பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார் வனிதா.. இனி யார் சண்டை மூட்டி விடுவார்?

Recommended Video

Bigg Boss 3 Tamil Arun Vijay: தங்கையை பற்றி புகார் தெரிவித்த ரசிகர்கள்

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் சண்டைக்கோழியாக வலம் வந்த வனிதா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டில் சண்டைக்கோழியாக வலம் வந்தவர் வனிதா. தான் மட்டும்தான் பேச வேண்டும், பேசுவதற்கு தனக்கு உரிமை உள்ளது என்ற ரீதியிலேயே பேசி வந்தார்.

மற்றவர்கள் பேசுவதை ஒருபோதும் அவர் காது கொடுத்து கேட்டதில்லை. மேலும் சிறிய பிரச்சனைகளை கூட பெரிதாக்கி வீட்டையே அதகளப்படுத்தி வந்தார்.

வனிதாவின் வாடிக்கை

வனிதாவின் வாடிக்கை

மேலும் ஒருவர் சொல்வதை மற்றவரிடம் போட்டுக்கொடுத்து பிரச்சனையை கிளறி வந்தார் வனிதா. பின்னால் பேசுவதையும் வாடிக்கையாக வைத்திருந்தார் வனிதா.

முதலில் வெளியேற்றுங்கள்

முதலில் வெளியேற்றுங்கள்

இதனால் சமூக வலைதளங்களிலும் நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றி வந்தனர். வனிதாவை முதலில் வெளியேற்றுங்கள் என போராட்டம் நடத்தாதக் குறையாக கோரிக்கை விடுத்துவந்தனர்.

5 பேர் நாமினேட்

5 பேர் நாமினேட்

எப்போது வனிதா எவிக்ஷன் லிஸ்ட்டுக்கு வருவார் அவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றலாம் என காத்திருந்தனர் ரசிகர்கள். கடந்த வாரம் ஹவுஸ் மேட்ஸ்களால் வனிதா, மீரா, சரவணன், மோகன் வைத்யா, மதுமிதா ஆகிறய 5 பேர் நாமினேட் செய்யப்பட்டனர்.

சரவணன் மது சேவ்டு

சரவணன் மது சேவ்டு

அவர்களில் மோகன் வைத்யா சனிக்கிழமையே காப்பாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து நேற்றைய எபிசோடில் சரணவன், மதுமிதா ஆகியோர் காப்பாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர்.

வனிதா தெனாவட்டு

வனிதா தெனாவட்டு

இதனால் வனிதாவும் மீராவும் மட்டும் லிஸ்டில் இருந்தனர். கமல் அறிவிக்கும் வரை தான்தான் வெளியேறப்போகிறோம் என்ற எண்ணமே இல்லாமேல் தெனாவட்டாக இருந்தார் வனிதா.

அங்கு வரும்போது சொல்கிறேன்

அங்கு வரும்போது சொல்கிறேன்

ஹவுஸ் மேட்ஸ்களுக்கு உங்கள் இருவரின் அட்வைஸ் என்ன என கேட்டார் கமல். அப்போது பேசிய வனிதா, ஏற்கனவே கூறிவிட்டேன் சார், அங்கு அழையுங்கள் வந்து சொல்கிறேன் என்றார்.

ஷாக்கான வனிதா

ஷாக்கான வனிதா

அப்போது சற்றும் தயக்கம் காட்டாமல் பட்டென ஓகே இங்கே வாருங்கள் வனிதா என்று எவிக்ஷன் கார்டை காட்டினார் கமல். அதனை பார்த்து ஷாக்கான வனிதா, நம்ப முடியாமல் நன்றாக தானே விளையாடினேன் என்று கூறியபடியே வெளியேறினார்.

அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

சனிக்கிழமை முதலே வனிதா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் றெக்கை கட்டிப்பறந்தன. இருப்பினும் நேற்றைய எபிசோடில் வனிதாவின் எவிக்ஷன் அதிகாராப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஏழரையை கூட்டிய வனிதா

ஏழரையை கூட்டிய வனிதா

வனிதா பிக்பாஸ் வீட்டில் இருந்தவரை சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. தினமும் ஒருவருடன் சண்டை போட்டு ஏழரையை கூட்டி வந்தார் வனிதா.

கன்டென்ட் கொடுத்த வனிதா

கன்டென்ட் கொடுத்த வனிதா

இதனால் பிக்பாஸ் வீடு களைக்கட்டியது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினமும் ஒரு கன்டென்ட் கொடுப்பவர் வனிதாவாகதான் இருந்தார். வனிதாவின் சண்டைக்காகவே பிக்பாஸை பார்க்க ஒரு கூட்டமிருந்தது.

சுவாரசியம் குறைந்துவிடும்

சுவாரசியம் குறைந்துவிடும்

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வனிதா வெளியேற்றப்பட்டதால் இனி கன்டென்ட்டுக்கு என்ன செய்யப்போகிறீர்கள் என நெட்டிசன்கள் வேதனை அடைந்துள்ளனர். சண்டை மூட்டியான வனிதா இல்லாததால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி சுவாரசியம் குறைந்து விடும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X