பிக்பாஸ் வீட்டில் மது கையை வெட்டிக்கொள்ள காரணம் வத்திக்குச்சிதானாமே?!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டில் மதுமிதா தனக்கு தானே தீங்கு ஏற்படுத்தும் காரியம் செய்ததற்கு வனிதா தான் காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த வனிதாவின் ஆணவத்தையும் சண்டை மூட்டும் குணத்தையும் ரசிக்காத பார்வையாளர்கள் அவரை இரண்டாவது வாரமே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றினர்.
ஆனால் டிஆர்பிக்கு ஆசைப்பட்டு வனிதாவை மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு அழைத்து வந்தனர். வனிதா பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நாள் முதலே சண்டைதான்.

கொளுத்திபோட்டு குளிர்காய்வது
அநியாயத்துக்கு கொளுத்தி போட்டு குளிர்காய்ந்தார் வனிதா. இவரை பற்றி அவரிடமும் அவரை பற்றி இவரிடமும் பேசுவதுதான் வனிதாவின் தலையாய பணியாக உள்ளது.

வனிதாதான் காரணம்
மக்கள் வெளியேற்றிய ஒருவரை விதிக்கு புறம்பாக பிக்பாஸ் மீண்டும் அழைத்து வந்ததற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் மதுமிதா கடந்த வியாழக்கிழமை கையை கத்தியால் வெட்டிக்கொண்டதற்கும் வனிதாதான் காரணம் என தெரியவந்துள்ளது.

பெரிது படுத்திய வனிதா
அதாவது வருண பகவான் கர்நாடகாவைச் சேர்ந்தவர் போல தமிழகத்திற்கு மழையை கொடுக்க மறுக்கிறார் என்று விளையாட்டாக மது கூறியதை பெரிய விஷயமாக்கிய சக ஹவுஸ்மேட்ஸ் அவரை இழிவாக விமர்சித்துள்ளனர். இந்த விஷயத்தை பெரிது படுத்தியவர் வனிதா என்று கூறப்படுகிறது.

சாப்பிட மாட்டோம்
ஷெரின் உட்பட அனைவரையும் மதுமிதாவுக்கு எதிராக சேர்த்து கேங்க் ஃபார்ம் செய்துள்ளார் வனிதா. ஒன்று இந்த வீட்டில் நாங்கள் இருக்க வேண்டும் அல்லது மதுமிதா இருக்க வேண்டும் என்று கூறிய அவர்கள், அதுவரை சாப்பிட மாட்டோம் என போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர்.

கையை வெட்டி
மேலும் தமிழ்நாட்டுக்காக உன் உயிரை கொடு என்றும் கூறியுள்ளனர். இல்லாவிட்டால் நீ நடிக்கிறாய் என்றும் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து தன்னை நிரூபிக்க தனது கையை கத்தியால் வெட்டியுள்ளார் மதுமிதா.

வத்திக்குச்சி வனிதா
மதுமிதாவுடன் யாரும் பேச கூடாது பழகக்கூடாது என கூட்டம் சேர்த்து தனிமைப்படுத்தியது வனிதாதான் என தெரியவந்துள்ளது. ஆக பிக்பாஸ் வீட்டில் நேர்மையாக விளையாடி வெற்றி வாய்ப்புடன் இருந்த மதுமிதாவை பிளான் போட்டு வெளியே அனுப்பியுள்ளார் வனிதா. வனிதாவுக்கு பிக்பாஸ் வீட்டில் உள்ள ஹவுஸ்மேட்ஸ்களும் பார்வையாளர்களும் வத்திக்குச்சி என பெயர் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











