நீ கேப்டனா இருக்க வொர்த் இல்ல.. வனிதாவை வறுத்தெடுக்கும் நடிகை!

Recommended Video

Watch Video : Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 72

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள வனிதா விஜயகுமாரை, சாண்டியின் முன்னாள் மனைவியான காஜல் கடுமையாக சாடியுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தற்போதுதான் களைகட்டியுள்ளது. குறிப்பாக வனிதாவின் ரீஎன்ட்ரிக்கு பிறகு நிகழ்ச்சி வேற லெவலில் சென்று கொண்டிருக்கிறது.

இடையில் நாட்டுப்புற கலைகளால் நிகழ்ச்சி சற்று தொய்வடைந்ததாக தெரிந்தது. இதனை உணர்ந்த பிக்பாஸ் நேற்று ஓபன் நாமினேஷன் நடத்தி கொளுத்தி போட்டார்.

நாமினேஷன் அழுகை

நாமினேஷன் அழுகை

இந்நிலையில் நேற்றைய எபிசோடில் கவினையும் லாஸ்லியாவையும் நாமினேட் செய்த சாண்டி, தனது நண்பனையே நாமினேட் செய்துவிட்டதாக கூறி அழுதார். கவினும் அழுதார்.

எமோஷன்ஸ்

எமோஷன்ஸ்

இருவரும் அழுவது பரிதாபத்தை ஏற்படுத்த தான் என்று கூறி வனிதா குற்றம்சாட்டினார். உடனே வரிந்துகட்டிக்கொண்டு வந்த சாண்டி, எங்கள் எமோஷன்ஸ் எங்களுக்கு நீங்க பேசாதீங்க என்று கூறினார்.

அழுவது தேவையில்லாதது

அழுவது தேவையில்லாதது

ஒரு கேப்டனாக நீங்கள் அழுவது தேவையில்லாதது என்று சொல்கிறேன் என்றார் வனிதா. இப்படியே இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் நீண்டது. கவின், தர்ஷன், லாஸ்லியா என அனைவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இன்றைய புரமோ

இன்றைய புரமோ

பிக்பாஸ் வீட்டில் நேற்று பற்றிய நெருப்பு இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று வெளியான புரமோவிலும் நேற்று நடந்து பிரச்சனையின் தொடர்ச்சியே காட்டப்படுகிறது.

நாங்க என்ன முட்டாளா?

நாங்க என்ன முட்டாளா?

இதில் மைக்கை கழட்டிய வனிதா, ரூல்ஸ் குறித்து தங்களுக்கு தெளிவாக கூற வேண்டும் என பிக்பாஸிடம் கேட்கிறார். நாமினேஷனுக்கு புராபர் ரீசன் சொல்ல வேண்டும் என்றும் நாங்க என்ன முட்டாளா என்றும் கவினை சாடியபடி பிக்பாஸிடம் கேட்கிறார் வனிதா.

வனிதா திட்டி டிவிட்

வனிதா திட்டி டிவிட்

இந்த புரமோவை சாண்டியின் முன்னாள் மனைவியான காஜல் தனது டிவிட்டர் பக்கத்தில் வனிதாவை வறுத்தெடுத்துள்ளார். வனிதா பேசுவதை கிண்டல் செய்து பதிவிட்டிருக்கும் காஜல் வனிதாவை திட்டி போடும் டிவிட்டுகளையும் ரீடிவிட் செய்து வருகிறார்.

வொர்த்தே இல்ல

ஒரு கேப்டனா நான் சொல்றேன், நீங்க யாருமே எதுவுமே பண்ணக்கூடாது. கேப்டனா நான் கேட்பேன், பிக்பாஸ கூட கேள்வி கேட்பேன். தமிழ் பிக்பாஸ் ஹவுஸ்க்கு நீ கேப்டனா இருக்க வொர்த் இல்ல. இப்படியே அமைதியா அவ சொல்றது கேட்டு கைக்கட்டியே இருங்க பிக்பாஸ். இவ்வாறு பதிவிட்டிருக்கிறார் காஜல்.

யாரும்மா நீ?

மற்றொரு டிவிட்டில் கஸ்தூரி உட்காருங்க, நிக்கக்கூடாது அது தப்பு, கவின் அன்ட் சாண்டி அழாதீங்க அது ரொம்ப தப்பு. யாரும்மா நீ கன்டெஸ்டன்ட்டா இல்ல பிக்பாஸா என்று வனிதாவை விளாசி பதிவிட்டிருக்கிறார் காஜல்.

சேரனையும் சாடும் காஜல்

சேரனையும் சாடும் காஜல்

சாண்டியின் முன்னாள் மனைவியான காஜல் கவினுக்கும் சாண்டிக்கும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார். குறிப்பாக கவின் செய்யும் தவறுகளையும் நியாயப்படுத்தி கண்மூடித்தனமாக சப்போர்ட் செய்யும் காஜல் இயக்குநர் சேரனையும் அவ்வப்போது சாடி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X