இந்தா தொடங்கியிருச்சுல்ல அடிதடி! ஒரே நாளில் மாறிய அபிராமி! வனிதா அக்கான்னா வனிதா அக்காதான்!
சென்னை: நேற்று வரை முகெனை உருகி உருகி காதலித்த அபிராமி இன்று ஒரே நாளில் அவருக்கு எதிராக மாறிவிட்டார்.
பிக்பாஸ் வீட்டிற்கு நேற்று விருந்தாளியாக வந்த வனிதா பெண் ஹவுஸ்மேட்ஸ்களை விளாசினார். மாப்பிள்ளை தேடவா இங்கே வந்தீர்கள் என கட்டாமாக கேட்டு அட்வைஸ் கொடுத்தார்.
குறிப்பாக அபிராமிக்கு பொறுப்பான அறிவுரைகளை வழங்கினார் வனிதா. முகென் பின்னால் நீ காதல் காதல் என சுற்றுவதால் அவன் ஹீரோவாகிவிட்டான், நீ ஜீரோ ஆகிவிட்டாய் என்றார்.

புகைய தொடங்கிய தூபம்
இன்றும் முகெனுடனான காதல் குறித்து அபிராமிக்கு வேப்பிலை அடித்தார் வனிதா. வனிதா போட்ட தூபம் நன்றாக புகைய தொடங்கிவிட்டது பிக்பாஸ் வீட்டில்.

மாறிவிட்டார்
அதனை இன்று வெளியான புரமோக்கள் வெளிப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் நேற்று இருந்த அபிராமி வேறு இன்று உள்ள அபிராமி வேறு என்று கூறுகிறார் முகென்.

பாயும் அபிராமி
அதனை தொடர்ந்து இருவருக்கும் இடையில் நடக்கும் வாக்குவாதம் முற்றி அடிதடி வரை சென்றுவிட்டது. மற்ற ஹவுஸ்மேட்ஸ்கள் அடக்கும் போதும் அடங்காமல் பாய்கிறார் அபிராமி.

சேரை தூக்கும் முகென்
இதனால் கோபமடையும் முகென் சேரை தூக்கிக்கொண்டு அடிக்க பாய்கிறார். இதனால் பிக்பாஸ் வீடே அதிர்ந்து போகிறது. இத்தனைக்கும் காரணம் வனிதாதான்.

ஒரே நாளில் அதிரடி
வந்தது முதல் அபிராமி- முகென் இடையிலான காதல் குறித்தே பேசி வந்தார் வனிதா. இந்நிலையில் அபிராமியை நன்றாக மூளைச்சலவை செய்து அவரை ஒரே நாளில் முகெனுக்கு எதிராக திருப்பிவிட்டுவிட்டார் வனிதா. ஆக வந்த வேலையை சரியாக செய்கிறார் வனிதா.

சூடுபிடித்த பிக்பாஸ்
பிக்பாஸ் வீடு கலவர பூமியாக மாறியிருப்பதால் நிகழ்ச்சி மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. வனிதா வந்த பிறகு நிகழ்ச்சியின் சுவாரசியமும் கூடியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











