மதுமிதாவை டிரிகர் செய்து மட்டம் தட்டும் வனிதா.. கேரியருக்கே வேட்டு வைக்க பார்த்த வில்லத்தனம்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மதுமிதாவை வேண்டுமென்றே டேமெஜ் செய்வதோடு அவரை ரொம்பவும் மட்டம் தட்டி சிக்கலில் இழுத்துவிட்டு வருகிறார் வனிதா.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் சுவாரசியங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சீசன்களை காட்டிலும் சண்டை காட்சிகள் முன்கூட்டியே ஆரம்பமாகிவிட்டன.

அதுவும் பிக்பாஸ் வீட்டில் வீணாக ஒன்றும் இல்லாத விஷயத்தை ஊதி பெரிதாக்குவதில் கில்லாடியாக இருக்கிறார் வனிதா. அதுவும் மீராவையும் மதுமிதாவையும் உண்டு இல்லை என்கிறார்.

திரித்து கூறும் வனிதா

திரித்து கூறும் வனிதா

நாள்தோறும் மதுமிதா வேறு நோக்கத்தில் சொல்லும் ஒன்றை குறுக்கிட்டு திரித்து தவறான நோக்கத்தில் சொல்ல வருவதை போல் காட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் வனிதா. அன்றும் அப்படிதான் வேறு நோக்கத்தில் சொல்லப்பட்ட தமிழ்ப்பெண் என்ற வார்த்தையை வேறு மாதிரி கொண்டு வந்து விட்டார் வனிதா.

மோட்டிவேஷனல் ஸ்பீச்

மோட்டிவேஷனல் ஸ்பீச்

ஷெரினிடம் மதுமிதா மன்னிப்பு கேட்டப் பிறகும், அவரை ஹவுஸ் மேட்ஸ் வெறுக்க வேண்டும் என்ற ரீதியில் அதே பிரச்சனையை கையிலெடுத்து வருகிறார். நேற்றைய எபிசோடிலும் மோட்டிவேஷனல் ஸ்பீச் கொடுப்பதற்காக தனது அனுபவங்களை கூறி பேசத்தொடங்கினார்.

மதுமிதா சொல்ல வந்தது

மதுமிதா சொல்ல வந்தது

உடனே மதுமிதா பேச்சில் குறுக்கிட்டு அவர் சொல்ல வந்ததை வேறு மாதிரி திரித்து விட்டுவிட்டார் வனிதா. ஆடியோ லாஞ்ச் புரோகிராமுக்கு கூட ஆரம்பத்தில் போகாமல் இருந்தேன், பலர் எனக்கு அறிவுரை கூறியதால் போகத் தொடங்கினேன் என கூற வந்தார்.

சம்பந்தமில்லாமல் பேசுகிறாய்

சம்பந்தமில்லாமல் பேசுகிறாய்

ஆனால் அதற்குள் குறுக்கிட்ட வனிதா இது மோட்டிவேஷனல் ஸ்பீச்சே இல்லை. சம்பந்தமில்லாமல் பேசுகிறாய் என்று அவர் பாட்டுக்கு பேசி மதுமிதாவை ஒரு வழியாக்கிவிட்டார்.

கேரியருக்கு வேட்டு வைக்க பார்த்தார்

கேரியருக்கு வேட்டு வைக்க பார்த்தார்

மேலும் ஆடியோ லாஞ்ச்க்கு போகமாட்டேன் என்பதெல்லாம் நல்லவளாக காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காகதான். ஆடியோ லாஞ்ச்க்கு செல்வது புரோடியூசருக்கு நாம் செய்ய வேண்டிய கடமை என்று கூறி மதுமிதா கேரியருக்கே வேட்டு வைக்க பார்த்தார் வனிதா.

வாய்க்கு வந்தபடி பேசிய வனிதா

வாய்க்கு வந்தபடி பேசிய வனிதா

ஆடியோ லாஞ்சுக்கு போகமாட்டேன் என்று கூறும் நீயெல்லாம் எதற்கு சினிமாவுக்கு வந்தாய் என்றும் மிகவும் அநாகரிகமாக பேசினார் வனிதா. மேலும் அபிராமியின் குழந்தை மேட்டரை எடுத்து தாலி போடமாட்டாளாம் வாட்டர் பாட்டிலை வைத்து விளையாடுவதை மட்டும் தவறாக கூறுவாளாம் என்றும் வாய்க்கு வந்தபடி பேசினார்.

கப்பென பிடித்த தர்ஷன்

கப்பென பிடித்த தர்ஷன்

ஆனால் மதுமிதா சொல்ல வந்ததும் அவர் நடந்துகொள்வதும் நிகழ்ச்சியை பார்க்கும் மக்களுக்கு புரியும். மதுமிதா சொல்ல வந்ததை கப்பென பிடித்த தர்ஷன், மதுமிதா பேசியதுதான் மோட்டிவேஷனல் ஸ்பீச் அவரை பேசவிடவில்லை என்றார். இதனை கொஞ்சமும் ஏற்காத கவின் இடத்தை காலி செய்து ஓட்டம் பிடித்தார்.

பிபியை ஏத்திவிட்றுவாங்க போல

பிபியை ஏத்திவிட்றுவாங்க போல

வனிதா, மதுமிதாவுடன் பேசும் விதமும் நடந்து கொள்ளும் விதமும் கொஞ்சமும் சகிக்க முடியவில்லை. குறிப்பாக நேற்றைய எபிசோடில் மதுமிதாவே அமைதியாக இருந்தபோதும் வான்ட்டடாக டைனிங் ஏரியாவில் அமர்ந்து வனிதா பேசிய பேச்சு அப்பப்பா... நமக்கு பிபியை ஏத்திவிட்றுவாக போல!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X