இந்தா ஆரம்பிச்சுட்டாங்கள்ல.. நான் குண்டா? என்ன கிண்டல் பண்றீங்களா? கஸ்தூரியை வெளுத்து வாங்கிய வனிதா!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவுக்கும் கஸ்தூரிக்கும் இடையிலான பனிப்போர் தற்போது பெரிதாக வெடிக்க தொடங்கியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக நடிகை கஸ்தூரி பங்கேற்றுள்ளார். வனிதாவை ஹோட்டல் டாஸ்க்கின் போது கெஸ்ட்டாக அறிமுகப்படுத்திய பிக்பாஸ், நேற்று திடீரென வனிதாவையும் வைல்டு கார்டு என்ட்ரி என கூறி குண்டை தூக்கி போட்டார்.
இதனால் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் அதிர்ச்சியடைந்தனர். அப்போதே அப்படி சண்டை போட்டார் வனிதா. ஏதோ விருந்தாளியாக வந்தோம் சென்றுவிடுவோம் என்று வனிதாவே இருந்தாலும் கூட பிக்பாஸ் விட மாட்டார் போல.

சண்டை முட்டிவிடும் பிக்பாஸ்
வனிதா, கஸ்தூரி இரண்டு பேருமே இரண்டு எக்ஸ்ட்ரீம்கள். அப்படி இருக்கும்போது இருவரையும் ஒரே வீட்டுக்குள் வைத்துக்கொண்டு சண்டை மூட்டிவிட்டுள்ளார் பிக்பாஸ்.

கஸ்தூரிதான் டார்கெட்
ஏற்கனவே கஸ்தூரியை கண்டாலே சக ஹவுஸ்மேட்ஸ்களுக்கு பிடிக்கவில்லை. கவின், சாண்டி, தர்ஷன், லாஸ்லியா என அவர்களின் கேங்க் கஸ்தூரியை டார்கெட் செய்து விளாசி வருகின்றனர்.

நான் குண்டா?
இன்று வெளியான புரமோவில் ஸ்கூல் டாஸ்க் புரமோவின் போது வனிதாவை வாத்து வனிதா என்று கூறி வாங்கிக்கட்டிக் கொண்டார் கஸ்தூரி. இந்நிலையில் தற்போது என்ன சொன்னாரோ தெரியவில்லை, நான் குண்டா என வரிந்து கட்டிக்கொண்டு வந்துவிட்டார் வனிதா.

என்னை பார்த்தா தெரியுதா?
என்னை குண்டு என்று சொல்ல வர்றீங்களா? எனக்கு 18 வயதில் பையன் இருக்கான், என்னை பார்த்தால் அப்படியா தெரியுது என்று கேட்டு கஸ்தூரியிடம் எகிறுகிறார் வனிதா. இருவருக்குக்குள்ளும் நடக்கும் சண்டையால் பிக்பாஸ் வீடே அமைதியாகிவிடுகிறது.

வாண்ட்டடாக சிக்குகிறார்
ஏற்கனவே கஸ்தூரி எப்போது சிக்குவார் அவரை வச்சு செய்யலாம் என காத்திருக்கிறது அந்த கவின் கேங்க். இந்நிலையில் வாண்ட்டடாக வண்டியில் ஏறி உட்காருகிறார் கஸ்தூரி. என்ன செய்யப்போகிறார்களோ என்ற இப்போதே ரசிகர்கள் எதிர்பார்க்க தொடங்கிவிட்டனர்.
இப்படி அடிச்சுக்குறாங்களே
நேற்று இரவு வரை 5 பேர் கும்பலின் முதுகெலும்பை உடைக்க வேண்டும் என்று பேசினார்கள். கடைசியில் அவர்களுக்குள்ளேயே இப்படி அடித்துக்கொள்கிறார்களே என நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











