வெளியே வந்தும் தீராத சண்டை.. ஷட்அப் சொல்லி கஸ்தூரியை பிளாக் செய்த வனிதா! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Recommended Video

Vanitha vijaykumar opens up:மது பேசுவது தவறு, வனிதா விளக்கம்

சென்னை: நடிகை கஸ்தூரியை, நடிகை வனிதா விஜயகுமார் ஷட் அப் என்று சொல்லி டிவிட்டரில் பிளாக் செய்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் முதல் 15 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார் வனிதா விஜயகுமார். நிகழ்ச்சியில் முதல் இரண்டு நாட்கள் அமைதியாக இருந்த வனிதா, மூன்றாவது நாளே தான்தான் பிக்பாஸ் வீட்டின் ஓனர் என்பதை போல நடந்து கொண்டார்.

தான் சொல்வதுதான் சரி தான் சொல்வதைதான் மற்ற ஹவுஸ்மேட்ஸ்கள் கேட்க வேண்டும் என்று அதிகாரம் செய்து வந்தார். மற்றவர்கள் பேசுவதற்கும் கருத்து சொல்வதற்கும் உரிமை இல்லை என்பதை போல பேசி வந்தார்.

கழுவி ஊற்றிய நெட்டிசன்ஸ்

கழுவி ஊற்றிய நெட்டிசன்ஸ்

போதா குறைக்கு குரூப் ஃபார்ம் செய்து, ஒருவருக்கொருவர் சண்டை மூட்டி விடுவது, கொளுத்தி போடுவது, தேவையில்லாத விஷயத்தில் தலையிடுவது என கேவலமாக நடந்துகொண்டார். இதனால் பார்வையாளர்கள் வனிதாவை கடுமையாக திட்டித் தீர்த்தனர். நெட்டிசன்களும் வனிதாவை பஜாரி, சண்டைக்காரி என கழுவி ஊற்றினர்.

கெஞ்சல்

கெஞ்சல்

வனிதா பேசும் பேச்சால் பார்வையாளர்களுக்கே படபடப்பு வருவது போல் இருந்தது. அந்தளவுக்கு சண்டை போட்டு வந்தார். இதனால் வனிதாவை எப்பபடியாவது வெளியேற்றுங்கள் என்று பிக்பாஸின் காலில் விழாத குறையாக கெஞ்சினர்.

வெளியேற்றிய மக்கள்

வெளியேற்றிய மக்கள்

இதனைத் தொடர்ந்து இரண்டாவது வாரமே நாமினேஷன் லிஸ்ட்டில் இடம்பெற்றார் வனிதா. எப்போது நாமினேஷனுக்கு வருவார் தூக்கியெறியலாம் என்று காத்திருந்த மக்கள் வாக்களிக்காமல் அவரை புறக்கணித்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றினர்.

வைல்டு கார்டு

வைல்டு கார்டு

ஆனால் அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் எந்த சண்டையும் இல்லாததால் கன்டென்ட் கிடைக்காமல் தவித்தார் பிக்பாஸ். இதனால் வைல்டு கார்டு என்ட்ரியாக மீண்டும் வனிதாவை அழைத்து வந்தார் பிக்பாஸ். ஆனால் அவருக்கு முன்னதாக நடிகை கஸ்தூரியையும் வைல்டு கார்டாக அழைத்து வந்தார் பிக்பாஸ்.

திருந்தாத வனிதா

திருந்தாத வனிதா

வனிதா, வந்த நாள் முதலே கஸ்தூரியுடன் மோதலில் ஈடுபட்டு வந்தார். தான்தான் பெரிய செலிபிரிட்டி என்ற ரீதியில் கஸ்தூரியை மட்டம் தட்டி பேசுவது, கஸ்தூரி குறித்து மற்ற ஹவுஸ்மேட்ஸ்களிடம் தவறாக பேசி சண்டை மூட்டி விடுவது என, திருந்தாமல் பழையபடி வேலையை ஆரம்பித்தார்.

வாத்து வனிதா

வாத்து வனிதா

பள்ளிக்கூட டாஸ்க்கின் போது டீச்சராக இருந்த கஸ்தூரி, வனிதாவை வாத்து என்று கூறியதாக சண்டை போட்டார். அப்போது தொடங்கிய சண்டை கஸ்தூரி வெளியேறும் வரை தொடர்ந்துக்கொண்டே இருந்தது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகும் இருவருக்கும் டிவிட்டரில் மோதல் ஏற்பட்டது. வனிதாவை கஸ்தூரி வாத்து என்று சொல்லாமல் சொல்ல அங்கு ஆரம்பித்தது சண்டை.

கஸ்தூரி பதிலடி

பிக்பாஸ் ஷோ ஒரு ஃபேக் டிராமா என வனிதா டிவிட்ட, அதற்கு பதிலடி கொடுத்த கஸ்தூரி, வனிதா அங்கு இருந்தபோது இந்த நல்ல உணர்வு மேலோங்கியிருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். "ஏன் இவ்வளவு விஷம், ஏன் சண்டை, இது ஒரு கேம் ஷோ" என்று கெஞ்சியது எனக்கு இன்னும் தெளிவாக நினைவிருக்கிறது, அப்போது "இது ஒரு ரியாலிட்டி ஷோ" என்று கத்தினாள்! ஆனால் இப்போது இறுதியாக இது ஒரு போலி நாடகமா? சில உண்மைகள் ஒருபோதும் காட்டப்படாது என்பதால் மட்டுமே இப்படி சொல்கிறார்! என்று டிவிட்டியிருந்தார்.

நான் அதுக்குதான் வந்தேன்

அதற்கு பதிலளித்த வனிதா, நீங்க அடங்கவே மாட்டிங்க. உங்களை மகிழ்விக்க நீங்கள் அங்கு வந்தீங்க. பார்வையாளர்களை மகிழ்விக்க நான் பிக்பாஸ்க்கு வந்தேன். இந்த நிகழ்ச்சி ஒரு பெரிய வெற்றியைப் பெற்றது. பிக்பாஸ் ஒரு நாடக வகை நிகழ்ச்சி. பொழுதுபோக்குக்காகதான் எல்லோரும் பார்க்கிறார்கள் என்றார்.

அஃபையர்ஸ்

அதற்கு பதிலடி கொடுத்த கஸ்தூரி, மன்னிக்கவும் வனிதா. 'பொழுதுபோக்கு' என்றால் என்ன என்ற வக்கிரமான யோசனை உங்களிடம் உள்ளது. நீங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் அதே தீர்ப்பைக் காட்ட மாட்டீர்கள் என்று நம்புகிறேன். நான் என்னை மகிழ்விக்க பிக் பாஸுக்கு வரவில்லை, மற்றவர்களின் அஃபையர்களில் எனக்கு எந்த குழப்பமும் இல்லை என கூறினார் கஸ்தூரி.

கஸ்தூரி பிளாக்டு

கஸ்தூரியின் இந்த டிவிட்டை பார்த்த வனிதா செம கடுப்பாகிவிட்டார். ஓ.. நீ வாய மூடு.. நீ உள்ள இருந்ததற்கும் வெளியே இருக்குறதுக்கும் அர்த்தமே இல்லை. நல்லதுக்காக நான் உன்னை பிளாக் செய்கிறேன் என்று டிவிட்டி வனிதா, கஸ்தூரியை பிளாக் செய்துள்ளார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

முன்னாள் நடிகைகள் இருவரும் தங்களின் தரம் தாழ்ந்து இப்படி டிவிட்டரில் சண்டை போட்டுக்கொள்வதை பார்த்த திரைத்துறையினரும் மக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X