அந்த அசிங்கம் புடிச்சவன் உள்ளே இருக்கலாம்.. ஆனா, எங்க வனிதாக்காவும், ஷெரினும் வெளில போகணுமா?
பிக் பாஸ் வீட்டில் இருந்து வனிதா வெளியேற்றப்பட்டதற்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video
சென்னை: வனிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் இருந்து எதிர்ப்பை சம்பாதித்து வந்தாலும், நிகழ்ச்சியின் கண்டெண்ட் குயினாக இருந்து வருபவர் வனிதா தான். அவர் இல்லாத பிக் பாஸ் நிகழ்ச்சியை நினைத்துப் பார்க்கவே சலிப்பாக இருக்கிறது. அந்தளவிற்கு நிகழ்ச்சிக்கு ஏதாவது ஒரு வகையில் சுவாரஸ்யம் தந்து வருகிறார் வனிதா.
இந்நிலையில், இன்றைய எவிக்சனில் அவர் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறார் என்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. ஆனால், அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறக் கூடாது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வனிதா ஆதங்கம்
ஏற்கனவே கடந்த வாரம் சேரன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட போது, ஷெரீனும், வனிதாவும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ‘கவின் தான் வெளியில் போய் இருக்க வேண்டும். அவன்லாம் உள்ள இருக்கும் போது சேரனை இப்படி வெளியில் அனுப்பி விட்டார்களே' என வனிதா ஆதங்கப்பட்டார்.
ஆர்மியினர் கோபம்
தற்போது அதே டயலாக்கை வனிதாவின் வெளியேற்றத்திற்கும் வனிதா ஆர்மியினர் பயன்படுத்தி வருகின்றனர். ‘அந்த அசிங்கம் புடிச்சவன் உள்ளே இருக்கலாம். ஆனா எங்க வனிதாக்கா வெளில போகணுமா?' என அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். வனிதாவுக்கு ஆதரவாக பலரும் தங்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

ஷெரீன் ரசிகர்கள்
இந்த வாரம் குறைந்த வாக்குகள் பெற்ற போட்டியாளர்களில் கடைசி இடத்தில் வனிதாவும், அதற்கு முந்தைய இடத்தில் ஷெரீனும் உள்ளனர். ஒருவேளை கடைசி நேரத்தில் வனிதா காப்பாற்றப்பட்டால், ஷெரீன் வெளியேறும் சூழல் உள்ளது. இது அவரது ரசிகர்களையும் சோகத்தில் தள்ளியுள்ளது.

சாந்த சொரூபியான வனிதா
கடந்த வாரம் முழுவதும் எந்த சர்ச்சைகளிலும் சிக்காமல், சாந்த சொரூபியாகவே வலம் வந்தார் வனிதா. அதோடு, அவரது குழந்தைகளின் வருகையின் போது அவரும் குழந்தையாகவே மாறிப் போனார். இதனால் அவர் மீது மக்களுக்கு இருந்த பார்வை மாறியது. அதனை மேலும் தெளிவு படுத்தும் வகையில் இருந்தது நேற்று கமலின் பேச்சும்.

நல்ல பெயர் கன்பார்ம்
கடந்த முறை அவர் வெளியேற்றப்பட்ட போதும், இதே போல் தான் அதுவரை அவர் மீதிருந்த எதிர்மறை விமர்சனங்களை மாற்றுவது போல சில விசயங்கள் நடந்தது. இம்முறையும் அதே போலவே பிக் பாஸ் காட்சிகளை அமைத்திருக்கிறார். எனவே, நிச்சயம் வனிதா நல்ல பெயரோடு தான் வெளியேற்றப்படுகிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











