாது என சாமிநாதன் சொல்லவே ராணிக்கு பிரச்சினை வருகிறது. இதனால் பயந்து போன சாமிநாதன் கோவிலுக்கு வர சம்மதிக்கிறான்.

பேய் பிடிச்சிருக்கே

பேய் பிடிச்சிருக்கே

செல்வியின் அத்தை மகள் பேயாக மாறி செல்வியின் உடம்பில் புகுந்து கொண்டிருப்பதாக பூசாரி சொல்லவே, அதை சமாளிக்கும் நடவடிக்கையில் இறங்குகிறாள் செல்வியின் மாமியார்.

குற்றாலத்தில் கதை

குற்றாலத்தில் கதை

இதுநாள் வரை சென்னையில் சுற்றி வந்த வாணி ராணி கதை இனி குற்றாலத்தை நோக்கி நகர்கிறது. குல தெய்வ கோவிலுக்கு செல்வி வருவாளா? அங்கே வாணி ராணி குடும்பத்தினர் சந்திக்கும் பிரச்சினை என்ன என்பதை இனி வரும் எபிசோடுகளில் காணலாம்.

உறவுகளுக்கு முக்கியத்துவம்

உறவுகளுக்கு முக்கியத்துவம்

டி.வித் தொடர்கள் பெண்களை இலக்காக வைத்தே உருவாகி வருவதால், பெரும்பாலும் குடும்பப்பிரச்னைளுக்கே முதலிடம் கொடுக்கிறோம். குறிப்பாக, குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், ஒற்றுமையையும் வலியுறுத்தியே நான் தயாரித்து நடிககிற தொடர்கள் இருந்து வருகிறது என்று வாணி ராணி பற்றி கூறியுள்ளார் ராதிகா.

பெண்களிடம் வரவேற்பு

பெண்களிடம் வரவேற்பு

குடும்பங்களில் நடைபெறும் அன்றாட பிரச்னைகளுக்கு நல்லதொரு தீர்வு அளிக்கும்வகையில் காட்சிகள் அமைக்கப்படுவதால் பெண்கள் மத்தியில் எனது தொடர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதனால் அவர்களுக்கு போரடித்து விடாத வகையில் கதை மற்றும் காட்சிகளை சுவராஸ்யம் குறையாமல் நகர்த்தி வருகிறோம் என்றும் கூறியுள்ளார்.

அதுக்காக குடும்பக் கதையை பேய் கதையாக மாற்றுவது நியாயமா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X