யார் அடுத்த ஜூலி? வனிதா, சாக்ஷி, அபிராமி இடையே கடும் போட்டி!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் வனிதா, சாக்ஷி, அபிராமி ஆகியோர் நடந்துகொள்ளும் விதம் ஜூலி இடத்திற்கு அவர்கள் போட்டி போடுவதாக உள்ளது.
பிக்பாஸ் சீசன் 3யில் திரைதுறையை சேர்ந்த 16 பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களில் வனிதா, சாக்ஷி, அபிராமி, ஷெரின், ரேஷ்மா ஆகியோர் ஒன்று சேர்ந்துகொண்டு ஒரே கேங்காக கலவரம் செய்து வருகின்றனர்.
இந்த 5 பேரும் 5 அவதாரமாக உள்ளனர். குறிப்பாக ரேஷ்மா ஊம குசும்பியாக உள்ளார். சைலன்ட்டாக செம பாலிட்டிக்ஸ் செய்துவருகிறார்.

போட்டுக்கொடுப்பதில் கில்லாடி
அதுவும் வனிதா சொல்வதற்கெல்லாம் ஆமாம் சாமி போடுவதில் ரேஷ்மா கில்லாடியாக உள்ளார். கிடைக்கும் கேப்பில் எல்லாம் மதுமிதாவை ஓரம் கட்டுவதிலும் அவரை போட்டுக்கொடுப்பதிலும் குறியாக உள்ளார் ரேஷ்மா.

காணாமல் போன மதிப்பு
இதனாலேயே ரேஷ்மாவின் சொந்தக்கதையை கேட்டு அவர் மீது ரசிகர்களுக்கு ஏற்பட்ட இரக்கமும் மரியாதையும் காணாமல் போய்விட்டது. மதுமிதா, மீரா குறித்து அவ்வளவும் பேசிவிட்டு வெளியே நல்லவர் போல் நடிக்கிறார் ரேஷ்மா.

கண்டமேனிக்கு கத்தும் ஷெரின்
இதேபோல் ஷெரினும் வனிதாவுக்கு ஆமாம் சாமி போடுகிறார். என்ன நடந்தது, என்ன நடக்கிறது என தெரியாமலேயே வனிதா யாரை பற்றி என்ன சொன்னாலும், ஆமாம் அவர் அப்படிதான் என கண்டமேனிக்கு கத்துகிறார்.

கவினுக்கு ரூட் போடும் சாக்ஷி
அடுத்தபடியாக சாக்ஷி, சாக்ஷியின் நடவடிக்கைகள் அவர் கவினுக்கு ரூட் போடுகிறாரோ என்று யோசிக்க வைக்கும் வகையில் உள்ளது. கவின் உள்ள இடத்திலும் அல்லது கவின் யாரிடமாவது பேசிக்கொண்டிருக்கும் இடத்திலும் யாருமே கூப்பிடாமல் ஆஜராகி விடுகிறார்.

ஜூலி செய்த வேலை
ஏற்கனவே, அபிராமி, வனிதா ஆகியோர் மீரா மீது கோபத்தில் உள்ள நிலையில் நேற்று மீரா கூறாத ஒன்றை கூறியதாக பற்ற வைத்து குளிர்காய்ந்தார். அவரது இந்த படுகேவலாமான செயல் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே வேலையை முதல் சீசனில் பங்கேற்றிருந்த ஜூலி செய்தார்.

கேமராவை மறந்துவிட்டார்
ஓவியா சொல்லாத ஒன்றை சொன்னதாக கூறி ஒட்டு மொத்த குடும்பத்தையும் அவருக்கு எதிராக திருப்பினார். கொஞ்சமும் வாய்கூசாமல் பொய் சொன்னார் ஜூலி. கேமரா இருப்பதை மறந்து அதே வேலையை செய்துள்ளார் சாக்ஷி.

ஆட்டம் கொஞ்சநஞ்சமல்ல
அடுத்து வனிதா, கேப்டன் ஆப் தி ஷிப். எல்லா பிரச்சனைக்கும் மூல காரணமே இந்த வனிதாதான். தன்னை பெரிய செலிபிரிட்டி, முன்னணி நடிகை என நினைத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டில் அவர் போடும் ஆட்டம் கொஞ்சநஞ்சமல்ல.

யாரும் வாயே திறக்கக்கூடாது
அங்கொரு பேச்சு, இங்கொரு பேச்சுமாக பிரச்சனையை கிரியேட் செய்து வருகிறார் வனிதா. அவர் செய்யும் தவறை சுட்டிக்காட்டுபவர்களை பேசவே விடாமல், தீர்த்தேன் என்கிறார். அதுவும் மதுமிதா மற்றும் மீராவை வாயே திறக்கக்கூடாது என்று கூறும் வனிதா, மதுமிதாவின் கேரியரை காலி செய்வதிலேயே குறியாக உள்ளார்.

டைட்டா அறையனும்
அபிராமிக்கும் ஜூலிக்கும் உள்ள ஒற்றுமைகளை ஏற்கனவே நாம் பார்த்துவிட்டோம். ஜூலி ஓவியாவை டைட்டா ஒரு அறை விடனும் போல இருக்கு என்றார். அதேபோல் அபிராமி, மதுமிதாவை அறைந்துவிடுவேன் என்றார். மேலும் மீராவையும் அடிச்சு மூஞ்ச ஒடைச்சுறுவேன் என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

ஸ்ரீக்கு பிராக்கெட்
ஜூலி முதலில் நடிகர் ஸ்ரீக்கு பிராக்கெட் போட்டார். ஆனால் ஸ்ரீ பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே சென்றுவிட்டார். இதனால் ஆரவ் மீது காதல் என கன்டென்ட் கொடுத்தார் ஜூலி.

முகெனுக்கு ரூட்டு
அவரை போலவே வந்த முதல் நாளிலேயே கவினுடன் காதல் என்றார் அபிராமி. அவரது காதலுக்கு கவின் முறையாக பதில் சொல்லாததால் முகெனுக்கு ரூட்டு போட்டார். தனக்கும் முகெனுக்கும் பிறந்த குழந்தை என வாட்டர் பாட்டிலை வைத்து கேவலமான ஒரு நாடகத்தை நடத்தினார்.

யார் அடுத்த ஜூலி
வனிதா, சாக்ஷி, அபிராமி, ரேஷ்மா, ஷெரின் ஆகியோர் பல விஷயங்களில் ஜூலிக்கே டஃப் கொடுத்து வருகின்றனர். இந்த ஐந்து பேருக்கும் இடையே பிக்பாஸ் டைட்டில் வின்னர் யார் என்பதை காட்டிலும் யார் அடுத்த ஜூலி என்ற ரீதியிலேயே போட்டியிருப்பதாக அவர்களின் நடவடிக்கையில் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











