பிக்பாஸ் வீட்டிலும் கஸ்தூரியிடம் மல்லுக்கட்டி அசிங்கப்படுத்திய வனிதா.. ப்பா.. என்னா பேச்சு!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கஸ்தூரியிடம் வனிதா மீண்டும் மல்லுக்கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பிக்பாஸ் வீட்டிற்குள் கஸ்தூரி வைல்டு கார்டு என்ட்ரியாக சென்றிருந்த போது, ஏற்கனவே மக்களால் வெளியேற்றப்பட்ட வனிதாவையும் வைல்டு கார்டு என்ட்ரியாக அழைத்து வந்தார் பிக்பாஸ்.
பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே வனிதா கஸ்தூரியிடம் ரொம்பவே ஆட்டிட்யூட் காட்டினார். தான்தான் பெரிய செலிபிரிட்டி என்பது போல நடந்து கொண்டார்.

யார் அழகு?
மேலும் பள்ளிக்கூட டாஸ்க்கின் போது கஸ்தூரி வாத்து என்று கூறியதாக, அவருடன் ஒன்டிக்கு ஒன்டி நின்றார் வனிதா. மேலும் யார் அழகு என்ற ரீதியிலும் பேசி சண்டை போட்டார் வனிதா.

பிளாக் செய்த வனிதா
பிக்பாஸ் வீட்டை வீட்டு வெளியே வந்த பிறகும் இருவருக்கும் இடையிலான சண்டை டிவிட்டரில் தொடர்ந்தது. இதனால் கஸ்தூரியை தரம் தாழ்ந்து பேசிய வனிதா, ஷட் அப் என்று சொல்லி அவரை பிளாக் செய்தார்.

பழைய போட்டியாளர்கள்
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை கடந்துள்ள நிலையில் அதனை கொண்டாடும் விதமாக வெளியேற்றப்பட்ட ஹவுஸ்மேட்ஸ்களை அழைத்துள்ளார் பிக்பாஸ். அதன்படி, வனிதா, கஸ்தூரி, சேரன், சாக்ஷி, அபிராமி ஆகியோர் நேற்று பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர்.

அசிங்கப்படுத்திய வனிதா
பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் போதே கஸ்தூரியை ஏன் உள்ளே அனுப்பினார்கள் என அவர் குறித்து கேவலாமாக பேசினார் வனிதா. பின்னர் போட்டோக்களால் அலங்கரிக்கப்பட்ட அறைக்குள் கஸ்தூரி சென்ற போது, நாங்கள் தனியாக பேசுகிறோம் நீ வெளியே போ என அவரை படு கேவலமாக அசிங்கப்படுத்தினார்.

கஸ்தூரிதான் காரணம்
சில விஷயங்களை கஸ்தூரி வேறு மாதிரி திரித்துக் கூறுவதாகவும் தெரிவித்தார் வனிதா. மேலும் அங்கு நடந்த பிரச்சனைக்கு காரணமே கஸ்தூரிதான் என்றும் கூசாமல் பேசினார் வனிதா. தொடர்ந்து கஸ்தூரியை தரக்குறைவாக விமர்சித்தார் வனிதா.

திட்டும் நெட்டிசன்ஸ்
வனிதா சண்டை போட்டாலும், நான் திரும்ப சண்டைபோட மாட்டேன் என ஏற்கனவே டிவிட்டியிருந்தார் கஸ்தூரி. ஆனால் வனிதா வெளியில் நடந்த பிரச்சனைகளை மனதில் வைத்து அந்த வஞ்சத்தை பிக்பாஸ் வீட்டில் தீர்த்துக்கொண்டார். வனிதாவின் பிஹேவிங்கை பார்த்த நெட்டிசன்கள் அவரை திட்டித்தீர்த்தனர்.
எதுக்கு உள்ள விட்டாங்க
'வனிதா கஸ்தூரியை சொல்றா இதை வேற எதுக்கு உள்ள விட்டாங்கன்னு தெரியல'.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
இணை யாரும் இல்லை
கஸ்தூரியை அசிங்கப்படுத்துல வனிதாவுக்கு ஈடு இணை யாரும் இல்லை என்று கூறுகிறார்.
கெஸ்டா போயுமா சண்டை?
கஸ்தூரியை லெப்ட் ஹேண்ட்ல டீல் பண்றாப்ல வனிதா. ட்விட்டர்லதான் சண்டை போட்டாங்கன்னா, உள்ள கெஸ்டா போயுமா? என்று கேட்கிறார் இவர்.
அசிங்கப்பட்டுருச்சு கஸ்தூரி
வனிதாக்கிட்டேருந்து மரண அசிங்கப்பட்டுச்ருசு கஸ்தூரி என்று கூறுகிறார் இவர்.
அரோகென்ட்
வனிதா செய்யும் எதை வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் கஸ்தூரியை அசிங்கப்படுத்தும் விதத்தை ஏற்கமுடியாது. ஒரு ஹவுஸ்மேட்டாக வனிதாவை போலவே அவருக்கும் எங்கேயும் போக சுதந்திரம் இருக்கு.. வனிதா விஜயகுமார் ரொம்பவும் அரோகென்ட்டாக நடந்துகொண்டார் என்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











