Bigg Boss 3 பஜாரியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்: வனிதா

By Siva

Recommended Video

Bigg Boss 3 Tamil : Vanitha : வனிதா மீது தப்பில்ல, அந்த 'நாட்டாமை'யை தான் சொல்லணும்- வீடியோ

சென்னை: பஜாரியாக இருப்பதில் பெருமைப்படுவதாக வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் 3 வீட்டில் இருந்த வனிதா விஜயகுமாரை பார்வையாளர்கள் பஜாரி என்று விமர்சித்தனர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்து சமூக வலைதளங்களில் நடந்ததை எல்லாம் பார்த்துள்ளார் வனிதா.

பிக் பாஸ் குறித்து வனிதா பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,

பிக் பாஸ்

பிக் பாஸ்

நான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரசிகை. அதனால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அழைத்ததும் சம்மதம் தெரிவித்தேன். பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது சிலருடன் பிரச்சனை ஏற்பட்ட போதிலும் நிறைவான அனுபவமாக இது இருந்தது.

எவிக்ஷன்

எவிக்ஷன்

முதல் வாரம் அனைத்தும் நன்றாக சென்றது. ஆனால் எவிக்ஷன் என்று கூறியதும் போட்டியாளர்கள் வேறு விதமாக நடந்து கொள்ளத் துவங்கினார்கள். நான் டைட்டிலை ஜெயிக்க பிக் பாஸ் வீட்டிற்கு செல்லவில்லை, ஒரு அனுபவம் கிடைக்கும் என்பதால் தான் சென்றேன். எனக்கு ஓட்டு போடாதவர்களுக்கு நன்றி. அவர்களால் தான் நான் விரைவில் வெளியே வந்து என் வாழ்க்கையில் கவனம் செலுத்த முடிந்தது.

பார்வையாளர்கள்

பார்வையாளர்கள்

ஒரு தாயாக இருந்து கொண்டு என்னால் 106 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்க முடியாது என்பது எனக்குத் தெரியும். மக்களுக்கு என்னை ஏற்கனவே தெரியும் என்பதால் நான் நானாக இருக்க முடிவு செய்தேன். சில போட்டியாளர்கள் தியானம் செய்வது, பிரார்த்தனை செய்வது, அமைதியாக இருப்பது என்று இருந்தார்கள். அவர்கள் தங்களின் வீட்டிலும் அப்படித் தான் இருப்பார்கள் என்று பார்வையாளர்களுக்கு தெரியுமா? போட்டியாளர்களை பற்றி ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பு பார்வையாளர்கள் யோசிக்க வேண்டும்.

கெமிஸ்ட்ரி

கெமிஸ்ட்ரி

நான் 3 குழந்தைகளின் தாய், மெச்சூரான பெண். எனக்கு ஒன்றும் 18 வயது இல்லை. நான் லாஸ்லியா அல்லது ஓவியா போன்று நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. கெமிஸ்ட்ரியே இல்லாதபோதும் சிலர் காதலிக்கிறார்கள். கவின், முகென், தர்ஷன் ஆகியோருக்கு காதலிகள் இருப்பது பெண் போட்டியாளர்களுக்கு நன்கு தெரியும். இருப்பினும் காதலர்கள் போன்று சுற்றுகிறார்கள். அவர்கள் போலியாக இருப்பதை பார்த்து அறிவுரை வழங்கினேன்.

பஜாரி

பஜாரி

நான் மாமா வேலை பார்ப்பதற்காக பிக் பாஸ் வீட்டிற்கு போகவில்லை. சமூக வலைதளங்களில் பலர் என்னை பஜாரி என்கிறார்கள். அந்த வார்த்தையின் உண்மையான அர்த்தம் எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. தைரியமான பெண்ணுக்கு பெயர் தான் பஜாரி என்றால் நான் பஜாரியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன் என்கிறார் வனிதா விஜயகுமார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X