Don't Miss!
- Finance எம்.எஸ்.தோனி-யை திட்டம் போட்டு தூக்கிய Citreon..!
- Sports தோனிக்கு ஒரு பந்துதான்.. சோலியை முடித்த துபே - ருது.. சிஎஸ்கே பேட்டிங்கை கண்டு கலங்கிய லக்னோ
- Automobiles 20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
- News ‛‛முஸ்லிம் முதல் தாலி வரை’’.. திடீரென பிரசார யுக்தியை மாற்றிய பிரதமர் மோடி.. பின்னணியில் 2 காரணம்
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வா ஃபிராடு வா.. லாஸ்லியாவை டோட்டலாக டேமெஜ் செய்த 'விருந்தாளி' வனிதா!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் விருந்தாளியாக ரீஎன்ட்ரி ஆகியுள்ள வனிதா விஜயகுமார் லாஸ்லியாவை ஃபிராடு என்று அழைத்து அசிங்கப்படுத்திவிட்டார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து இரண்டாவது போட்டியாளராக வெளியேற்றப்பட்ட வனிதா விஜயகுமார், நேற்று விருந்தாளியாக மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் அழைக்கப்பட்டார். பிக்பாஸ் வீட்டிற்குள் பெரும் ஆட்டம்பாட்டம் என உள்ளே நுழைந்தார் வனிதா.
இதைத்தொடர்ந்து, பிக்பாஸ் ஹோட்டலாக மாறியிருந்த பிக்பாஸ் வீடு விருந்தாளியான வனிதாவுக்கு பெரும் வரவேற்பு கொடுத்தது. பின்னர் தனது அறை, தனக்கான மெனு எனவென்று கேட்டப்படியே செம கெத்தை காண்பித்தார்.
வச்சு செய்த வனிதா
பின்னர் லிவிங் ஏரியாவுக்கு சென்ற அவர், எல்லோரையும் அழைத்து அருகில் அமருமாறு கூறினார். அவ்வளவுதான்.. ஒவ்வொருவராக வச்சு செய்ய தொடங்கினார் வனிதா. அபிராமியை திட்டித் தீர்த்த அவர், முகெனையும் விளாசினார்.
அபிக்கு அட்வைஸ்
நேர்கொண்ட பார்வை படத்தில் சிறப்பாக நடித்திருப்பதாக அபிராமியை பாராட்டிய வனிதா, அந்த படத்தை வைத்தே அவரை விமர்சித்து அவருக்கு அட்வைஸும் செய்தார். இதைத்தொடர்ந்து லாஸ்லியாவை அழைத்தார் வனிதா.
வா ஃபிராடு வா
வா ஃபிராடு வா.. வந்து என் பக்கத்துல உட்காரு என்று லாஸ்லியாவை அழைத்த அருகில் உட்கார வைத்தார். பின்னர் லாஸ்லியாவை நம்பாதீங்க, இவளுக்கு பல முகங்கள் இருக்கு, இவள் சரியான ஃபிராடு, ராவணன் போல் இவளுக்கும் 10 முகம் உள்ளது என சிரித்துக்கொண்டே கூறினார்.
ஷாக்கான லாஸ்லியா
இதனை கேட்டு ஷாக்கான லாஸ்லியா, ஃபிராடா என்றபடி எப்போதும் போல சிரித்து மழுப்பினார். அப்போதும் விடாத வனிதா, கஸ்தூரியுடன் இணைந்து லாஸ்லியா யார் என்று கண்டுபிடிப்போம் மிஷன் லாஸ்லியா என்ற டாஸ்க்கை நான் உனக்கு தருகிறேன் என தன்பாட்டுக்கு லாஸ்லியாவை டேமெஜ் செய்தார்.
வெறுப்பு அதிகரிப்பு
சாக்ஷியும் கவினும் காதலிக்கிறார்கள் என்று தெரிந்தும் கவின் பின்னால் சுற்றி அவரை தன்பக்கம் இழுத்தார். மேலும் எப்போதும் கவினுடன் கடலை போடும் அவர், கவினை தவிர வேறு யாரிடமும் பேசுவதில்லை. இதனால் நாளுக்கு நாள் அவர் மீதான வெறுப்பு ரசிகர்களுக்கு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
வாழைப்பழத்தில் ஊசி
இந்நிலையில் வனிதா சிரித்துக்கொண்டே ரசிகர்களின் மனதில் பட்டதை நைசாக வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல் ஏற்றியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. எது எப்படியோ எல்லோரின் உண்மை முகங்களையும் விருந்தாளி வனிதா வெளிப்படுத்தினால் சரி!