வேணும்னா வந்து சமைச்சு சாப்பிடு.. மீண்டும் மதுமிதாவை வம்பிழுத்த சைலன்ட் கில்லர் ரேஷ்மா!
Recommended Video
சென்னை: மதுமிதாவை வனிதா அன்ட் கோ மீண்டும் வம்பிழுத்ததால் மக்கள் கடுப்பாகியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மதுமிதாவை பார்த்தாலே வனிதா, ரேஷ்மா, அபிராமி, சாக்ஷி மற்றும் ஷெரினுக்கு பிடிக்கவில்லை. மதுமிதாவை எப்படியாவது வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பதில் மும்முரமாக உள்ளது வனிதா அன்ட் கோ.
மது என்ன செய்தாலும் குத்தம் சொல்வதும் குறை சொல்வதுமாக உள்ளது வனிதா அன்ட் கோ. மேலும் மது தங்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் எதிர்பார்த்து காத்திருக்கிறது அந்த கும்பல்.

ரேஷ்மாவிடம் கேட்ட மதுமிதா
இந்நிலையில் நேற்றைய எபிசோடில் ஓட்ஸ் எனக்கு பிடிக்கவில்லை ஆகையால் எனக்கு பழைய சாதம் மட்டும் கொஞ்சம் எடுத்து வையுங்கள் என ரிக்கெயூஸ்ட்டாக ரேஷ்மாவிடம் கேட்டார் மதுமிதா.

அபிராமி போட்ட சீன்
அப்போது அபிராமி, ஓட்ஸ் ரொம்ப டேஸ்டி உடம்புக்கு நல்லது. எனக்கு சோறே சாப்பிட பிடிக்காது, அப்படி இப்படி என மதுமிதாவை வெறுப்பேற்றுகிறார். ஆனால் அதை கொஞ்சமும் பொற்படுத்தாமல் மதுமிதா வீட்டின் கேப்டனான மோகன் வைத்யாவிடம் கூறுகிறார்.

தனியாக சமைக்க முடியாது
அதை அப்படியே ரேஷ்மாவிடம் நக்கலாக சொல்கிறார் மோகன் வைத்யா. அவ்வளவுதான் தனித்தனியா யாருக்கும் சமைக்க முடியாது வேண்டும் என்பவர்கள் சமைத்து சாப்பிட்டுக்கொள்ளுங்கள் என கத்துகிறார் ரேஷ்மா.

தனக்கு தானே ஆறுதல்
இதனை சேரனிடம் சொல்லி ரொம்பவும் வருத்தப்படுகிறார் மதுமிதா. மேலும் இறைவன் இருக்கிறான் பார்த்துக்கொள்வான் என்றும் தனக்கு தானே ஆறுதல் கூறிகொள்கிறார் மதுமிதா.

பார்ஷியல்
ரேஷ்மா மதுமிதா கேட்டபோதே முடியாது என சொல்லாமல் பிறகு ஜாடை மாடையாக பேசுகிறார். அதேபோல் கேப்டனான மோகன் வைத்யா செம பார்ஷியலாக உள்ளார். மதுவை கண்டாலே மோகனுக்கு பிடிக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. பிக்பாஸ் வீட்டின் கேப்டன், வயதில் மூத்தவர் இப்படி நடந்து கொள்வதை கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியாது.


Click it and Unblock the Notifications











