புட்டு புட்டு வைக்கும் வனிதா: ஏன்டா வெளியோற்றினோம்னு ஃபீல் பண்ணும் பிக் பாஸ்?
சென்னை: வனிதா விஜயகுமாரை அவசரப்பட்டு வெளியேற்றிவிட்டோமோ என்று பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஃபீல் பண்ணுகிறார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிக் பாஸ் 3 வீட்டில் வனிதா விஜயகுமார் இருந்தவரை நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருந்தது. அவர் கிளம்பிய கையோடு நிகழ்ச்சி போர் அடிக்கத் துவங்கிவிட்டது. வனிதா இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க மாட்டோம் என்று பார்வையாளர்கள் சொல்லும் நிலைமை ஏற்பட்டது.
வெளியே வந்ததில் இருந்து வனிதா அடுத்தடுத்து பேட்டிகள் கொடுப்பதில் படுபிசியாக உள்ளார்.

வனிதா
பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது எப்படி மனதில் பட்டதை எல்லாம் பேசினாரோ அதே போன்று தான் தற்போது பேட்டிகளிலும் பேசி வருகிறார் வனிதா. பிக் பாஸ் வீட்டில் இரவில் விளக்குகளை அணைப்பது இல்லை, பார்வையாளர்களுக்கு மட்டும் வேறு மாதிரியாக காட்டுகிறார்கள் என்ற உண்மையை சொல்லிவிட்டார் வனிதா.

நடிப்பு
முதல் வாரம் மட்டுமே போட்டியாளர்கள் உண்மையாக இருந்தார்கள் அதன் பிறகு போலியாக நடிக்கத் துவங்கிவிட்டனர் என்றார் வனிதா. திரும்பும் பக்கம் எல்லாம் கேமராக்கள் இருப்பதால் போட்டியாளர்கள் நடிக்கிறார்கள் என்று மற்றொரு உண்மையைும் போட்டுடைத்துவிட்டார் அவர். போட்டியாளர்கள் போலியாக இருப்பதாக பார்வையாளர்கள் கூறி வந்த நிலையில் அது தான் உண்மை என்பதை உறுதி செய்தவர் வனிதா.

புது மனிதர்
பிக் பாஸ் வீட்டிற்கு சென்றதால் என்னை பற்றி நானே புது விஷயங்களை கற்றுக் கொண்டேன், புது நான் உருவாகியுள்ளேன் என்று முன்னாள் போட்டியாளர்கள் பலர் தெரிவித்தனர்.இது குறித்து வனிதாவிடம் கேட்டதற்கு அதெல்லாம் ஒன்றும் இல்லை. நான் எப்படி சென்றேனோ அப்படியே தான் வந்துள்ளேன் என்று பளிச்சென்று கூறிவிட்டார். பிக் பாஸ் வீட்டில் 2 நாளைக்கு ஒரு முறை எல்லாம் காதல் வருகிறது என்ற தகவலையும் தெரிவித்தார் வனிதா. வனிதா தொடர்ந்து பல உண்மைகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

ஒயில்டு கார்டு
பிற முன்னாள் போட்டியாளர்கள் போன்று இல்லாமல் வனிதா தைரியமாக பிக் பாஸின் முகத்திரையை கிழித்துக் கொண்டிருக்கிறார். இதனால் வனிதாவை ஏன் வெளியே அனுப்பினோம் என்று பிக் பாஸ் நொந்து கொண்டிருப்பாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. வனிதாவை ஒயில்டு கார்டு என்ட்ரியாக அழைத்து வந்தால் பார்வையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றி வைத்தது போன்றும் ஆகிவிடும், அவர் மேலும் பேட்டிகள் கொடுக்காமல் தடுத்து நிறுவது போன்றும் ஆகிவிடும். இது நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











